ஆப்நகரம்

Herbs for Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கான மூலிகைகள் என்னென்ன? அளவு ? எப்படி சாப்பிடுவது?


உடலில் இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் போது உடல் பல சிக்கல்களை எதிர்கொள்ளும். உணவு முறையில் மூலிகை அதற்கு உதவும். என்ன மூலிகை எப்படி எடுப்பது என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 20 Dec 2021, 12:46 pm
Samayam Tamil common indian herbs for control blood sugar in tamil
Herbs for Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கான மூலிகைகள் என்னென்ன? அளவு ? எப்படி சாப்பிடுவது?

நீரிழிவு நோய் ஆபத்தான நோய். சமீப காலமாக சர்க்கரை நோயின் தாக்கம் இளவயதினரிடம் அதிகமாகவே பார்க்கப்படுகிறது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தமே இதற்கு காரணம்.

இரத்த சர்க்கரை அளவை கவனித்து கொள்வதன் மூலம் மட்டுமே இதை சரிசெய்ய முடியும். மூலிகைகள் பலவும் விஞ்ஞான ஆராய்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னென்ன மூலிகை எப்படி உதவும் என்பதை இங்கு பார்க்கலாம்.

​சிறு குறிஞ்சான்

இது சர்க்கரை அழிப்பான் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயை அழிக்கும் பண்புகள் இதில் உண்டு. இதில் கிளைகோசைடுகள் நிறைந்துள்ளன. இவை முக்கியமாக இனிப்பு பொருள்களுக்கான உங்கள் சுவை மொட்டுகளின் உணர்திறனை குறைக்கின்றன. இதன் மூலம் ப்ரீடியாபெட்டிக்ஸில் சர்க்கரை பசியை குறைக்கிறது.


டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இந்த மூலிகையின் உதவியுடன் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இது உயிரணுக்களில் என்சைம் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது உடலில் அதிகப்படியான குளுக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. இன்சுலின் உற்பத்தியை சாதகமாக பாதிக்கும்.


பித்த நோய்களை காணாமல் போக்கும் பாட்டி கால சூரண பொடி! தயாரிப்பும், பயன்படுத்தும் முறையும்!


சிறுகுறிஞ்சானை தூள் வடிவில் எடுக்கலாம். அதன் இலைகளுடன் தேநீர் தயாரிக்கலாம். அல்லது சிறுகுறிஞ்சான் மாத்திரைகளை சாப்பிடலாம். இந்த இலைகளை கொதிக்கும் நீரில் ஊறவைத்து தேநீராக்கி குடிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் தூள் சேர்த்து அதை குடிக்கலம.


மாத்திரைகள் - 100 மி.கிராம்

சிறு குறிஞ்சான் - அரை முதல் 1 டீஸ்பூன்

நறுக்கிய

இலைகள் - 1 டீஸ்பூன்

காலை உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு இதை எடுத்துகொள்ள வேண்டும்.

​ஜின்செங்

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் எதிர்த்து போராடும் மூலிகையாக அறியப்படுகிறது. இது நீரிழிவு எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளன.


ஜின்செங் எடுக்கும் போது கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதலை குறைக்கிறது. மேலும் செல்கள் அதிக குளுக்கோஸ் எடுத்து பயன்படுத்துகின்றன. மேலும் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. இவை அனைத்தும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படக்கூடிய ஆரோக்கியமான உடலுக்கு பங்களிக்கின்றன இது இரத்த குளுக்கோஸ் அளவை 15 முதல் 20% வரை குறைக்க உதவும் என்று டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.


ஜின்செங் வேர் அல்லது தூள் எடுத்துகொள்ளலாம். வேரை நறுக்கி வேகவைத்த தண்ணீரில் சேர்க்கவும். அதை 5 அல்லது 6 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு குடிக்கலம. ஜின்செங்க் பொடியாக்கியும் குடிக்கலாம்.


