ஆப்நகரம்

"மோர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா?"- இதோ இருக்கு செய்முறை..!

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மோர் இட்லி செய்யும் முறையை இங்கு தருகிறோம்..!

TNN 16 Apr 2017, 4:09 pm
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மோர் இட்லி செய்யும் முறையை இங்கு தருகிறோம்..!
Samayam Tamil how to make butter milk idly
"மோர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா?"- இதோ இருக்கு செய்முறை..!


தேவையான பொருட்கள்:

இட்லி மாவு- தேவையான அளவு

கடைந்தெடுத்த மோர் - 2 கிளாஸ் (கெட்டியாக இருக்க வேண்டும்)

மோர் மிளகாய் வத்தல்- 10

சிவப்பு மிளகாய்- 5

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இட்லியை தேவைக்கேற்ப அவித்துக் கொள்ள வேண்டும். இட்லிகளை சிறியதாக அவித்துக் கொள்வது நல்லது. பின்னர் அவித்த இட்லிகளை சூடு ஆறியவுடன் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

வெந்தயம், சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பக்கம் மோர் மிளகாய் வத்தலை, தனியாக பொறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கெட்டி மோரை இரண்டாக பிரித்து, ஒரு பகுதி மோரில் மிக்சியில் அரைத்த வெந்தயம்,மிளகாய் பொடியை கலந்துவிட வேண்டும். மற்றொரு பகுதி மோரில் ஒரு கிளாஸ் நீர் சேர்த்து ,அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை அரை மணி ஊற வைக்க வேண்டும். பின்னர் இட்லி துண்டுகளை எடுத்து,அதன் மேல் ஏற்கனவே இருக்கும் வெந்தயம்,மிளகாய் பொடி கலந்து மோரை ஊற்ற வேண்டும்.

பின்னர் பொறித்து வைத்திருக்கும் மோர் மிளகாயை நன்றாக நொறுக்கி அதன் மேல் தூவுங்கள். இறுதியாக கொத்தமல்லியை அழகுக்காக இட்லி மேலே தூவிவிட்டால், சுவையான மோர் இட்லி ரெடி.
மோர் இட்லி வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு மட்டுமல்லாது, நல்ல காரமான பதார்த்தமும் கூட. இந்த இட்லியை ஸ்நாக்சாகவும் உண்ணலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

How to make Butter milk Idly?

அடுத்த செய்தி

டிரெண்டிங்