ஆப்நகரம்

மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான உறக்கத்துக்கு உதவும் அஸ்வகந்தா!


ஆயுர்வேத மருந்து எடுத்துகொள்ளும் அனைவருக்கும் அமுக்கரான் கிழங்கு என்னும் அஸ்வகந்தா பற்றி தெரிந்திருக்கும்..

Samayam Tamil 7 May 2020, 3:55 pm
நெல்லிக்காய், திரிபலா சூரணம் போன்று அஸ்வகந்தாவும் எல்லோரும் எடுத்துகொள்ளலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். அமுக்கிரான் கிழங்கு என்று சொல்லகூடிய அஸ்வகந்தா இரண்டு வகை உண்டு. ஒன்று நாட்டு அமுக்கிரா என்றும் மற்றொன்று சீமை அமுக்கிரா என்றும் அழைக்கப்படுகிறது. மூலிகை வயாக்ரா என்று அழைக்கப்படும் அமுக்கிரான் இலை மற்றும் வேர் இரண்டுமே மருத்துவத்தில் பயன்படுகிறது.
Samayam Tamil medical benefits of ashwagandha in tamil
மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான உறக்கத்துக்கு உதவும் அஸ்வகந்தா!

ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தும் இவை மன அழுத்தம், மன பதட்டம் , இல்லறம் மூன்றின் குறைபாடுகளிலிருந்தும் விடுபட வேகமாக உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்வகந்தா தரும் மருத்துவ குணங்களையும் பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்துகொள்வோம்.


​நிம்மதியான தூக்கம்

இன்று தூக்கமின்மை பிரச்சனையை பலரும் சந்தித்துவருகிறார்கள். பெரும்பாலும் தூக்கமின்மைக்கு காரணம் மன அழுத்தமும், சோர்வும் தான். அஸ்வகந்தாவில் இருக்கும் அடோப்டோஜினிக் மன சோர்வை நீக்கி மன அழுத்தத்தை குறைக்க செய்கிறது. தேவையில்லாமல் மனம் அடையும் பதட்டத்தையும் குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


கப நோய்களை கபளீகரம் செய்யும் தூதுவளை!


தூக்க மாத்திரை இல்லாமலேயே மனதை அமைதியாக்கி ஆழ்ந்த உறக்கத்தை கொடுப்பதற்கு அஸ்வகந்தா பெரிதும் உதவுகிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு அஸ்வகந்தா பொடியை சிட்டிகை பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான உறக்கம் பெற முடியும்.

​நீரிழிவு கட்டுக்குள் வைக்கிறது

உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருப்பதும் நீரிழிவுக்கு காரணம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு அதிகமாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கவும். நீரிழிவு நோய் வராமல் இருக்க உடலுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்கவும் அமுக்கிரான் பொடி உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நீரிழிவுக்கு மருந்து, இன்சுலின் எடுத்துகொள்பவர்கள் அஸ்வகந்தா பொடியை எடுத்து வந்தால் சர்க்கரை அளவு குறைந்திருப்பதை அடுத்த பரிசோதனையில் அறியமுடியும். அஸ்வகந்தாவில் இருக்கும் அடாப்டோஜினிக் நீரிழிவை கட்டுக்குள் வைக்க இதை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையையும் பெற வேண்டும்.

​தைராய்டு குணப்படுத்துகிறது

தைராக்ஸின் T4 டிரைஅயடோதைரோனின் T3 என்னும் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கிறது. இதறு அயோடின் தேவை. தைராக்ஸின் ஹார்மோன் குறைவாக சுரப்பதை ஹைப்போதைராய்டு என்கிறோம். இந்த தைராக்ஸின் அளவை அமுக்கிரான் கிழங்கு அதிகரிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

​இதயத்துக்கு பாதுகாப்பு

உடல் ஆரோக்கியமாக இயங்க பிரதானமே இதயம் தான். இதயம் சிறப்பாக செயல்பட உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் சீராக செயல்பட வேண்டும். இதய தசையில் இறுக்கத்தை குறைக்கவும், தசைகளை உறுதிபடுத்தவும் இது உதவுகிறது.


தினம் ஒரு கப் அமுக்கிரான் பொடி கலந்த தேநீர் குடிப்பதன் மூலம் இதயத்தில் தமனிகளில் ரத்தகுழாய் அடைப்புகள் உருவாவதை தடுக்க உதவுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை நிறைவாகவும் வேகமாகவும் அதிகரிக்க உதவுவதோடு இதயத்தை தாக்கும் நோய்களிலிருந்தும் காக்கிறது. இதயத்தை பாதுகாப்பாக வைக்கவும் உதவுகிறது.

​மூட்டுகள், நரம்புகள்

வயதான காலத்தில் உண்டாகும் மூட்டு பிரச்சனைகள் எல்லாமே இளவயதிலேயே தாக்குதலை உண்டாக்குகின்றன. மூட்டுகளில் வலி, கீல் வாதம் போன்றவற்றுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு முக்கிய இடமுண்டு. உடலில் வாதத்தையும், கபத்தையும் குறைக்கிறது. உடலில் பீட்டா சத்தின் அளவை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.


அமுக்கிரானை சுக்குடன் சேர்த்து வெந்நீர் கொண்டு அரைத்து பற்று போட்டு வந்தாலே வீக்கங்கள் குறையும். பசும்பாலில் இந்த பொடியை கலந்து குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். உடல் தாதுவிருத்திக்கு பலம் கிடைக்கும் நரம்பு மண்டலத்தை

​பாலுணர்வை தூண்டும்

பெயரிலேயே இதன் வீரியம் குறிப்பிடப்பட்டுள்ளது அஸ்வம் என்றால் வேகம், சக்தி, பலம், திடம் போன்றவற்றை குறைக்கும். விறைப்பு பிரச்சனையை போக்குவதிலும் உறவில் நீண்ட நேரம் சோர்வின்றி ஈடுபடவும் உரிய வேகத்தை தருகிறது. விந்தணுக்கள் தரமாக இருக்கவும். எண்ணிக்கை அதிகரிக்கவும் கூட இவை உதவுவதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் இயற்கையாகவே தருவதால் இதை சக்தி வாய்ந்த வயாகரா என்று அழைக்கிறார்கள். இல்லறத்தில் ஈடுபட தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கிவிடுகிறது.


நெஞ்சு சளி இருக்கா, கைக்குழந்தை முதல் எல்லோருக்குமான பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க...


அமுக்கிரான் கிழங்கு பொடி என்னும் அஸ்வகந்தா பொடி ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இதை எல்லோருமே சாப்பிடலாம் என்றாலும் எவ்வளவு நாட்கள், எவ்வளவு அளவு என்பதை அறிந்துகொள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்