ஆப்நகரம்

குழந்தைக்கு எப்போது அசைவ உணவு? எப்படி கொடுக்கலாம்? 9 ஆம் மாத உணவுகள்!


பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பிறகு இணை உணவுகள் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

Samayam Tamil 9 Apr 2021, 7:30 pm
Samayam Tamil food ideas for 9 month babies in tamil
குழந்தைக்கு எப்போது அசைவ உணவு? எப்படி கொடுக்கலாம்? 9 ஆம் மாத உணவுகள்!

பெரியவர்கள் எடுத்துகொள்ளும் உணவுகள் அனைத்தையும் குழந்தைகள் எடுத்துகொள்ளலாம். ஆனால் உரிய முறையில் அதை பழக வேண்டும். அதன் சுவைகளை சரியான முறையில் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகள் வளர வளர அதன் சுவையை பற்றிக்கொள்வார்கள். புதிய உணவுகளை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆனால் அவர்களது வளர்ச்சிக்கேற்ப என்ன கொடுக்கலாம், எவ்வளவு கொடுக்கலாம், என்பதை கண்டுபிடிப்பது அம்மாக்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இது குறித்து எப்போதும் நீங்கள் கவலைக்கொள்ள வேண்டியதில்லை. உங்கள் குழந்தைக்கு ஒன்பது மாதம் ஆனால் நீங்கள் அவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

​குழந்தையின் வயிறு

குழந்தையின் வயிறு என்பது நமது உள்ளங்கையின் உள்பகுதிக்குள் அடங்கிவிடும். நீங்கள் அளவு தெரியாமல் கொடுக்கும் போது அவர்கள் உணவை வெளியே துப்பிவிட வாய்ப்புண்டு.எனினும் இதை முழுதாக நிரப்பிவிட அம்மாக்கள் முயற்சிக்க வேண்டாம்.


ஜாதிக்காய் : குழந்தைக்கு எப்போது? எப்படி? என்ன நன்மைகள் கிடைக்கும், அம்மாக்களே உங்களுக்குதான்!


குழந்தையின் சுவை மொட்டுகள் இன்னும் வளர்ந்திருக்கும் நிலையில் எல்லா வகை உணவுகளையும் அவர்கள் விரும்பமாட்டார்கள் சிலர் பழங்களை விரும்புவார்கள். சிலர் காய்கறிகளை விரும்புவார்கள். சிலர் உணவின் அமைப்பு குறித்த சுவையை அந்த வயதிலேயே முடிவு செய்துவிடுவார்கள்.

​குழந்தைக்கு உணவு கொடுக்கும் முறை

குழந்தைக்கு கூழ்வடிவில், பிசைந்து, சிறு சிறு துகள்களாக இருக்கலாம். குழந்தையின் விருப்பத்தை இந்த மாதத்தில் அம்மாக்கள் புரிந்துகொள்ளலாம். அதே நேரம் குழந்தைக்கு தாய்ப்பாலும் ஊட்டச்சத்தும் அவசியம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.


ஒன்பது மாத குழந்தைக்கு சிறந்த உணவு அறிமுகப்படுத்தவே எல்லா அம்மாக்களும் விரும்புவார்கள். அதனால் சுவையான ருசியான உணவு வகைகளை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அப்படி 9 மாத குழந்தைக்கு நீங்கள் தரக்கூடிய உணவுகள் இங்கு பார்க்கலம்.

பழங்கள்

குழந்தைக்கு 6 மாதங்களை கடக்கும் போதே சில பழங்களை பழகியிருப்பீரிகள் இப்போது குழந்தைக்கு அவுரி நெல்லி, க்ரான்பெர்ரி, பேரீச்சம்பழம், அத்திப்பழம், செர்ரிப்பழங்கள், சிட்ரஸ் பழங்கள் போன்ற பெர்ரிகளை குறைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தைக்கு இதை கொடுப்பதற்கு முன்பு இவை நன்றாக சுத்திகரிக்கப்பட்டு, சமைக்கப்பட்டு நன்றாக கூழ் போல் பிசைந்து கொடுக்கவும்.

