ஆப்நகரம்

c-section delivery : சிசேரியன் பிரசவம் குறித்து நிலவும் 6 வித கட்டுக்கதைகளும் உண்மைகளும்...

சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது மிக சாதாரணமாக ஆகிவிட்ட காலகட்டத்தில் அது குறித்து காலங்காலமாக சில கட்டுக்கதைகள் நிலவிக் கொண்டே தான் இருக்கின்றன. மக்களும் அதை நம்பிக் கொண்டே இருக்கின்றன. அப்படி சிசேரியன் பிரசவம் குறித்து சொல்லப்பட்டு வரும் சில கட்டுக்கதைகளும் அதுபற்றிய உண்மைகளையும் பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க...

Authored byமணிமேகலை | Samayam Tamil 20 Apr 2023, 7:21 pm
உலகம் முழுவதிலும் சிசேரியன் மூலம் 25% குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சுகப்பிரசவம் உண்டாவது கடினம், அதனால் குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ ஆபத்து ஏற்படலாம் என்கிற நிலை வரும்போது சிசேரியன் செய்ய முடி செய்யப்படுகிறது. இந்த சிசேரியன் பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு, தழும்புஈ காயங்கள் போன்றவை உண்டாகும்.
Samayam Tamil c section myths and misconceptions in tamil
c-section delivery : சிசேரியன் பிரசவம் குறித்து நிலவும் 6 வித கட்டுக்கதைகளும் உண்மைகளும்...


​myth 1

சிசேரியன் என்பது ஒரு மைனர் சர்ஜரி தான்.

fact

உலகம் முழுவதும் பொதுவாக நடக்கும் அறுவை சிகிச்சை என்று சொல்லப்பட்டாலும் கூட இது நிச்சயமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை அல்ல. வயிற்றுப் பகுதியில் நடக்கிற பெரிய அறுவை சிகிச்சை தான் இது. வயிற்றின் மூலம் குழந்தையை வெளியே எடுப்பதற்கு கருப்பைக்குள் நுழைந்து செய்யப்படும் அறுவை சிகிச்சை இது.

இது ஒரு பெரிய வயிற்று அறுவை சிகிச்சையாகும், இது குழந்தையை பிரசவிப்பதற்காக வயிறு மற்றும் கருப்பையில் நுழைய வேண்டும்.

​myth 2

சிசேரியன் பிரசவம் நடக்கும்போது அதிலிருந்து தாய் மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்

fact

அறுவை சிகிச்சையில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு 4-6 வாரங்கள் பிடிக்கும்தான். ஆனால் அதன்பின் வேகமாக மீள்வதற்கு நவீன மருத்துவத்தில் நிறைய வசதிகள் தற்சமயம் வந்துவிட்டன. அதேபோல வலி தொடங்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதும் இப்போது தேவையில்லை.

​myth 3

பிரசவத்திற்கு முன்பே எந்த முறை பிரசவம் என்பதை மருத்துவர்கள் தீர்மானித்துவிடுகிறார்கள்

fact

இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றிலும் உண்மை கிடையாது. சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் பிரசவமா என்பதை பெரும்பாலும் தாயின் மருத்துவ நிலைகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் நிலையையும் பொருத்தே எந்த வகையான பிரசவம் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். முடிந்த வரையில் சுகப்பிரசவத்தை தான் மருத்துவர்கள் விரும்புகிறார்கள்.

​myth 4

சிசேரியன் பிரசவத்துக்காக இடுப்பில் செலுத்தப்படும் மயக்க மருந்தால் முதுகுவலி உண்டாகும்

fact

இது பொதுவாக எல்லோரிடமும் இருக்கும் ஒரு கட்டுக்கதை தான். மயக்க மருந்துகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. மற்ற தூங்குவதற்காக செலுத்தப்படும் மயக்கம் மருந்தைப் போல இந்த சிசேரியனுக்கு பயன்படுத்தும் மயக்க மருந்து கிடையாது. இந்த மருந்து இடுப்பு மற்றும் கீழ் மூட்டுக்களில் ஏற்படும் வலியைக் குறைப்பதற்காக செலுத்தப்படுவது.

முதுகுத் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள திரவத்தில், மிகவும் மெல்லிய முதுகுத் தண்டு ஊசியைச் செலுத்தி, மயக்க மருந்தை செலுத்துவார்கள்.

அதனால் பொதுவாக இருக்கும் முதுகுவலிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

​myth 5


ஒருமுறை சிசேரியன் பிரசவம் ஆனால் அடுத்தடுத்த குழந்தைக்கும் சிசேரியன் பிரசவம் தான் நடக்கும்

fact

இப்படியொரு நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருகிறது. ஆனால் மருத்துவர்கள் இதில் முழுமையாக உண்மை இல்லை என்றும் முதல் குழந்தை சிசேரியன் பிரசவத்தில பிறந்தாலும் அடுத்தடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கவும் நிறைய வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்ந்தும் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

​myth 6

சிசேரியன் பிரவசம் முடிந்ததும் குழந்தைக்கும் தாய்க்கும் உடல் ரீதியான தொடர்பு இருக்கக் கூடாது

fact

பெரும்பாலான சமயங்களில் இதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் சரயானதும் அல்ல. பிரசவத்திற்குப் பிறகு, தாயின் வயிற்றில் இருந்து எடுத்ததும் அந்த நீர் நிறைந்த பையை விட்டு வெளியே வந்ததும் சருமத்தில் பரவும் வறட்சியால் குழந்தை அழ ஆரம்பிக்கும். அடுத்த சில நிமிடங்களில் தொப்புள் கொடி வெட்டி எடுக்கப்படும்.

அதன்பிறகு குழந்தைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இயல்பாக இருக்கிறது என்று மருத்துவர் குறிப்பிட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் உடல் ரீதியான தொடர்பு இருப்பதில் எந்தவித தவறுமில்லை.

ஒருவேளை குழந்தை அழவில்லை, சரியான நிலையில் இல்லை என்றால் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்