ஆப்நகரம்

pregnancy nutrients : கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய இந்த சத்துக்களை கண்டிப்பா சேர்க்கணும்!

ஆரோக்கியமான கர்ப்ப உணவு குழந்தையின் வளர்ச்ச்யை மேம்படுத்தும். ஆனால் எந்தெந்த சத்துகள் அதிகம் தேவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 31 May 2023, 7:48 pm
கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான உணவுகள் எப்போதும் அவசியம். அப்போதுதான் தாயும் வயிற்றில் வளரும் சேயும் ஆரோக்கியமாக இருப்பார்கள். அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை பெறுவதன் மூலம் போதுமான ஆரோக்கியம் பெறலாம். கர்ப்பகால உணவில் கவனம் செலுத்த வேண்டிய ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil best essential nutrients you must include your diet during pregnancy
pregnancy nutrients : கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய இந்த சத்துக்களை கண்டிப்பா சேர்க்கணும்!


​ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமிலம்​

மூளை முதுகுத்தண்டு பிறப்பு பிரச்சனைகளை தடுக்கும் ஃபோலேட் என்பது வைட்டமின் பி ஆகும். இது வளரும் மூளை மற்றும் முதுகுத்தண்டு (நரம்பியல் குறைபாடுகள்) போன்றவற்றில் கடுமையான சிக்கல்களை தடுக்க செய்கிறது.
இது மாத்திரை மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகளில் இருக்கும் ஃபோலேட்டின் செயற்கை வடிவம் ஃபோலிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும் அபாயத்தை இந்த ஃபோலிக் அமிலம் குறைக்கிறது.

கர்ப்பிணிக்கு எவ்வளவு தேவை
கருத்தரிப்பதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 400 மைக்ரோகிராம் (எம்சிஜி) ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் மற்றும் கர்ப்பம் முழுவதும் ஒரு நாளைக்கு 600 முதல் 1000 மைக்ரோகிராம் அளவு தேவைப்படலாம்.

ஃபோலேட் எதிலெல்லாம் உண்டு
வலுவூட்டபட்ட தானியங்கள், ஃபோலிக் அமிலத்தின் சிறந்த ஆதாரங்கள். அடர் பச்சை இலை காய்கறிகள் சிட்ரஸ் பழங்கள் மற்றும் உலர்ந்த பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு போன்றவை.

​கர்ப்பிணிக்கு கால்சியம் எவ்வளவு தேவை?​

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் தேவை. கால்சியம் இது இரத்த ஓட்டம், தசை மற்றும் நாம்பு மண்டலங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஆதரிக்கிறது.

கர்ப்பிணிக்கு எவ்வளவு தேவை
நாள் ஒன்றுக்கு 1000 மில்லிகிராம்கள். கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1300 மில்லிகிராம் தேவை.

கால்சியம் எதிலெல்லாம் இருக்கு
பால் பொருள்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்கள், இது ப்ரக்கோலி மற்றும் காலே போன்றவற்றில் உள்ளது. பல பழச்சாறுகள் மற்றும் காலை உணவு தானியங்கள் கால்சியம் நிறைந்தவை.

​கர்ப்பிணிக்கு வைட்டமின் டி எவ்வளவு தேவை?​

வைட்டமின் டி எலும்பு வலிமையை ஊக்குவிக்கிறது. உங்கள் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க வைட்டமின் டி கால்சியத்துடன் செயல்படுகிறது.

கர்ப்பிணிக்கு எவ்வளவு தேவை
ஒரு நாளைக்கு 600 சர்வதேச அலகுகள்

வைட்டமின் டி எதிலெல்லாம் இருக்கு
சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன், வைட்டமின் டி நிறைந்த சிறந்த ஆதாரம். பால் மற்றும் ஆரஞ்சு சாறு போகியவையும் முக்கியமானவை.

​கர்ப்பிணிக்கு வேண்டிய புரதம் எவ்வளவு அளவு?​

புரதம் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியது. கர்ப்பம் முழுவதும் இது முக்கியமானது.

கர்ப்பிணிக்கு எவ்வளவு தேவை
நாள் ஒன்றுக்கு 71 கிராம் அளவு தேவை

புரதம் எதிலெல்லாம் இருக்கு
ஒல்லியான இறைச்சி, கோழி, கடல் உணவு மற்றும் முட்டை ஆகியவை புரதத்தின் சிறந்த ஆதாரங்கள். மேலும் இது பீன்ஸ் மற்றும் பட்டாணி, கொட்டைகள், விதைகள் மற்றும் சோயா பொருள்களில் உள்ளது.

​கர்ப்பிணிக்கு வேண்டிய இரும்புச்சத்து எவ்வளவு தேவை?​

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை தடுக்கும். ஹீமோகுளோபின் தயாரிக்க உடலுக்கு இரும்புச்சத்து அவசியம் தேவை. இது இரத்த அணுக்களில் உள்ள புரதம் ஆகும். இது உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. கர்ப்பிணிக்கு இருமடங்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. குழந்தைக்கு ஆக்ஸிஜனை வழங்க அதிக இரத்தத்தை உருவாக்க உடலுக்கு இரும்பு தேவைப்படுகிறது.

கர்ப்பிணிக்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் இரத்த சோகையை உருவாக்கலாம். தலைவலிக்கு ஆளாகலாம். அதிகமாக சோர்வடையலாம். இது முன்கூட்டிய பிறப்பு குறைபாடு, குறைந்த எடை கொண்ட குழந்தை மற்றும் மகப்பேறு பிறகு மனச்சோர்வு அபாயத்தை அதிகரிக்கிறது.

கர்ப்பிணிக்கு எவ்வளவு தேவை
நாள் ஒன்றுக்கு 27 மில்லிகிராம்கள்

இரும்புச்சத்து எதிலெல்லாம் இருக்கு
ஒல்லியான சிவப்பு இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவை இரும்பின் நல்ல ஆதாரங்கள், காலை உணவு தானியங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்க்கலாம்.

நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் முக்கிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடலாம். கருத்தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அல்லது திட்டமிடும் போதே முந்தைய வைட்டமின்களை எடுத்துகொள்வது கர்ப்பகால ஆரோக்கியத்தை உறுதி செய்யும். இது குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை அணுகுவது நல்லது.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்