ஆப்நகரம்

விந்துப்பையை உறுதியாக்கி விந்தணு உற்பத்தி அதிகரிக்கணுமா?... ஆயுர்வேதப்படி தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க

விந்தணுக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும், உடல் பலவீனமாக இருக்கிறது என்று யோசிப்பவர்கள் விந்துப்பை பற்றி யோசிப்பதே இல்லை. விந்துப்பை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதனால் விந்துப்பையை ஆரோக்கியமாக்கி அணுக்கள் உற்பத்தியை எப்படி அதிகரிக்கச் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 13 Nov 2019, 12:18 pm
விந்தணுக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும், உடல் பலவீனமாக இருக்கிறது என்று யோசிப்பவர்கள் விந்துப்பை பற்றி யோசிப்பதே இல்லை. விந்துப்பை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதனால் விந்துப்பையை ஆரோக்கியமாக்கி அணுக்கள் உற்பத்தியை எப்படி அதிகரிக்கச் செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil ayurveda for prostate simple tips that can safeguard you in tamil
விந்துப்பையை உறுதியாக்கி விந்தணு உற்பத்தி அதிகரிக்கணுமா?... ஆயுர்வேதப்படி தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க


​விதைப்பை ஆரோக்கியம்

timவெகுசில ஆண்களே தங்களுடைய விந்துப்பையின் ஆரோக்கியம் குறித்து எண்ணுகின்றனர். பால் போன்ற ஒரு மெலிதான திரவம் தான் நமது விந்தணுக்களைப் பாதுகாக்கிறது. அந்த திரவம் உருவாகக் காரணமாக இருப்பது விந்துபையாகும். நாம் அதிகமாக விந்தணுவைச் செலவழிப்பதால், உடலில் சில பிரச்சனைகள் உண்டாகும். முக்கியமாக விதைப்பையில் மிகப்பெரிய பிரச்சனைகள் உண்டாகும். ஆற்றல் அதிகமாக செலவாவதால், உடலில் உள்ள திரவத்தன்மை குறையும். மேலும் விந்துபை வீக்கம், விந்துப்பை புற்றுநோய் போன்ற நோய்கள் வரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

​சிறுநீறும் தண்ணீரும்

நடுத்தர வயது ஆண்களுக்கு விதைப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே விதைப்பையின் பாதுகாப்பை உறுதி செய்வது நமக்கு மிகவும் அவசியம். விந்துப்பை பாதுகாப்பை உறுதி செய்யக் கீழ்க்கண்ட சில ஆயுர்வேத முறைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்:

உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது சிறுநீர் மஞ்சள் போன்ற நிறத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிறுநீர் தண்ணீர் போன்று இருந்தால் மட்டுமே உடலில் எந்த கோளாறும் இல்லை என்று அர்த்தம். தண்ணீர் அருந்தாமல் உடல் சூடு ஏறி அதிக நேரம் கழித்து சிறுநீர் கழிப்பதால் சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருக்கும். அப்படி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

​தவிர்ப்பதும் சேர்ப்பதும்

tiமது அருந்துவதையும் காபி அதிகமாக அருந்துவதையும் குறைத்துக் கொள்வது ரத்த ஓட்டத்திற்கு மட்டுமில்லாமல் விதைப்பைக்கும் நல்லது.

தினமும் பாதாம் மற்றும் வால்நட் ஆகியவை நம் உணவில் அல்லது மாலை நேர சிற்றுணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சுவைமிகுந்த பழங்களை சாறாக அரைத்துக் குடித்து வந்தால் நமது எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் ரத்த ஓட்டம் மற்றும் ரத்த தசைகள் சீராக இயங்குவதற்குப் பெரிதும் உதவுகின்றது. மேலும் விதைப்பையின் ஆரோக்கியத்திற்குப் பழச்சாறுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

​ஆயுர்வேத மசாஜ்

தினமும் ஆயுர்வேதிக் மசாஜ் செய்து வந்தால் நமது விதைப்புக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது அதிக நேரம் உங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் சிறிது நேரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ஆயுர்வேதிக் மசாஜ் செய்து வந்தால், உடலிலுள்ள தசைகள், நரம்புகள், ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது. மேலும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

​வஜ்ரோலி முத்திரை

வஜ்ரோலி முத்திரை எனும் யோகா ரத்த ஓட்டங்களைச் சீர்செய்து நமது உடல் உறுப்புகளைச் சீராக இயக்க உதவுகிறது. முதலில் நேராக உட்கார்ந்து கொள்ளவும். timமெதுவாக இரு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் நமது உடல் லேசாக பின்னோக்கியே இருக்க வேண்டும். கைகள் தரையில் படாமல் பார்த்துக் கொள்ளவும். இந்த முறையில் 10 நொடிகள் இருக்க வேண்டும். இதே போல ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் உடல் உறுப்புகள் மற்றும் விதைப்பைக்கு மிகவும் நல்லது.

​ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் கொண்டு நம் சிறுநீரகத்திற்குக் கீழே விதைப்பைக்குச் சிறிது கீழே தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால் விதைப்பைக்கு மிகவும் நல்லது. ஆமணக்கு எண்ணெய் என்று சொன்னதும் அது என்னவென்று தெரியாமல் விட்டுவிடாதீர்கள். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் விளக்கெண்ணெய் தான் இந்த ஆமணக்கு எண்ணெய். ஆமணக்கு விதைகளில் இருந்து பெறப்படுவதால் இந்த பெயர்.

​அதிகமாகத் தண்ணீர் அருந்துதல்

உடல் எப்பொழுதும் முடிந்தவரைச் சூட்டுத் தன்மை குறைந்து காணப்படவேண்டும். அதற்கு உடலில் உள்ள நீர் இருப்பு அவசியம். தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடம் சிறுநீர் செல்வதும் மிகவும் அவசியம். சிறுநீர் கழிக்கும் போது தான் நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அதிகம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது மேலும் நம் சிறுநீரகம் சுத்தமாகவும் செய்யும். மேலும் ஹெர்பல் டீ பழச்சாறுகள் போன்றவற்றை உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்வது உங்கள் ஜீரண தன்மையை அதிகரிக்கும்.

​இயற்கை உபாதைகள்

நம் வேலைப்பளு காரணமாகச் சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப் போடுகிறோம். அடிக்கடி சிறுநீர் வரும் என்பதால் சிலர் தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இது நம் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் தவறு. இது பல உடல் உபாதைகளுக்கு ஒரு தொடக்கமாக அமையும். எனவே சிறுநீர் கழிப்பதை உடனுக்குடன் செய்து விட வேண்டும்.

மேலும் நம் உணவில் முக்கியமாக சில மசாலா பொருட்களைச் சேர்ப்பது அவசியம். நம் இந்தியப் பாரம்பரிய மசாலாப் பொருட்களானது. நம் உடல்நலத்திற்கும் மிகவும் நன்மை விளைவிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் அவைகள் நம் விந்து பையைப் பாதுகாக்கிறது.

​மஞ்சள்

மஞ்சளின் குணங்கள் நான் சொல்லி உங்களுக்குத் தெரியப் போவதில்லை மஞ்சள் இயற்கையான கிருமிநாசினி பாக்டீரியா போன்ற கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தது. அது நம் ஈரல் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழிக்கும் சக்தி உள்ளது.பொதுவாகவே நாம் சமைக்கும் பெரும்பாலான குழம்புவகைகள் மஞ்சள் கலந்து இருப்போம். அது மட்டுமில்லாமல் உடலின் சில பகுதிகளில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது.

​வெந்தயம்

வெந்தயம் விதைப்பையின் வீக்கத்தைக் குறைக்கும் மேலும் அதிலுள்ள சில ஆரோக்கியமற்ற விளைவுகளையும் சரி செய்யும் விஷயங்களை நம் அன்றாட உணவில் முடிந்தவரைச் சேர்த்துச் சமைத்தால் நம் விதைப்பைக்கு மட்டுமல்லாமல் நம் உடல்நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.

​சீரகம் பெருஞ்சீரகம் மற்றும் புதினா

சீரகம், பெருஞ்சீரகம் புதினா போன்றவை நம் சிறுநீரகத்திற்கு நன்மை விளைவிக்கும். இவற்றையும் நம் அன்றாட உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் விதைப்பைக்கு மிகவும் நன்மை. சீரகம் என்பது நம்முடைய அகம் என்னும் உடலின் உள்ளுறுப்புகளை சீராக இயங்கச் செய்யும். ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் அதற்குப் பெயர் சீரகம். புதினா பசியைத் தூண்டி, ஜீரண சக்தியை அதிகரித்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்