ஆப்நகரம்

period pain : பீரியட்ஸ் டைம்ல வலி வராம இருக்கணுமா, டாக்டர் வழங்கும் வீட்டு வைத்தியம்!

இளம்பெண்கள் மாதவிடாய் வருவதற்கு முன்பே உடல் அசெளகரியங்கள் எதிர்கொள்கிறார்கள் அவை வராமல் தடுக்க என்ன மாதிரியான வீட்டு வைத்தியங்கள் உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 21 Feb 2023, 9:34 pm
மாதவிடாய் வருவதற்கு முன்பு உடலில் தென்படும் அசெளகரியங்கள் இளம்பெண்களிடம் அதிகரித்து வருகிறது. இதில் ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. உடல் ரீதியிலான அறிகுறிகள், மன ரீதியிலான அறிகுறிகள் என்று இரண்டு விதமான அறிகுறிகளாக இதை பார்க்கலாம். இந்த அறிகுறிகள் என்னென்ன, இதற்கு உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன, எப்படி அசெளகரியங்களை போக்குவது போன்ற குறிப்புகளை தருகிறார் என்கிறார் சித்தமருத்துவ நிபுணர் உஷாநந்தினி BSMS., MSc Biotech. Lotus women care hospitals, PCOS speciality centre, Exclusive siddha and ayurveda hospital for women.
Samayam Tamil how to get rid of premenstrual syndrome by using home remedies according to siddha expert
period pain : பீரியட்ஸ் டைம்ல வலி வராம இருக்கணுமா, டாக்டர் வழங்கும் வீட்டு வைத்தியம்!


மாதவிடாய் வருவதற்கு முன்பு உடல் ரீதியிலான அறிகுறிகள்

  • மாதவிடாய் வருவதற்கு முன்பு உடல் ரீதியில் அதிக சோர்வை உணர்வீர்கள். எந்த வேலையையும் நாளை செய்துகொள்ளலாம் என்று நினைத்து தள்ளிபோட தோன்றும்.
  • தொடையின் இருபகுதியும் அதிகமாக வலிப்பதை பார்க்க முடியும். உள்ளுக்குள் குடைச்சல் இருக்கும்.
  • இடுப்பு பகுதியில் வலி அதிகமாக இருக்கும்.
  • அடி வயிற்றில் அதிக வலி இருக்கும்.
  • மார்பகங்களில் வலி, கடுகடுப்பு உணர்வீர்கள்.
  • பசியின்மை அதிகமாக இருக்கலாம். எதையும் சாப்பிட விரும்பாமல் இருப்பீர்கள்.
  • வெள்ளைப்படுதல் இருக்கும். மாதவிடாய் வருவதற்கு 10 நாட்கள் முன்பிலிருந்தே வெள்ளைப்படுதல் இருக்கும்.
  • சிலருக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பு முகப்பருக்கள் வரலாம். வலி மிகுந்த பருக்கள், முடி அதிகமாக கொட்டுவது போன்றவை வரலாம்.

மாதவிடாய்க்கு முந்தைய மனநிலை

மாதவிடாய்க்கு முன்பு மனதளவிலும் பாதிப்புகள் உண்டாகலாம். அப்போது



  • அதிக எரிச்சல்
  • அதிக கோபம்
  • அதிகமாக சத்தம் போடுவது
  • அதிகமாக வெறுப்பு காட்டுவது
  • தனிமையாக உணர்வது
  • அதிக மன அழுத்தத்துடன் இருப்பது போன்ற உணர்வு
  • சத்தமாக அழுவது
  • தூக்கமின்மை பிரச்சனை
  • இனிப்பு அதிகமாக சாப்பிடுவது தூண்டுவது
  • உப்பு சாப்பிட தூண்டுவது
  • எண்ணெய் உணவுகள் அதிகம் எடுக்க வேண்டிய உணர்வுகள்
  • இப்படி மாதவிடாய் வருவதற்கு முன்பு உடலளவிலும் மனதளவிலும் பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

மாதவிடாய்க்கு முன்பு வரக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணம்

மாதவிடாய் வருவதற்கு முன்பு உணவு முறையும் வாழ்க்கை முறையும் உடலில் இரத்தத்தில் ஹார்மோன் மாற்றத்தை சமநிலையின்மையை உண்டு செய்கிறது. இதனால் கருப்பையில் புரோஸ்டோக்ளான்டின் (prostaglandins) என்னும் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால் கருப்பையை சுற்றி இருக்கும் தசைகளில் நரம்புகளில் வலியும் அசெளகரியமும் உண்டாகிறது. இதற்கு தீர்வுகளும் உண்டு. அதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மாதவிடாய்க்கு முந்தைய பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியம்

மாதுளம்பழம்


மாதவிடாய் முடிந்த 15 நாட்களுக்கு பிறகு மாதுளம்பழம் எடுத்துவரலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வர வேண்டும். இது புரோஸ்டோக்ளாண்ட் ஹார்மோன் சுரப்பை குறைக்கும்.

பிரண்டை பொடி
பிரண்டையை நார் நீக்கி தோலை சீவி துண்டுகளாக நறுக்கி நெல் காய்ச்சலாக காய வைக்கவும். பிறகு நெய்யில் வறுத்து பொடி செய்து வைக்கலாம். இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். தினம் ஒரு உருண்டை கூட போதுமானதாக இருக்கும்.

தண்ணீர்
மாதவிடாய் முன் அறிகுறிகள் தவிர்க்க நாள் முழுவதும் தண்ணீர் குடித்துகொண்டே இருங்கள்.

புதினா துவையல்
மாதவிடாய் முடிந்த 15 அல்லது 20 நாட்களில் தினமும் ஒரு டீஸ்பூன் புதினா துவையல் சாப்பிடலாம்.

முருங்கை சூப் தினமும் ஒரு கப் குடித்து வந்தால் அசெளகரியங்கள் குறையும்.

இவை எல்லாம் செய்து வரும் போது மாதவிடாய் முன் ஏற்படும் இந்த அறிகுறிகளை தவிர்த்துவிடலாம்.மன ரீதியிலான பிரச்சனைகள் குறைய கால் டம்ளர் பாலில் கசகசா பொடி சேர்த்து குடித்து வந்தால் தூக்கம் வரும்.

மாதவிடாய் அசெளகரியங்களை போக்க இவையெல்லாம் செய்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்