ஆப்நகரம்

சுவையான பன்னீர் பாயாசம் ரெசிபி.!

பாலிலிருந்து கிடைக்கும் பன்னீருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பன்னீருக்கு சுவை இல்லையென்றாலும் பன்னீர் கொண்டு செய்யப்படும் உணவுக்கு அதிக மவுசு உண்டு.

TNN 25 Oct 2017, 4:55 pm
பாலிலிருந்து கிடைக்கும் பன்னீருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பன்னீருக்கு சுவை இல்லையென்றாலும் பன்னீர் கொண்டு செய்யப்படும் உணவுக்கு அதிக மவுசு உண்டு. எப்படி சமைத்தாலும் பன்னீரின் சுவை ஒரே மாதிரி தான் இருக்கு. அதனால் அடிக்கடி பன்னீர் சாப்பிடுறவர்களுக்கு சீக்கிரம் அலுத்து விடும். அதற்காகவே செய்யப்பட்டது தான் இந்த ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி. இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
Samayam Tamil paneer paayasam recipe
சுவையான பன்னீர் பாயாசம் ரெசிபி.!




தேவையான பொருட்கள்
பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)
பால் – இரண்டு கப்
கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்
குங்குமபூ – சிறிதளவு
சோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
முந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்



செய்முறை

ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.

கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.

பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

ஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.
பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.

Paneer paayasam receipe

அடுத்த செய்தி

டிரெண்டிங்