ஆப்நகரம்

மொறுமொறு வெங்காய பக்கோடா ரெசிபி.!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான வெங்காய பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Samayam Tamil 6 Jan 2018, 4:58 pm
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான வெங்காய பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
Samayam Tamil onion pakoda recipe
மொறுமொறு வெங்காய பக்கோடா ரெசிபி.!


தேவையான பொருட்கள்.!

பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
கடலை மாவு - 100 கிராம்
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை.!

முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும் .

நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவேண்டும் பிறகு ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவேண்டும் .

தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலந்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்

மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்