ஆப்நகரம்

இளநீர் ஆப்பம் ரெசிபி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் இளநீர் ஆப்பம் செய்வது குறித்து பார்க்கலாம்.

TNN 22 Jan 2017, 6:17 pm
சென்னை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் இளநீர் ஆப்பம் செய்வது குறித்து பார்க்கலாம்.
Samayam Tamil tender coconut appam recipe in tamil
இளநீர் ஆப்பம் ரெசிபி


உடல் உஷ்ணத்தை நீக்கும் இளநீர், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் சிறந்த டானிக். சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளது. சரும பிரச்னைக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்

புழுங்கல் அரிசி - 1 கப்

உளுந்து - கால் கப்

இளநீர் - 1 கப்

ஈஸ்ட் - ஒரு ஸ்பூன்

பால் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி, உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.

ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, 10 நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பின்னர், அப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவையான் இளநீர் ஆப்பம் ரெடி.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்