ஆப்நகரம்

சுவையான பெங்காளி சிக்கன் கிரேவி ரெசிபி.!

நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், வீட்டு சமையலுக்கு ஈடாகாது.

TNN 5 Nov 2017, 4:27 pm
நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், வீட்டு சமையலுக்கு ஈடாகாது. அன்பு, பாசம், எல்லாம் சேர்த்து சமைக்கப்படுவதாலேயே வீட்டு சாப்பாடுக்கு அவ்ளோ ருசி. அந்த வகையில் சில சமையல் ரெசிபிகள் உலகளவில் பெயர் பெற்று விடும். அவ்வளவு புகழ்பெற்ற உணவுகளை நம் வீடுகளிலும் சமைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களுக்காகவே சுவையான பெங்காளி சிக்கன் கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
Samayam Tamil bengali chicken gravy recipe
சுவையான பெங்காளி சிக்கன் கிரேவி ரெசிபி.!


தேவையான பொருட்கள்:
சிக்கன் – கால் கிலோ
கடுகு எண்ணெய் – இரண்டு தேகரண்டி
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
சர்க்கரை – கால் டீஸ்பூன்
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
தயிர் – அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்



செய்முறை:

ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதில் சிக்கன் சேர்த்து கிளறி ஊறவைக்கவும் பதினைத்து நிமிடங்களுக்கு.

கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கவும்.



பிறகு, தக்காளி, ஊறவைத்த சிக்கன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேகவிடவும்.

பிறகு, கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பெங்காளி சிக்கன் கிரேவி தயார்.!


Bengali Chicken Gravy Recipe.!

அடுத்த செய்தி

டிரெண்டிங்