ஆப்நகரம்

சமைக்கவும் வீட்டு வைத்தியத்துக்கும் உதவும் உணவு பொருள்களும், அதன் பலன்களும்!

உடலில் உண்டாகும் சிறிய பிரச்சனைகளை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து விடலாம். உடலில் உண்டாகும் சிறு பிரச்சனைகளும், அதற்கு உதவும் வீட்டு வைத்தியமும் என்ன என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 1 Feb 2022, 6:53 pm

ஹைலைட்ஸ்:

  • மஞ்சள் உள்ளுக்கு ஆரோக்கிய நன்மைகள் அளிப்பது போன்று வெளிப்புற பயன்பாட்டுக்கும் நன்மை அளிக்கும்.
  • இரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்க விரும்புபவர்களுக்கு இலவங்கப்பட்டை உதவும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil cooking ingredients with health benefits in tamil
சமைக்கவும் வீட்டு வைத்தியத்துக்கும் உதவும் உணவு பொருள்களும், அதன் பலன்களும்!

பொதுவான உடல்நல குறிப்புகள் குறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணர் G.K.தாராஜெயஸ்ரீ BAMS தரும் குறிப்புகளை பார்க்கலாம்.
தேன்

இது பெண்களுக்கும், அரிதாக குழந்தைகளுக்கும் பொதுவானவை. சமைக்கும் போது அடிக்கடி தீக்காயங்கள் உண்டாவதுண்டு. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் சுத்தமான தேனை தடவினால் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கலாம். இது சேதமடைந்த சருமத்தின் மீளுருவாக்கம் செய்ய உதவும்.

tea recipe : நன்னாரி, வல்லாரை, கொள்ளு, வெந்தயம் - இதுல டீ போடுங்க, ரெசிபியும் நன்மையும் தெரிஞ்சுக்கங்க!

இஞ்சி

வயிற்று பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் இஞ்சி சிறந்த தீர்வாக இருக்கும். காலை நோய், குமட்டல் போன்ற நிலையில் இருக்கும் அனைவரும் இஞ்சி சேர்க்கலாம். இஞ்சி தேநீர் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.


மஞ்சள்

இது இளவயதில் இருப்பவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனை. இவர்கள் இயற்கையாக சருமத்தை பராமரிக்க விரும்பினால் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பேஸ்ட்டை பயன்படுத்தலாம். இது சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் மாற்றும்.

வெட்டுகாயங்கள்

சிறு சிறு வெட்டுக்காயங்கள் இருந்தாலும் பதறாமல் சமையலறையில் இருக்கும் மஞ்சளை பயன்படுத்தலாம். மஞ்சள் சிறந்த வீட்டு மருந்து, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் மஞ்சளில் உள்ள கிருமி நாசினிகள் காயத்தை விரைவில் ஆற்றும். மஞ்சள் தீக்காயங்களுக்கு கூட பயனளிக்கும்.

மூட்டுவலி பிரச்சனை இருந்தால் மஞ்சள் பயன்படுத்தலாம். மஞ்சள் உள்ளுக்கு ஆரோக்கிய நன்மைகள் அளிப்பது போன்று வெளிப்புற பயன்பாட்டுக்கும் நன்மை அளிக்கும். இதை மூட்டுகளின் மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
மஞ்சளின் ஆக்ஸிஜனேற்ற பண்பு பல்வேறு வகைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றூநோய், லுகேமியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் அனைத்துக்கும் மஞ்சள் நல்ல தீர்வாக இருக்கும்.

salt uses : உப்பு வெச்சு 10 விதமான வீட்டு வைத்தியம் செய்யலாம், எதுக்கு எப்படி பயன்படுத்தணும்!

இஞ்சி

மாதவிடாய் சுழற்சி எதிர்கொள்ளும் பெண்கள் மாதவிடாய் பிடிப்புகளை இஞ்சி கொண்டு குணப்படுத்தலாம். இது வயிற்றுப்போக்கு மற்றும் மாதவிடாய் பிடிப்புகளுக்கும் சிகிச்சையளிக்கும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை உட்கொள்வது டைப்2 நீரிழிவை கட்டுப்படுத்தும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. நீரிழிவு இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்தும் மற்றும் இன்சுலின் அளவை தூண்டும். நீரிழிவு மட்டும் அல்லாமல் உடலில் இதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். இரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்க விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எடை குறைய நினைப்பவர்களுக்கும் இலவங்கப்பட்டை உதவும்.

பூண்டு

பூச்சி கடித்த பிறகு உண்டாகும் வலி தீவிரம் குறைய பூண்டை நசுக்கி சாறு எடுக்கவும். இந்த சாறு பல் வலி மற்றும் காது வலியை குறைக்கவும் செய்யும்.

எலுமிச்சை

அஜீரணம் மலச்சிக்கல்ம் மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பயனுள்ளதாக இருக்கும். வயிற்று தொற்றுகளுக்கு இவை உதவும். எலுமிச்சையில் உள்ள அழற்சி எதிர்ப்பு குணம் சிகிச்சைக்கு நன்மை பயக்கும். கீல்வாதம் மற்றும் வாத நோய் திறம்பட சரி செய்யும். எலுமிச்சை எடையை குறைக்கவும் கட்டுபடுத்தவும் உதவும்.

இரத்த அழுத்தம், சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் இவை பயனுள்ளதாக இருக்கும். சருமம் மற்றும் முடிக்கும் இவை ஆரோக்கியம் அளிக்கிறது.


வெங்காயம்

ஆஸ்துமா, நிமோனியா,காய்ச்சல் நிலைகளில் வெங்காயம் உதவும். டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினசரி வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயத்தில் இருக்கும் குரோமியம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும். இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும்.

ஏலக்காய்

வாய்ப்புண்கள் வாய் துர்நாற்றம் மற்றும் வாய்வழி பிரச்சனைகளை ஏலக்காய் உதவியுடன் குணப்படுத்தலாஅம். இது அஜீரணம் மற்றும் வயிற்று நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்