ஜின்செங் - 1 டீஸ்பூன்

வேர் - 2-3 கிராம் அல்லது 7- 8 துண்டுகள்

இதை அதிகாலையிலும் இரவு உணவுக்கு முன்பும் ஜின்செங் எடுக்கலாம்.

​சேஜ்

சர்க்கரை நோய்க்கான மூலிகைகளில் இதுவும் முக்கியமானது. வெறும் வயிற்றில் சேஜ் எடுத்துகொள்வது இரத்த குளுக்கோஸ் அளவை கணிசமாக குறைக்க உதவும். இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் அதை நிர்வகிக்கவும் உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டையும் சாதகமாக பாதிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.


சேஜ் இலைகளை நீங்கள் மெல்லலாம். அல்லது உணவில் சேர்க்கலாம். சேஜ் தேநீர் தயாரிக்க 1-2 இலைகளை கொதிக்கும் நீரில் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து குடிக்கவும்.

இலைகள் - 4-6

தேநீர் காய்ந்த இலைகள் - கால் டீஸ்பூன் அளவு

தேநீர் - 2 - 3 கப் வரை


காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது இலைகளை அப்படியே மென்று சாப்பிடுங்கள். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு சேஜ் இலைகளை சேர்க்கலாம்.

​ஆர்கனோ

உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கிளைகோசைடுகளை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆர்கனோவின் நீர் சாறுகள் விட்ரோவில் கிளைகோசிடேஸ் தடுப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. சாற்றில் இருந்து பிரிக்கப்பட்ட ரோஸ்மரினிக் அமிலம் கணைய அமிலேஸ் செயல்பாட்டை அதிகரிப்பதாக காட்டப்பட்டுள்ளது.


நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உயிரணுக்களில் குளுக்கோஸை திரட்டுகிறது. இதனால் கார்போஹைட்ரேட் உருவாக்கம் விகிதத்தை குறைக்கிறது.


ஆர்கனோ உணவு வகைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உணவில் புதிய அல்லது உலர்ந்த ஆர்கனோவை பயன்படுத்தலாம். இலைகளை மென்று சாப்பிடலாம். ஆர்கனோ தேநீர் தயாரிக்கலாம். நீர்த்த ஆர்கனோ எண்ணெய் அல்லது மருந்துகளை உட்கொள்ளலாம்.


constipation : மலம் வறண்டு கடினமா இருக்கா? மலச்சிக்கலுக்கு மருத்துவர் சொல்லும் எளிய குறிப்பு ! எல்லா வயதினருக்கும்!


ஒருகப் கொதிக்க வைத்த நீரில் ஒரு டீஸ்பூன் உலர்ந்த புதிய ஆர்கனோவை சேர்த்து தேநீராக தயாரிக்கவும். பிறகு 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

ஆர்கனோ மாத்திரைகள் - 600 மி.கிராம் அளவு

ஆர்கனோ எண்ணெய் - 4- 6 சொட்டுகள்

உலர்ந்த ஆர்கனோ இலைகள் தூள் - 1 டீஸ்பூன்

புதிய ஆர்கனோ இலைகள் - 4-5


நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ஆர்கனோவை உட்கொள்ளலாம். ஆர்கனோ டீயை காலையில் குடிப்பது நல்லது. புதிய இலைகளை மென்று சாப்பிடலாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு உலர்ந்த ஆர்கனோவை பயன்படுத்தவும்.

கிராம்பு

சர்க்கரை நோய்க்கான மூலிகையில் கிராம்புக்கும் முக்கிய இடம் உண்டு. நறுமணமிக்க இது மசாலாவில் மட்டும் அல்லாமல் அழற்சி எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்ற மற்றும் செரிமான பண்புகளை கொண்டுள்ளது. கிராம்பு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இது கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.


கிராம்பை பச்சையாக மென்று சாப்பிடலாம். உணவு தயாரிப்புகளில் முழுமையாகவோ அல்லது தூள் கிராம்புகளை பயன்படுத்தலாம். கிராம்பு மருந்துகளை எடுக்கலாம்.

