ஆப்நகரம்

அது இதுனு எதும் பண்ண வேண்டாம்... இத வெறும் வயிறுல குடிச்சாலோ போதும் எடையும் தொப்பையும் தானா குறையும்...

வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைத்து உடல் எடையை பேணிக் காக்க இந்த மூன்று பொருட்கள் நம் கையில் இருந்தால் போதுமாம். இந்த விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் எடை இழப்பு பானம் உங்க எடையை இழக்க பயன்படுகிறது.

Samayam Tamil 30 Jul 2020, 4:37 pm
நிறைய பேருக்கு வயிற்று கொழுப்பை கரைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதற்காக நிறைய டயட், உடற்பயிற்சிகள், எடை இழப்பு சவால் என்று எதை எதையோ முயன்றால் கூட வயிற்று தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இதனால் தான் என்னவோ நிறைய பேருக்கு எடை இழப்பு என்பது முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் நம்முடைய உணவுப் பழக்கத்தன் வாயிலாக, குறிப்பாக நம்முடைய சமையலறையில் சின்ன சின்ன பொருள்களை வைத்து எப்படி எடையைக் குறைத்து சிக்கென்று வைத்துக் கொள்ள முடியும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Samayam Tamil weight loss drink with this 3 ingredient on an empty stomach to lose belly fat
அது இதுனு எதும் பண்ண வேண்டாம்... இத வெறும் வயிறுல குடிச்சாலோ போதும் எடையும் தொப்பையும் தானா குறையும்...


​எடையும் தொப்பையும்

உங்க அன்றாட உணவுப் பழக்கத்தில் நீங்கள் செய்யும் சிறு மாற்றம் உங்க உடல் எடையை குறைக்க பெருமளவு உதவுகிறது. அதிலும் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பது நம் உடல் உழைப்பை குறைத்து இருக்கும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட சோம்பேறித்தனமாக இருக்கும். எனவே உங்க வயிற்று தொப்பையை குறைக்க இந்த மூன்று விதைகள் இருந்தால் போதுமாம். இது நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் கொழுப்புகளை எரியச் செய்து உடல் எடையில் மாற்றத்தை உண்டாக்குகிறது.

சரி வாங்க இந்த மூன்று பொருட்களும் வயிற்று கொழுப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

​எடை குறைக்கும் சூப்பர் பானம்

கொழுப்பை குறைக்க உங்களுக்கு தேவையான பொருட்கள்

2 டீஸ்பூன் சீரக விதைகள்

2 டீ ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்

2 டீ ஸ்பூன் பெருஞ்சீரக விதைகள்

இது நம்முடைய உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும். உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

குளவியோ தேனீக்களோ கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? இதோ சிம்பிள் கை வைத்தியங்கள்

​தயாரிக்கும் முறை

இரவிலேயே இந்த மூன்று விதைகளையும் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள். ஆறியதும் இந்த வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். உங்களுக்கு கூடுதல் சுவை தேவைப்பட்டால் கல் உப்பு மற்றும் தேன் கலந்து கொள்ளுங்கள்.

​கொத்தமல்லி விதைகள்

கொத்தமல்லி விதைகளில் விட்டமின் கே, சி மற்றும் பி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பானத்தை குடிப்பது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வையும், நல்ல சீரண சக்தியையும் கொடுக்கிறது. இதனால் தேவையில்லாமல் சாப்பிடுவது குறைக்கப்பட்டு கொழுப்பை எரிக்கிறது.

ஜலதோஷம், மூக்கொழுகறது நிக்கலையா? கடலை மாவ இப்படி செஞ்சு சாப்பிடுங்க... உடனே நிக்கும்...

​சீரக விதைகள்

சீரக விதைகள் நம் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்கிறது. சீரக விதைகளில் உள்ள நொதிகள் செரிமான சாறுகளை சிறப்பாக சுரக்க உதவுகிறது. ஆரோக்கியமான செரிமானம், வேகமான மெட்டா பாலிசம் போன்றவை உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

​பெருஞ்சீரக விதைகள்

பெருஞ்சீரக விதைகள் பொதுவாக சான்ஃப் என்று அழைக்கப்படுகிறது. அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் மேலும் அவை முழுமையாக இருக்க உதவுகின்றன.ஃபைபர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பசி அடிக்கடி எடுப்பதை குறைக்கிறது. பெருஞ்சீரகம் விதைகள் உணவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதையும் மேம்படுத்துகின்றன.

எனவே இந்த மூன்று விதைகளைக் கொண்டு எளிதாக தயாரிக்கும் இந்த பானம் உங்க எடை இழப்பிற்கு உதவுகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்