ஆப்நகரம்

கண்களில் அதிக அழுத்தமும் வலியும் இருக்கா... இதோ இந்த 5 விஷயத்துல ஏதாவது ஒன்னு பண்ணுங்க...

சரியான தூக்கமின்மை, அழற்சி, உடல் சூடு, கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பது இப்படி பல காரணங்களால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் சிலருக்கு கண்களில் வலியும் சிலருக்கு கண்கள் வீக்கமும் ஏற்படுவதுண்டு. சிலருடைய கண்கள் சிவந்து போய்விடும். சிலருக்கு கண்கள் அவ்வபோது இளஞ்சிவப்பு நிறமாகவோ எரிச்சலோ ஏற்படும். அப்போது கைவைத்தியம் மூலம் அதை சரிசெய்யலாம்.

Samayam Tamil 7 Oct 2021, 6:03 pm
ஒவ்வாமை அழற்சி இருப்பவர்களுக்கு தும்மல், மூச்சுத்திணறல், மூக்கில் எரிச்சல் போன்றவை மட்டும் தான் இருக்கும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும் என்று நினைப்போம். ஆனால் ஒவ்வாமையால் கண்களும் பாதிக்க கூடும். அது கண்களை சிவப்பாகவும், நமைச்சலோடும் கூட வைத்திருக்கும். அதை வீட்டிலுள்ள சில எளிமையான பொருள்களை வைத்து எப்படி சரிசெய்ய முடியும் என்று பார்க்கலாம்.
Samayam Tamil home remedies for eye strains and pain in tamil
கண்களில் அதிக அழுத்தமும் வலியும் இருக்கா... இதோ இந்த 5 விஷயத்துல ஏதாவது ஒன்னு பண்ணுங்க...


​எண்ணெய் குளியல்

கண்களுக்கு எரிச்சல் ஏற்படுவதில் மிக முக்கிய காரணம் உடல் சூட்டினால் தான். அதனால் குறிப்பிட்ட சில இடைவெளிகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. அதிலும் இந்த கண் வலி பிரச்சினை அடிக்கடி ஏற்படுகின்றவர்கள் மிளகு 2 ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு அதனுடன் பசும்பால் சேர்த்து மை போல அரைத்து நல்லெண்ணெய் 350 கிராம் எடுத்து அதில் சேர்த்து நன்கு காய்ச்சி வாரத்துக்கு ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் கண் எரிச்சல் தீரும்.

​பனீர்

சிலருக்கு உடல்சூடு அதிகமாகிவிட்டால் சில சமயங்களில் சிவந்த கட்டியாக வந்துவிடும். இந்த கண்கட்டி வராமல் இருக்க வேண்டும் என்றால், பனீரை கொஞ்சம் மசித்து கண்களில் மேல் தடவி வரலாம்.

​ஃபேஸ்வாஷ்

10 கிராம் அளவுக்கு மரமஞ்சளுடன் 1 ஸ்பூன் படிகாரம் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை காலையில் எடுத்து வடிகட்டி, அந்த தண்ணீரைக் கொண்டு கண்களை கழுவி வர வேண்டும். இது கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

​இஞ்சியும் வெல்லமும்

வெல்லம், மிளகு, இஞ்சி, மற்றும் புதினா கீரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அதில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு மை போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை காலை எழுத்தவுடன் வெறும் குளிர்ந்த தண்ணீரில் கண்களைக் கழுவி விட்டு பின்னர் இந்த கலவையை வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டால் கண்களில் இருக்கும் அழுத்தம் குறையும்.

​சீரகம்

அகத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுவது தான் சீரகம். கண்களில் வலி குறை சீரகம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. தண்ணீரில் சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அந்த சீரகத் தண்ணீரை ஆற விட வேண்டும். முழுமையாக சில்லென்று ஆகாமல் வெதுவெதுப்பாக இருக்கும்போது அந்த தண்ணீரை காட்டனில் தொட்டு கண்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண் அழுத்தப் பிரச்சினைகள் மற்றும் கண் வலி ஆகியவை குறையும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்