கிராம்பு மெல்லுவதற்கு - 2

உணவு தயாரிப்பில் - 5-6

கிராம்பு தூள் - அரை டீஸ்பூன்

கிராம்பு மாத்திரை - நாள் ஒன்றுக்கு 500 மி.கிராம்


3-4 கிராம்புகளை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடிக்கவும். மதிய உணவுக்கு உணவில் முழு அல்லது தூள் பயன்படுத்தலாம். இரவு உணவுக்கு முன் ஒரு வாரத்தில் 2-3 கிராம்பு மாத்திரைகள் எடுக்கலாம்.

​ஷிலாஜித்

இயற்கையாக இமயமலை பகுதியில் இருக்கும் தாதுப்பொருள் ஆகும். இது மலைகளில் இருந்து வெளியேறும் தார் போன்ற கனிம எண்ணெய். இதன் நிறம் வெளிர் பழுப்பு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கலாம். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. தசை சக்தியை மேம்படுத்துகிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. கருவுறுதலை ஊக்குவிக்கிறது. ஷிலாஜித் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.


ஷிலாஜித் மருந்தின் அளவை பால் , தேன் அல்லது நல்லெண்ணெயுடன் உட்கொள்ளலாம்.

ஹிலாஜித் மாத்திரை - நாள் ஒன்றுக்கு 10- 300 மில்லிகிராம்

காலையிலும் மதிய உணவு . இரவு உணவுக்கு முன்பும் எடுத்துகொள்ளலாம்.

​கற்றாழை

கற்றாழை வீக்கத்துக்கு சிகிச்சையளிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் முகப்பருவை தடுக்கவும் முடி உதிர்தலை குறைக்கவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வுகள் கற்றாழை ஜெல் - கொழுப்பு குறைக்கும் மற்றும் இரத்த சர்க்கரை குறைக்கும் பண்புகள் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


கற்றாழை சாறு கடைகளில் கிடைக்கும். பாட்டிலில் கொடுத்திருக்கும் பரிந்துரையின் படி அவற்றை எடுத்துகொள்ளலாம். வீட்டிலும் கற்றாழை சாறு தயாரிக்கலாம். கற்றாழையுடன் ஜெல்லை பிரித்து எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். கற்றாழை மாத்திரையாகவும் எடுக்கலாம்.


கற்றாழை மாத்திரை - நாள் ஒன்றுக்கு 300 மில்லி கிராம்

கற்றாழை சாறு - 100 கிராம்

மதிய உணவுக்கு முன்பு ஒரு மாத்திரை சாப்பிடலாம்.

வேப்பிலை

சர்க்கரை நோய்க்கு வேப்பிலையும் உதவும். வேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்டவை. பிரகாசமானவை. இதன் பட்டை மற்றும் பழம் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதம் வேம்புக்கு நீரிழிவு பூஞ்சை எதிர்ப்பு , பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளன என்று ஆயுர்வேதம் கூறுகிறது. சில ஆய்வுகள் இரத்த குளுக்கோஸ் குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.


cold soup : மூக்கடைப்போடு சளி வெளியே வரலன்னா இரண்டு வேளை இந்த சூப் குடிங்க! சளி மொத்தமா வெளியேறும்!


வேப்ப இலைகளை நன்றாக கழுவி மென்று சாப்பிடலாம். வேப்பம்பூ மாத்திரைகளை எடுக்கலாம்.

வேப்ப இலைகள் - 4-5

வேப்பம்பூ விழுது - 1 டீஸ்பூன்

வேம்பு மாத்திரை - பாட்டிலில் அறிவுறுத்தலின் படி


காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் நீர்த்த வேப்பம்பூவை எடுத்துகொள்ள வேண்டும். காலையில் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதும் பலன் தரும். காலை உணவுக்கு முன் வேப்பிலை மாத்திரை எடுத்துகொள்ளவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்