​காய்கறிகள்

முன்னதாக குழந்தைக்கு கேரட், பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற காய்களை தந்திருப்பீர்கள். இந்நிலையில் குழந்தைக்கு 9 மாதம் வந்ததும் ப்ரக்கோலி, அஸ்பாகரஸ், உருளைகிழங்கு, காலிஃப்ளவர், வெங்காயம் போன்றவற்றையும் சமைத்து பிசைந்து கொடுங்கள். இது சத்தானவை என்பதோடு குழந்தைக்கு பிடித்த உணவாகவும் இது இருக்கலாம்.

அசைவம்

பொதுவாக அசைவ உணவு குழந்தைக்கு எப்போது என்று அம்மாக்கள் கேட்பார்கள். குழந்தை ஆரோக்கியமான எடையுடன் ஆரோக்கியமாக இருந்தால் குழந்தைக்கு இப்போது அசைவம் பழகலாம்.


குழந்தை கருப்பு நிற மலம் கழித்தால் அலட்சியம் செய்யாதீங்க, காரணம் இதுல ஒண்ணா இருக்கலாம்!


நன்றாக சமைத்த முட்டை, கோழி மற்றும் மீன் போன்றவற்றை பக்குவமாக சமைத்து அதிக உப்பு, அதிக காரம் சேர்க்காமல் நன்றாக வேகவைத்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதே நேரம் குழந்தைக்கு அரை வேக்காட்டு உணவாக முட்டை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


இறைச்சியை பழகிய சில நாட்கள் வரை வேறு புது உணவை கொடுக்க வேண்டாம். இவை ஒவ்வொன்றையும் தனித்தனீயாக கொடுத்து பரிசோதிக்கவும். அப்போதுதான் அவை ஒவ்வாமையை உண்டாக்குகிறதா என்பதை அறிய முடியும்.

​திட மற்றும் திரவ ஆகாரங்கள்

சிற்றூண்டியாக சப்பாத்தி அல்லது பிரெட் துண்டுகள் சிறிது கொடுக்கவும். குழந்தையின் விருப்பத்துக்கேற்ப தானியங்களில் செய்த பிஸ்கட் வகைகளை நொறுக்கு தீனியாக கொடுக்கலாம்.


தானியங்களை சமைத்து மென்மையாக்கப்பட்டு கொடுக்கலாம். குழந்தைக்கு பல் முளைத்து அவர்கள் நன்றாக மென்று சாப்பிடுவதை கண்டால் குழந்தைக்கு ஓட்மீல், அரிசி வகை தானியங்களை சேர்க்கலாம். திட உணவுகளை காட்டிலும் திரவ உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம்.


குழந்தையின் செரிமான அமைப்பு வளர்ந்து வருகிறது. அவர்கள் தாராளமான நீர்ச்சத்தை கொண்டிருக்க வேண்டும் இதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட சாறை வெளியில் வாங்கி கொடுப்பதை காட்டிலும் வீட்டில் தயாரித்து கொடுப்பது பாதுகாப்பானது. ஆரோக்கியமானது.

​பால் பொருள்கள்

குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக அல்லது பற்றாக்குறைக்காக ஃபார்முலா பால் அல்லது பசும்பாலை கொடுக்கும் போது நீங்கள் பால் பொருள்களையும் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.


பால் பொருள்களான சீஸ், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், நெய், வெண்ணெய் போன்றவற்றை சிட்டிகை அளவு குழந்தைக்கு கொடுத்து பழகலாம்.

​பருப்பு வகைகள்

குழந்தைக்கு ஒன்பது மாதம் ஆகும் போது பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சூப் வகைகள் கொடுக்கலாம். இது சுவையானது. குழந்தைகளுக்கு சத்து கொடுக்க கூடியது.


ஆறு மாத குழந்தையை டாக்டரிடம் அழைத்து செல்லும் போது செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன தெரியுமா?


குழந்தைக்கு இந்த மாதத்தில் அவர்களது சுவையை அதிகரிக்க சமைக்கும் போது கிராம்பு, கொத்துமல்லித்தழைகள், கடுகு, பெருஞ்சீரகம், வெந்தயம், ஜாதிக்காய், கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மஞ்சள் மற்றும் பூண்டு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டியவை

தேன்,சர்க்கரை, உப்பு, வேர்க்கடலை, சிட்ரஸ் பழங்கள், சுறா வாள்மீன், பாதரசம் நிறைந்த மீன்கள், முழு கொட்டைகள், பற்களை பதம் பார்க்கும் சர்க்கரை வகைகள், பிஸ்கட், இனிப்பு வகைகள், சிப்ஸ் வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்