ஆப்நகரம்

உளுந்து அடை செய்யலாம் வாங்க!

கேழ்வரகு அடை, பருப்பு அடை செய்வது வழக்கம் தான். ஆனால், இந்த உளுந்து அடை வித்தியாசமனதாகவும், ருசியாகவும் இருக்கும்.

TNN 23 Dec 2016, 2:04 pm
கேழ்வரகு அடை, பருப்பு அடை செய்வது வழக்கம் தான். ஆனால், இந்த உளுந்து அடை வித்தியாசமனதாகவும், ருசியாகவும் இருக்கும்.
Samayam Tamil ulundhu adai recipe in tamil
உளுந்து அடை செய்யலாம் வாங்க!


மருத்துவ குணங்கள் :

கறுப்பு உளுந்து, புரதச் சத்து மிக்க தானியம் ஆகும். பருவமடையும் பெண்களுக்கு உளுந்து களி தயாரித்து கொடுப்பது வழக்கம். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கறுப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.

தேவையானவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – 250 கிராம்,

கறுப்பு உளுந்து – 100 கிராம்,

துவரம்பருப்பு – 1 கப்,

வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கிய ),

காய்ந்த மிளகாய் – 5,

இஞ்சி – சிறு துண்டு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக ஊற வைத்து, அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு அனைத்து மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்