ஆப்நகரம்

ஓமம்-மிளகு கலந்த தண்ணீரை தினமும் குடிச்சா வயிற்று கோளாறு தவிர வேறு என்னலாம் சரியாகும்...

ஓமம் மற்றும் கருப்பு மிளகு இரண்டுமே நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உங்களை சளி, இருமல், சலதோஷம் போன்ற தொல்லைகளில் இருந்து காக்கும். இந்த எளிமையான பானத்தை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.

Samayam Tamil 25 Sep 2020, 6:47 pm
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிறைய முறைகள் இருந்தாலும் நம் பாரம்பரிய மசாலா பொருட்களான ஓமம் மற்றும் கருப்பு மிளகு கொண்டு செய்யும் தண்ணீர் என்றைக்குமே நன்மை அளிக்க கூடியது. மேலும் இந்த நோயெதிர்ப்பு சக்தி பானத்தை நீங்கள் எளிதாகவே செய்து விட முடியும். இந்த பானத்தை குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன, இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
Samayam Tamil amazing health benefits of ajwain black pepper water for boost your immunity with this
ஓமம்-மிளகு கலந்த தண்ணீரை தினமும் குடிச்சா வயிற்று கோளாறு தவிர வேறு என்னலாம் சரியாகும்...


​ஓமத்தின் சிறப்புகள்

இதன் ஸ்பெஷல் என்னவென்றால் ஓமத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. மேலும் நம் செரிமானத்திற்கும் இவை உதவுகின்றன. கருப்பு மிளகிலும் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நம் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மழைக்காலம் வேற வரும் சமயங்களில் தொற்று நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள இந்த இரண்டு பொருட்களும் நமக்கு உதவியாக இருக்கும். ஆரோக்கியமான, சீரான உணவு மற்றும் சில நல்ல வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கொண்டு நம் பருவகால நோய்களை நம்மால் எதிர்த்து போராட முடியும்.

எனவே உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த ஓமம் மற்றும் கருப்பு மிளகு அடங்கிய பானம் எந்த வகையில் உங்களுக்கு பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

​இந்த பானம் எப்படி வேலை செய்கிறது

ஓமம் மற்றும் கருப்பு மிளகு இரண்டுமே ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு குளிர் மற்றும் இருமலுடன் கூடிய அறிகுறிகளை எளிதாக்க உதவுகிறது. இது தொண்டை புண் குணமடைய உதவுகிறது. மூக்குச் சளியை வெளியேற்றுகிறது. ஓமம் சேர்க்கும் போது அஜீரணம், வாயு மற்றும் வயிற்று வீக்கத்திற்கான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. இஞ்சியின் குணப்படுத்தும் பண்புகளும் இதில் உள்ளன.

எனவே இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தயாரிக்கும் பானம் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எப்படி வயிறை சுத்தப்படுத்தலாம்?...

​ஓமம் மற்றும் கருப்பு மிளகு அடங்கிய தண்ணீர்

தேவையான பொருட்கள்

  • 1/2 அங்குல இஞ்சி வேர்
  • 1 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள்
  • 1 தேக்கரண்டி ஓம விதைகள்

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பு மிளகுத்தூள், ஓமம் மற்றும் இஞ்சி வேர் போன்றவற்றை சேர்த்து காய்ச்சுங்கள். பிறகு அதை கொதிக்க வையுங்கள்.

2-3 நிமிடங்கள் நன்றாக கலக்குங்கள்

பிறகு அதை ஒரு கோப்பையில் வடிகட்டி சிறிது தேன் சேர்த்து தேநீராக பருகுங்கள்.

இந்த மூலிகை பானம் உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும். இதை எடுக் கொள்ளும் போது உங்க மருந்துகளை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் உங்க உணவுகளை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு

உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்துங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்