ஆப்நகரம்

pregnancy 34 weeks : 34 வார கர்ப்பம், பெண் உறுப்பிலிருந்து சளி போன்ற திரவம் வெளியேறும், காரணம் என்ன, ஆபத்தான அறிகுறிகள் உண்டா?

கர்ப்பிணிக்கு 34 வது வாரம்.  பிரசவத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். பிரசவம் இன்னும் சில வாரங்களில் சில நாட்களில் நடக்கலாம். இந்த வாரத்தில் உண்டாகும் உடல் மாற்றங்களும் அறிகுறிகளும் எப்படி இருக்கும். குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்  என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

Authored byதனலட்சுமி | Samayam Tamil 14 Feb 2023, 8:39 pm

கடுமையான மசக்கையையும், உடல் அறிகுறிகளையும், அசெளகரியத்தையும் எதிர்கொண்டு வந்திருக்கும் கர்ப்பிணிகள் இந்த 34 வது வாரத்தில் பெருமளவு அதை மறந்து குழந்தையை எதிர்நோக்க தொடங்குவார்கள். இந்த வாரத்தில் பெருமளவு கர்ப்ப அறிகுறிகளும் அனைத்து எரிச்சல்களும் குறையலாம். அதே நேரம் இந்த வாரத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்களும் அறிகுறிகளும் குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.

Samayam Tamil 34 weeks pregnancy symptoms in tamil
pregnancy 34 weeks : 34 வார கர்ப்பம், பெண் உறுப்பிலிருந்து சளி போன்ற திரவம் வெளியேறும், காரணம் என்ன, ஆபத்தான அறிகுறிகள் உண்டா?


34வது வாரக் கர்ப்பத்தில் குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் பாலினம் அறிவீர்கள்
குழந்தை ஆண் தான் என்றோ பெண் தான் என்றோ நன்றாகவே காட்டும் வாரம் இந்த 34 வது வாரம். மருத்துவரோடு உங்கள் துணையும் பரிசோதனையின் போது உடன் இருந்தால் குழந்தையின் பாலின உறுப்புகளை பார்க்க முடியும். குழந்தையின் தோல் முழுவதுமாக உருவாகியிருக்கும் மென்மையாகவும், வலுவாகவும் மாறியிருக்கும்.

குழந்தையின் வளர்ச்சி
நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் நுரையீரல் வலுவாக இருக்கும். மூளை இணைப்புகள் இப்போது டிரில்லியன்களில் இருப்பதால் குழந்தை கனவு கூட காணலாம்.

குழந்தையின் அசைவு
குழந்தையின் அசாதாரண மாற்றங்களை தாயால் எளிதில் உணர முடியும். வயிற்றில் தொடுவதன் மூலம் குழந்தை உணரக்கூடும். இந்த வாரத்தில் பிரசவம் நடந்தால் முற்றிலும் பாதுகாப்பானது. 5% கர்ப்பிணிகள் இந்த வாரத்தில் பிரசவ வலியை எதிர்கொள்கிறார்கள்.குழந்தை கருப்பை சுற்றி அதிகபட்ச சுறுசுறுப்பில் இருக்கும். இதனால் அசைவுகள் வித்தியாசமாக இருப்பதை பார்க்காலம்.

குழந்தை தாயின் உடலை விட்டு வெளியேற தொடங்கும். இடுப்புக்குள் ஆழமாக இறங்க கூடும். இந்த வாரத்தின் தொடக்கத்தில் அல்லது அடுத்த வாரங்களில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் குழந்தை பிறப்பதற்கு தயாராக இருப்பதை பார்க்கலாம்.

குழந்தை பிறக்கும் நிறம் மெலனின் நிறமியின் அளவை பொறுத்தது. நிறமி இல்லாத குழந்தைகளுக்கு நீல நிற கண்கள் இருக்கும். இது முதல் இரண்டு வாரங்களில் மாறலாம்.

34வது வாரக் கர்ப்பத்தில் கருவின் அளவு

34 வது வாரத்தில் கர்ப்பிணியின் குழந்தையின் அளவு மேலிருந்து கீழாக 45 செ.மீ ஆகும். குழந்தை பெரிய பூசணிக்காயின் அளவை ஒத்து இருக்கும். குழந்தை 2 கிலோவுக்கு மேல் இருக்கலாம். குழந்தையின் எலும்புக்கூடு இந்த நேரத்தில் கடினமாக இருக்கும். மண்டை எலும்புகள், பிறப்பு கால்வாய் வழியாக செல்ல குழந்தை மென்மையாக இருக்கும்.

