ஆப்நகரம்

முட்டி வலியை குறைக்கும் வெண்டைக்காய் தண்ணீர்.. எப்படி எடுப்பது?

வெண்டைக்காய் வழவழவென்று இருக்கும் காரணத்தினாலே சிலருக்கு பிடித்தும் பலருக்கு பிடிக்காமலும் போகிறது. ஆனால் இதை கொண்டு மூட்டு வலியை எப்படி குணப்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 20 Oct 2022, 3:36 pm

ஹைலைட்ஸ்:

  • வெண்டைக்காய் கலவைகள் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
  • திக அழுத்தம் அல்லது காயம் மற்றும் விறைப்பு முழங்கால் வலியை உண்டு செய்யலாம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil okra water for knee pain according to expert
முட்டி வலியை குறைக்கும் வெண்டைக்காய் தண்ணீர்.. எப்படி எடுப்பது?
வெண்டைக்காயை நறுக்கி வத்தலாக காய வைத்து எடுக்கலாம், பொரியலாக சாப்பிடலாம், குழம்பில் போடலாம், வெண்டைக்காய் பஜ்ஜி செய்யலாம் இப்படி விதவிதமாக செய்யப்படும் வெண்டைக்காயை மருந்தாக எடுக்க வெண்டைக்காயை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிக்கலாம். இந்த வெண்டைக்காயின் நன்மைகளில் ஒன்று முட்டிவலியை குறைப்பதுதான். வெண்டைக்காய் சாப்பிடுவது எப்படி மூட்டுவலியை குறைக்கும் என்று விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்
வெண்டைக்காய் உங்களுக்கு பிடித்த காய்கறியாக இருந்தால் சரி. அப்படி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக இந்த கட்டுரையை படிக்க வேண்டும். ஏனெனில் மூட்டு வலிக்கு வெண்டைக்காய் சிறந்த நன்மைகளை அளிக்கும். இதை சமையலில் சேர்ப்பதை தாண்டி இதை எப்படி மூட்டுவலிக்கு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு வெண்டைக்காயை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். முன்னதாக மூட்டுகள் குறித்து ஒரு சிறு அறிமுகமும் தெரிந்துகொள்வோம்.

venthayathin nanmaigal : கருப்பையை வலுப்படுத்தும் கருப்பட்டி வெந்தயக்கஞ்சி.. தயாரிப்பும் நன்மைகளும்!

நமது மூட்டுகள் சினோவியல் திரவம் எனப்படும் தடித்த வழுக்கும் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். இது போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் குருத்தெலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

உடல் எடை அதிகமாக இருப்பது, அதிக அழுத்தம் அல்லது காயம் மற்றும் விறைப்பு ஆகியவை முழங்கால் வலியை உண்டு செய்யலாம். முழங்காலுக்கு திரவங்கள் அதிகரிக்க செய்யும் போது அது முழங்கால் வலியை குறைக்க செய்கிறது.

வெண்டைக்காய் எடுத்துகொள்வதோடு அனைத்து மூட்டு வலிகளையும் தடுக்க மற்றும் சிகிச்சையளிக்க யோகா பயிற்சி அவசியமானது. மேலும் வெண்டைக்காய் உணவு முறையாக சேர்ப்பதுடன் மூட்டு வலி குறைய அதை எப்படி எடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.



வெண்டைக்காயை கழுவி 3-5 எடுத்துகொள்ளவும். முனைகளை நறுக்கி நீளமாக நறுக்கவும்.

அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து இரவு முழுவதும் ஊறவிடவும்.

delay periods : மாதவிடாய் தள்ளிபோகணுமா.. இதை சாப்பிடுங்க.. பலன் கிடைக்கும்!

காலையில் ஊறவைத்த வெண்டைக்காயை எடுத்து மென்று சாப்பிட்டு அதன் நீரை குடித்து விடவும்.

வெண்டைக்காய் நீரின் நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த வெண்டைக்காய் நீரில் காணப்படும் குவெர்செடின் மற்றும் கேம்ப் ஃப்ரால் போன்ற பல முக்கியமான் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரம். இவை வீக்கத்தை குறைக்கலாம். மேலும் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நடுநிலையாக வைத்திருக்கலாம்.


இந்த நீர் எடை இழப்புக்கு உதவும். வெண்டைக்காய் கலவைகள் எடை இழப்பை ஊக்குவிக்கும். எலிகள் மீதான ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் மொத்த கொழுப்பு ஆகியவற்றையும் குறைக்க செய்யும்.

இதில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உட்பட இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதில் உள்ள நொதிகள் மற்றும் புரோட்டின்களின் வெளிப்பாட்டை மாற்றியமைத்து நீரிழிவு தொடர்பான நெஃப்ரோபதியை தடுக்க உதவுகிறது. நீரிழிவு தொடர்பான சிறுநீரக நோய் சிக்கல்களை தடுக்கும்.

வெண்டைக்காய் நீர் குடித்துவந்தால் முட்டி வலி தீவிரம் குறைவதை பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்