கர்ப்ப காலம்
கர்ப்பத்தில் இருப்பவர்களுக்கு விக்கல் ஏற்படுவது என்பது ஒரு சாதரண விஷயமாகும், ஆனால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அதனால் என்ன ஆகும். இதனால் கருச்சிதைவு ஏற்படுமா? என்கிற பயம் பலருக்கு உள்ளது. சில தாய்மார்கள் குடல் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து பயப்படுகின்றனர். ஏனெனில் கருப்பைகள் மற்றும் குடல்கள் இரண்டும் ஒரே தசைகளில் இணைகின்றன, எனவே உண்மையிலேயே வயிற்றுப்போக்கு பிரச்சனை கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என நாம் கண்டறிய வேண்டும்.
குளியலறை பழக்கம் கர்ப்பத்தை பாதிக்கிறதா?
கர்ப்பக்காலங்களில் நமது உடல் ஹார்மோனானது சாதரணமாக சுரப்பதை விடவும் மேம்பட்ட அளவில் சுரக்கின்றன, இதனால் உங்கள் குடல் இயக்கத்தில் சில விளைவுகள் ஏற்படலாம், சில நேரங்களில் இவை உங்கள் குடல் இயக்கத்தை பெரிய அளவில் பாதிக்கலாம். இதனால் கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப்போக்கு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பது என்பது பொதுவான ஒரு விஷயமாகும், பெரும்பாலும் இப்படி வரும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் அதுவாகவே சரியாகிவிடும். ஆனால் இந்த வயிற்றுப்போக்குகள் சில நாட்களுக்கு தொடர்ந்தால் உங்களுக்கு செரிமான அமைப்பில் தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அரிசியை சமைக்கும்முன் ஏன் ஊறவைக்க வேண்டும்... ஊறவைக்காமல் சமைத்தால் ஏற்படும் ஆபத்துகள் என்ன...
குடல் பிரச்சினைகள்
சாதாரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஒரு நாளில் சரியாகிவிடும், ஆனால் உங்களுக்கு வயிற்றுப்போக்கானது மூன்று நாட்களுக்கு மேலாக நீடித்தாலோ. அதனுடன் காய்ச்சல் ஏற்பட்டாலோ நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது, கடுமையான வயிறு பிரச்சனை அல்லது மலக்குடல் பிரச்சனைக்கான அறிகுறியாக இது இருக்கலாம்.
ஒருவேளை உங்கள் மலத்தில் இரத்தம் வெளியானால் அது கடுமையான பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் இவை கர்ப்பத்தை பாதிக்கக்கூடிய அறிகுறிகளாக அமைகின்றன, ஆனால் அவை கர்ப்பத்தை பெரிதாக பாதிக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் 10 விஷயங்கள் இதோ...
சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்
கர்ப்பக்காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது இயல்பான விஷயம் என்பதால் எடுத்த உடனே இதுக்குறித்து பீதி அடைய வேண்டாம், இதற்காக நிறைய தண்ணீர் மற்றும் பானங்களை குடிக்கவும். பானங்களில் பால் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும். ஏனெனில் இதனால் வயிற்றுப்போக்கு மோசமாக வாய்ப்புள்ளது.
மேலும் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் நேரடியாக மருத்துவர் அறிவுரையின்றி சொந்தமாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். பலர் இந்த தவறை செய்கின்றனர். அது உடலுக்கு நல்லதல்ல. எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் கர்ப்பக்காலத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. அவர் உங்கள் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் மருந்துகளை பரிந்துரைப்பார்.
சருமத்தை பளபளப்பாக மாற்றும் திராட்சை விதை...
தண்ணீர்
வயிற்றுப்போக்கு ஏற்படுவடுவது போலவே சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதுண்டு. எப்போதும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதே முக்கியமான காரணமாக உள்ளது, எனவே வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும்போது முதலில் போதுமான அளவில் தண்ணீரை அருந்துவது நல்லது.
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்தானது செரிமான அமைப்பிற்கு நன்மை செய்யக்கூடியது, எனவே வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்போது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த முயற்சிகளுக்கு பிறகும் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரவில்லை எனில் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. அவர் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்ய உங்களுக்கு மலமிளக்கி மருந்துகளை பரிந்துரைக்கலாம்.