ஆப்நகரம்

bloating remedies : சாப்பிட்டு முடிச்சதும் வயிறு உப்பசம் வருதா? இத மட்டும் ஒரு கப் குடிங்க... வாயு வெளியேறிடும்...

வாயுத்தொல்லை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் வயிறு உப்பசம் ஏற்படும் என்பது தெரியும். ஆனால் சிலருக்கு சாப்பிட்டு முடித்ததுமே வயிறு உப்பியது போன்று இருக்கும்.. இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு அருமையான தீர்வாக ஒரு பானம் இருக்கிறது. அதை வீட்டிலுள்ள சில பொருள்களைக் கொண்டு எப்படி தயாரித்து குடிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க...

Authored byமணிமேகலை | Samayam Tamil 17 May 2023, 4:43 pm
சாப்பிட்டு முடித்ததுமே வயிறு உப்பசம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக சாப்பிடும் உணவு, சாப்பிடும் முறை, செரிமான மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் என பல காரணங்கள் உண்டு. இந்த வயிறு உப்பசம் மற்றும் வயிறு வீக்கம் ஆகியவை இது எதனால் ஏற்படுகிறது, இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
Samayam Tamil drink for reducing stomach bloating immediate after taking food
bloating remedies : சாப்பிட்டு முடிச்சதும் வயிறு உப்பசம் வருதா? இத மட்டும் ஒரு கப் குடிங்க... வாயு வெளியேறிடும்...


​சொரியாசிஸ் பிரச்சினைக்கு இயற்கை வைத்தியம்

​சாப்பிட்டதும் வயிறு உப்பசம் ஏற்படுவது ஏன்?

சாப்பிட்டு முடித்ததும் உடனேயே வயிறு வீக்கம் மற்றும் உப்பசம் ஏற்படுகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் காரணங்கள் மாறுபடும்.


அதிகமாக வயிறு முட்ட சாப்பிடுவது.
வேகவேகமாக சாப்பிடுவது,
சரியாக மெல்லாமல் அப்படியே விழுங்குவது,
செரிமான செயல்பாட்டின்போது உணவு உடைக்கப்படும் போது வெளியேறும் வாயு வெளியே போகாமல் வயிற்றிலேயே தங்கிவிடுவது போன்ற காரணங்களால் வயிறு உப்பசம் உண்டாகிறது.

world hypertension day 2023 : ஹைபர்டென்ஷனுக்கு DASH டயட்டுல இவ்ளோ நல்லது இருக்காம்... என்னலாம் சாப்பிடலாம்...

வயிறு உப்பசம் வராமல் தடுக்க

வாயுத்தொல்லையை உண்டாக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் நிறைய உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் அளவோடு பிரித்து பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்காதீர்கள். இவற்றை பின்பற்றினாலே ஓரளவு வயிறு உப்பசத்தைத் தவிர்க்க முடியும்.

​வயிறு வீக்கம் குறைய பானம்

தேவையான பொருள்கள்

இஞ்சி - ஒரு இன்ச் அளவு
புதினா - 10 இலைகள்
வெந்தயம் - அரை ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி அளவு

செய்யும் முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இஞ்சியை தோல் சீவி கழுவிவிட்டு தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதோடு வெந்தயம் மற்றும் புதினா இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள்.

நன்கு ஆறியதும் அதில் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

இதை குடித்து அரை மணி நேரத்திலேயே ஓரளவுக்கு நல்ல தீர்வு உண்டாகும்.


எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்