34 வாரக் கர்ப்பத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள்

மூல நோய்:
கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் மற்றும் ஹார்மோன் செயல்பாடு போன்ற காரணங்களால் மூல நோய் உண்டாகிறது. முந்தைய வாரம் போன்றே இந்த வாரமும் குத வலி அல்லது பெரினியல் பகுதியில் வலி வீக்கங்கள் உண்டாகும் மருந்துகள் மற்றும் கெகல் பயிற்சிகள் செய்யலாம்.

யோனியிலிருந்து வெளியேற்றம்:
இந்த வாரத்தில் யோனி பகுதியில் இருந்து சளி திரவம் வெளியேறும். ஈஸ்ட்ரோஜனின் வருகையால் இது உண்டாகிறது. யோனியை சுற்று இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

கணுக்கால்களில் வீக்கம் :
கால்களும் கணுக்கால்களும் திரவத்தின் தேக்கத்தால் உண்டாகிறது. இது எடிமாவால் உண்டாகும் நிலை. கால்கள் வீங்கிய நிலையை தீவிரமாகாமல் தடுக்க காலணிகளை கவனித்து வாங்க வேண்டும். அதோடு கால்களை நீண்ட நேரம் தொங்க விட்டு உட்கார கூடாது.

வரித்தழும்புகள்:
இந்த வாரத்தில் வயிற்றில் உண்டாகும் வரித்தழும்புகளை தவிர்க்க முடியாது. ஆனால் எடை அதிகரிக்காமல் தடுப்பதன் மூலம் ஓரளவு இதை கட்டுப்படுத்தலாம்.

மார்பகங்களிலிருந்து கொல்ஸ்ட்ரம் பால் கசியதொடங்கும். அதனால் திரவ உறிஞ்சுதலை கொண்டிருக்கும் உள்ளாடைகளை அணிவது அவசியம்.

முன்கூட்டிய பிரசவம்
குறைப்பிரசவம் கவலைக்குரியவை. ஏனெனில் குழந்தை சீக்கிரமாக பிறந்தால் போதுமான அளவு வளர்ச்சியடையாமல் இருக்கலாம். கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு அதிக ஆபத்தில் இருக்கலாம். அதனால் குறைப்பிரசவ அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள். குறைப்பிரசவம் என்பது 38 வாரங்களுக்கு முன்பு நடக்ககூடியது.

34 வது வாரக் கர்ப்பத்தில் உண்டாகும் அறிகுறிகள்

விரிவடையும் மார்பகங்கள்

மூன்றாவது மூன்று மாதங்களின் கடைசி சில வாரங்களில் மார்பகங்கள் இன்னும் பெரியதாகும். தோல் நீண்டு அரிப்பு உண்டு செய்வதால் இது சில அசெளகரியங்களை உண்டு செய்யும். இந்த நேரத்தில் மாய்சுரைசர் தேவை.

மலச்சிக்கல் விரிவாக்கப்பட்ட கருப்பை இப்போது வயிற்றின் பெரும்பகுதி இடத்தை ஆக்ரமித்து கொள்ளும். இதனால் குடல்கள் மூலையில் தள்ளி இருக்கும். இதனால் குடல் அசைவுகள் ஒழுங்கற்று இருக்கும். போதுமான நார்ச்சத்து மற்றும் தண்ணீரை உட்கொள்வது அசெளகரியத்தை குறைக்க உதவும்.

இடுப்பு வலி

குழந்தை பிறக்க தயாராகும் போது இடுப்பு வலி, கீழ் முதுகில் அசெளகரியம் சிறுநீர்ப்பை அழுத்தம் உண்டாகலாம். குழந்தை கீழ் இறங்கிவிட்டதால் சுவாசம் எளிதாகும். வெதுவெதுப்பான குளியல் நிவாரணம் அளிக்கும்.

வாய்வு பிரச்சனை

இந்த வாரத்தில் வாய்வு மிகவும் பொதுவானது. செரிமானம் குறைவதால் பதட்டம் நிலைமையை மோசமாக்குகிறது. மன அழுத்தத்தை குறைக்க சுவாச பயிற்சிகளை முயற்சி செய்யுங்கள். செரிமானம் சரியாக உணவை சிறு இடைவெளிகளில் சிறிது சிறிதாக சாப்பிடுவது பாதுகாப்பானது.

ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள்

பிடிப்புகள் வயிற்றை சுற்றி இருக்கலாம். இது வலுவடைந்து அடிக்கடி நிகழலாம். இந்த தசைப்பிடிப்பு உணர்வுகள் ஒழுங்கற்ற இடைவெளியில் வந்து நீங்கள் வேறு நிலைக்கு மாற்றும் போது குறைந்தால் அது பொய்வலியே. எனினும் முன்கூட்டிய பிரசவ வலி குறித்தும் தெரிந்து வைத்துகொள்ள வேண்டும்.

வீங்கிய கணுக்கால்கள்

கர்ப்பத்தின் இந்த கட்டத்தில் பெண்களுக்கு கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுவது அசாதாரணமானது அல்ல. இயன்றவை நிற்கும் நேரத்தை தவிர்ப்பது நல்லது. காலணிகள் சரியானதாக இருக்கட்டும்.

​34 வது வாரத்தில் கர்ப்பிணிகள் வயிறு மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

கர்ப்பத்தின் 34 வது வாரங்களில் வயிற்றுப்பகுதி கருப்பையின் மேல் இருந்து 45 செ.மீட்டர் வரை இருக்கும். இந்த வாரத்தில் அம்னோடிக் திரவம் அதிகமாக இருக்கும். உங்கள் கருப்பை வழக்கமான அளவில் 1000 மடங்கு பெரியதாக இருக்கும்.


பிரசவம் நெருங்கும் இந்த வாரங்களில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது அவசியம். மருத்துவர் மன அழுத்தமற்ற சோதனை அல்லது உயிர் இயற்பியல் சோதனை சுய விவரத்தை பரிந்துரைக்கலாம்.


இந்த பரிசோதனையின் மூலம் குழந்தையின் சுவாசம் அல்லது இதயத்தில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பதை கவனிக்க முடியும்.தாய் விரும்பினால் குழந்தையின் முகம் மற்றும் உடலின் நெருக்கமான விவரங்களை அல்ட்ராசவுண்ட் மூலம் பார்க்கலாம்.

​34 வாரத்தில் கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்

பிரசவம் நெருங்கும் வேளையில் இருக்கிறீர்கள் உணவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு புதிய பழங்கள் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பால் ஆகியவற்றின் பல பகுதிகளை எடுத்துகொள்ளுங்கள். அடிக்கடி சிறிய உணவை எடுத்துகொள்வது நல்லது. இதனால் நெஞ்செரிச்சல் தவிர்க்க முடியும்.


எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சியில் வைட்டமின் சி, வைட்டமின் டி. வைட்டமின் கே அவசியம். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் டி சப்ளிமெண்ட் வழியாக எடுத்துகொள்ளலாம். தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளி படும்படி இருப்பது நல்லது.


Walking Tips : உடல் எடை குறைய வாக்கிங் போறீங்களா, நீங்க செய்ய வேண்டியது என்ன? செய்யகூடாதது என்ன?


வைட்டமின் சி இலை கீரைகள், ஒல்லியான இறைச்சிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் காணப்படுகிறது. காலிஃப்ளவர், முட்டை கோஸ், பீன்ஸ், மாதுளை, கீரைகள், சோயாபீன் போன்ற உணவுகளில் வைட்டமின் கே காணப்படுகிறது.


குழந்தையின் அறிவுத்திறனை அடைய, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை சேருங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

34வது வாரக் கர்ப்பத்தில் மருத்துவரிடம் கேட்க வேண்டியவை

குழந்தை தலைகீழான நிலைக்கு வந்துவிட்டார்களா என்பதை ஆலோசியுங்கள்.

கீழ் முதுகு இடுப்பு வலி குறைய பயிற்சிகள் செய்யலாமா?

குறைப்பிரசவ வலியை எப்படி கண்டுகொள்வது?

பிரசவம் அருகில் இருந்தால் எப்படி தயாராக வேண்டும்?

எடுத்துகொள்ளும் உணவுகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகள் தொடர்ந்து எடுக்கலாமா?

இவை தவிர உங்களுக்கு இருக்கும் மற்ற சந்தேகங்களையும் நீங்கள் மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெற்று கொள்ளலாம்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்