ஆப்நகரம்

பாலியல் வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்க உதவும் மூலிகை இது, எப்படி எடுக்கலாம்!


மூலிகைகள் என்பது மலையை தாண்டி தேடி ஓட வேண்டியதில்லை. எளிதாகவே கிடைக்கின்றன. அப்படியான மூலிகைகள் அதிக நன்மைகள் தரக்கூடியவை.

Samayam Tamil 19 Oct 2021, 1:46 pm
Samayam Tamil health benefits of gokshura powder in tamil
பாலியல் வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்க உதவும் மூலிகை இது, எப்படி எடுக்கலாம்!

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் எல்லாமே பாரம்பரியமானவை. கோக்‌ஷூரா (நெருஞ்சி ) என்பது சமஸ்கிருத பெயர். இது சக்திவாய்ந்த மூலிகை. பல்வேறு சிகிச்சைகளில் இவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகைகளின் பழங்கள் மற்றும் வேர்கள் இரண்டுமே இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. கோக்‌ஷூரா டானிக் என்று அழைக்கப்படும் இது ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து ஆகும். இதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


​சிறுநீர் தொடர்பான பிரச்சனை மற்றும் வலி

சிறுநீர் பாதை கோளாறுகளை பராமரிக்க நெருஞ்சி சிறந்த இயற்கை வைத்தியம் ஆகும். இது சிறுநீரின் ஓட்டத்தை எளிதாக்க உதவுகிறது. நெருஞ்சி சிறுநீர் பாதை சவ்வுகளை ஆற்றும் மற்றும் இரத்தப்போக்கை தடுக்கும்.


சர்க்கரை நோயாளி கண்டிப்பா சேர்க்க வேண்டிய ஐந்து மூலிகை! பலன் தர எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கங்க!


இது புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்ட ஒரு மூலிகையாகும். இது பாஸ்பேட்டூரியா மற்றும் கோனோரியா போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. உடலில் இருந்து கழிவுகளை அகற்றுவதன் மூலம் உடலில் சிறுநீர்ப்பாதை மற்றும் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.

​​​பித்தப்பை பிரச்சனை சரி செய்கிறது

நெருஞ்சி பட்டையில் ஆஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் உள்ளன. இது ஒரு ஆந்தெல்மிண்டிக் மற்றும் டானிக்காக செயல்படுகிறது. பித்தப்பை கற்கள் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தவும் இந்த நெருஞ்சி உதவுகிறது.

​. சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்

நெருஞ்சி என்னும் மூலிகையை கொண்டு சிறுநீரக கற்களுக்கு தீர்வு காண முடியும். இது சிறுநீரகங்களை வலுப்படுத்த உதவுகிறது.


சிறுநீரக கற்கள், சிறுநீரக பெருங்குடல் மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுகளை குணப்படுத்த நெருஞ்சி உதவும். இது சிறுநீர் பாதையில் திரவ ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சிறுநீர் பாதை சுவர்களை துடைத்து அதில் உள்ள நச்சை வெளியேற்றும் வேலையை செய்கிறது. சிறுநீர் பாதையின் செல்கள் ஊட்டமடைந்து பலப்படுத்தும்.


ஒரு டீஸ்பூன் நெருஞ்சி பொடியுடன் தேன் கலக்கவும். பிறகு இதை ஒரு கப் ஆட்டுப்பாலில் சேர்த்து பருகவும். தொடர்ந்து ஏழு நாட்கள் எடுத்து வந்தால் நேர்மறையான முடிவை பார்க்கலாம்.


நெருஞ்சி சாறு சிறுநீர் அடங்காமை , சிறுநீர் பாதை தொற்று போன்றவற்றுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது.

​சருமத்துக்கு நன்மை செய்யும்

சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க நெருஞ்சி உதவும். சருமத்தில் முகப்பரு மற்றும் பல்வேறு தோல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெருஞ்சி பயன்பாடு சருமத்தில் உண்டாகும் அரிப்பு, வீக்கம், எரிச்சல் மற்றும் வெடிப்புகளை கட்டுப்படுத்த உதவும்.

​பாலியல் வாழ்க்கை

பாலியல் வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்தவர்கள் நெருஞ்சியை கொண்டு தீர்வு காணமுடியும். இது கருவுறாமை பிரச்சனைகளை இயற்கை வழியில் நடத்துகிறது. குறைந்த டெஸ்டோஸ்ட்ரான் அளவை மீட்டெடுக்க நெருஞ்சி உதவுகிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.


ஆவாரம்பூ: எத்தனை நோய்க்கு அருமருந்தா இருக்குன்னு பாருங்க? எல்லோருமே பயன்படுத்தலாம்!


நெருஞ்சி வேலை உடலின் இயற்கையான ஹார்மோனை தூண்டுவதை உள்ளடக்கியது. இதன் மூலம் டெஸ்டோஸ்ட்ரான் அளவை உற்பத்தி செய்யவும் அதை பராமரிக்கவும் உதவுகிறது.


ஆண்களில் விறைப்புத்தன்மை குறைபாடு கொண்டிருந்தால் ஆண்குறி திசுக்களை தூண்டி விறைப்பை அதிகரிக்கவும், விறைப்பு செயலிழப்பில் சாதகமானது.

​இதயத்துக்கு செய்யும் நன்மைகள்

உடலில் இருக்கும் கொழுப்பு அளவை குறைப்பதில் நெருஞ்சி நன்மை பயக்கிறது. இது மாரடைப்பு அபாயத்தை குறைக்க உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அளவு இரண்டையும் குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.


ஆஞ்சினா போன்ற இதய சிக்கல்களிலும் இவை சிறப்பாக செயல்படுகிறது. நெருஞ்சியில் இருக்கும் ஆண்டிபயாடிக் மற்றும் ஆன் டி டூமர் கல்லீரல் புற்றுநோய் எதிர்த்து போராட உதவுகிறது.

​பிசிஓஎஸ்

நெருஞ்சி நீரிழிவு சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று இன்சுலின் எதிர்ப்புதிறன் பாதிப்பை உண்டாக்கும் பிசிஓஎஸ் பெண்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது. பெண்களின் தசைகளை வலுப்படுத்துகிறது. கருவுறாமைக்கு காரணமான பிசிஓஎஸ் பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் இது மருந்தாக உதவுகிறது.

​இயற்கை டையூரிடிக்

உடலில் நீர்தேக்கத்துக்கு எதிராக போராடவும் இந்த நெருஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான டையூரிடிக் போன்று நெருஞ்சி உடலில் இருக்கும் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற செய்கிறது, மற்றும் உடலில் இருக்கும் நீர்க்கட்டியின் அளவை குறைக்கிறது.


சர்க்கரை நோய் கட்டுக்குள் வர வெண்டைக்காய் எப்படி எடுக்கணும்? வேற என்ன சாப்பிடலாம், மருத்துவர் குறிப்பு கேளுங்க!


நெருஞ்சி நன்மை பயக்க கூடியவை. எனினும் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சையாக பிரத்யேகமாக எடுக்கும் போது மருத்துவரின் அறிவுரை அவசியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்