ஆப்நகரம்

உடல் இளைக்க உதவும் அவல் உப்புமா ரெசிபி!

உடல் எடையை குறைத்து, உங்களை ஸ்லிமாக்க உதவும் சுவையான அவல் உப்புமா ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Samayam Tamil 1 Mar 2019, 4:58 pm
இன்றைய நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதியுறுகின்றனர். உடல் எடையை குறைத்து, உங்களை ஸ்லிமாக்க உதவும் சுவையான அவல் உப்புமா ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
Samayam Tamil உடல் இளைக்க உதவும் அவல் உப்புமா ரெசிபி!
உடல் இளைக்க உதவும் அவல் உப்புமா ரெசிபி!


தேவையானவை: அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊறவைத்த அவலை சேர்க்கவும்.

இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்).

பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால் சுவையான அவல் உப்புமா தயார்!
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்