ஆப்நகரம்

கோடைக்கு இதமான குளுகுளு வெந்தயக் களி ரெசிபி!

கிராமத்தில் சமைக்கப்படும் முக்கிய உணவு பதார்த்தங்களில் வெந்தயக்களிக்கு தனி இடமுண்டு. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது.

Samayam Tamil 4 May 2018, 4:52 pm
கிராமத்தில் சமைக்கப்படும் முக்கிய உணவு பதார்த்தங்களில் வெந்தயக்களிக்கு தனி இடமுண்டு. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது. உடலை வலுவூட்டும். உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும். இத்தகைய சுவையான வெந்தயக் களி உணவை எப்படி நம் வீட்டிலேயே சமைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
Samayam Tamil ve
கோடைக்கு இதமான குளுகுளு வெந்தயக் களி ரெசிபி!

தேவையானவை:



தேவையானவை:

புழுங்கல் அரிசி - 300 கிராம், உளுந்தம் பருப்பு - 50 கிராம், வெந்தயம் - 50 கிராம், நல்லெண்ணெய் -தேவையான அளவு, நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்

செய்முறை

புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும்.

தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி,கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

செய்முறை


மாவு நன்றாக வெந்தபின்னர் அடுப்பிலிருந்து எடுக்கவும். சுவையான வெந்தயக் களி தயார். இதை அப்படியே சாப்பிடலாம். இல்லை உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்