ஆப்நகரம்

​ விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கார கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க கார கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 4 Sep 2016, 3:33 pm
விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாட்டம்ட தான் . விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு சாமியை வணங்காதவர்கள் கூட அவருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டையை விரும்பி சாப்பிருவார்கள் . கொழுக்கட்டையில் பல வகைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க கார கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Samayam Tamil vinayagar chathurthi special kozhukattai
​ விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கார கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/2 படி
துவரம்பருப்பு - 50 கிராம்
வரமிளகாய் - 10
உப்பு
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
தேங்காய் துருவல் - 1 மூடி
எண்ணை

செய்முறை :
துவரம் பருப்பு & புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து வரமிளகாய் உப்பு தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து , கொரகொரப்பாக அரைத்த மாவு சேர்த்து கிளரவும்.
மூடி வைத்து வேகவைக்கவும். அடிக்கடி கிளறிவிடவும். முக்கால் பாகம் வெந்தவுடன் கை பொருக்கும் சூட்டில் இருக்கும்பபோது கொழுக்கட்டைகளாக பிடித்து இட்டிலி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஸ்வீட் மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிடலாம், தேங்காய் சட்னியுடனும் ஜோடி சேரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்