ஆப்நகரம்

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்?

குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பது என்பது உலகம் முழுக்க நடக்க கூடிய ஒரு மருத்துவ சிக்கலாக உள்ளது, ஆனால் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மிகுந்த கவனிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கான சில வழிமுறைகளை நமக்கு வழங்குகின்றனர். இதன் மூலம் நாம் அவர்களை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க முடியும்.

Samayam Tamil 11 Sep 2021, 5:03 pm
கடந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கொண்டாடப்பட்டது. அதில் ஊட்டச்சத்துடனும் ஆரோக்கியத்துடனும் எப்படி வாழ்வது. வாழ்க்கையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை குறித்து மக்கள் பேசி வந்தனர். அதில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பல விஷயங்களை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Samayam Tamil how to protect premature birth babies in tamil
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்?


குழந்தை என்றாலே நாம் அதன் மீது அளவுக்கடந்த கவனம் கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் அளிக்க வேண்டும். அதன் பிறகு 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதுடன் மற்ற உணவுகளையும் அவர்களுக்கு பழக்கப்படுத்தலாம், ஏனெனில் குழந்தை வளர வளர அதற்கு தாய்ப்பால் போதுமானதாக இருக்காது.

​குறைப் பிரசவம்

37 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும். ஆனால் சில குழந்தைகள் 37 வாரங்களுக்கு முன்பாகவே பிறக்கின்றன. இந்த பிறப்பை நாம் குறை பிரசவம் என்கிறோம். இப்படி பிறக்கும் குழந்தைகளை நாம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

75 சதவீதம் புதிதாக குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. அவர்கள் அதிக ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். எனவே கண்டிப்பாக அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெகுவாக உதவுகிறது.

​என்ன செய்யலாம்

ஒரு பிறந்த குழந்தையின் மூளை மற்றும் பிற உறுப்புகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் முக்கியமானதாக உள்ளது. எனவே குழந்தைக்கு 100 சதவீதம் தாய்ப்பால் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஆண்டி பாடிகளை வழங்குகிறது, மேலும் இது எளிதில் ஜீரணமாகிறது.

ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி மற்றும் அத்தியாவசிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தாய்ப்பால் கொண்டுள்ளது. மேலும் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. எனவே இந்த கொரோனா காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

​எல்லா நேரத்திலும் தாய்ப்பாலை எப்படி வழங்குவது?

உங்கள் மார்பகம் மூலமாக குழந்தைக்கு பாலை வழங்க முடியாத நிலையில் உள்ளீர்கள் எனில் பாலை வெளியேற்றி சின்ன கரண்டியை பயன்படுத்தி பாலை குழந்தைக்கு ஊட்டி விடலாம். வேலைக்கு செல்பவர்கள் எப்படி ஆறு மாத காலம் குழந்தைக்கு பால் ஊட்ட முடியும் என்பது பலரது கேள்வியாக இருக்கலாம். ஒரு வேளை நீங்கள் வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலோ, அல்லது உங்கள் குழந்தையை விட்டு நீண்ட நேரம் விலகியிருக்க வேண்டி இருந்தாலோ, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உங்கள் தாய்ப்பாலை சரியான வெப்பநிலையில் சேமித்து வைக்கவும். இதன் மூலம் நீங்கள் இல்லாத நேரத்திலும் கூட குழந்தைக்கு தாய்ப்பாலை வழங்க முடியும்.

நாம் உண்ணும் உணவில் செயற்கை பதப்படுத்தப்பட்ட பொருள்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி

​தாய்ப்பால் சுரக்காதவர்கள் என்ன செய்யலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சரியான அளவில் தாய்ப்பால் சுரப்பதில்லை, இதனால் குழந்தைகளுக்கு பால் அளிப்பதில் அவர்கள் சிரமத்தை அடைகின்றனர், ஆனால் பிறந்த குழந்தைக்கு கண்டிப்பாக தாய்ப்பால் அளிக்க வேண்டும். இதற்கு மாற்று வழி உள்ளது.

WHO, UNICEF போன்ற மருத்துவ அமைப்புகள் குழந்தைகளுக்கு பேஸ்டுரைஸ் தாய்ப்பாலை வழங்குமாறு பரிந்துரைக்கின்றன. பேஸ்டுரைஸ் தாய்ப்பால் என்பது ஆரோக்கியமான தாயால் தானமாக வழங்கப்பட்ட தாய்ப்பால் ஆகும். இது கெட்டுவிடாமல் இருப்பதற்காக பதப்படுத்தப்பட்டு அடர்த்தியான பாலாக மாற்றப்படுகிறது,

பேஸ்டுரைசன் என்பது பாலில் இருக்கும் நோய்கிருமிகளை அழித்து கிருமிகள் எதுவும் பாதிக்கப்படாமல் அதை பதப்படுத்தி வைத்திருக்கும் செயல்முறை ஆகும். ஒரு பால் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பிறகு பல கடுமையான சோதனைகளுக்கு பிறகே குழந்தைகளுக்கு உகந்தது என சான்றளிக்கப்படுக்கிறது.

​பசும்பாலை தவிர்க்கவும்

சிலர் குழந்தைகளுக்கு பசு அல்லது எருமை பாலை வழங்குகின்றனர். இதை கொடுக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பசுவிடம் உற்பத்தியாகும் பால் கன்றுக்குட்டியின் ஜீரண சக்திக்கு ஏற்றாற் போல உற்பத்தியாகும்.

இதை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அது அவர்களது குடல், வயிறு மற்றும் சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் பசும்பாலில் உள்ள சில கலவைகள் அழற்சி அல்லது தொற்றை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம், மேலும் குழந்தைகள் ஜீரணிக்க கடினமான பாலாக பசும்பால் உள்ளது. இது அவர்களது செரிமான மண்டலத்தை பாதிக்கலாம். எனவே பசும்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.

நாம் உண்ணும் உணவில் செயற்கை பதப்படுத்தப்பட்ட பொருள்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி

​கோடை காலத்தில் பிற திரவங்களை கொடுக்க வேண்டாம்

கோடை காலங்களில் குழந்தைக்கு தாகம் எடுக்குமென சிலர் தண்ணீர் அல்லது வேறு பானங்களை கொடுக்கின்றனர். பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் அல்லது பிற திரவங்களை கொடுக்க தேவையில்லை. அப்படி அவர்கள் தாகமாக உணர்வதாக உங்களுக்கு தோன்றினால் தாய்பாலையே பானமாக கொடுக்கலாம்.

உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் இருக்கின்றன. எனவே குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பாலை தவிர வேறு எந்த உணவையும் அவர்களுக்கு கொடுக்க தேவையில்லை. ஆனால் அவர்கள் 100 சதவீதம் தாய்ப்பாலை பெற வேண்டும்.

ருசியாவும் சாப்பிடணும்... எடையும் குறையணுமா... அப்போ காலை உணவாக இதெல்லாம் சாப்பிடுங்க...

​அதிக கவனம் தேவை

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் கருப்பையில் முழுமையான வளர்ச்சியை அடையவில்லை என்பதால் அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பார்கள், எனவே அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு சின்ன பிரச்சனை அவர்களுக்கு ஏற்பட்டாலும் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து செல்ல வேண்டும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு வீட்டு வைத்தியம் அல்லது அறிவியலால் நிருபிக்கப்படாத கை வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டாம். அது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கலாம். எந்த ஒரு பிரச்சனைக்கும் மருத்துவரை அணுகுவதே சரியான தீர்வாக இருக்கும்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு அடிப்படை தேவை என்பதால் கண்டிப்பாக அவர்களுக்கு அதை அளித்தே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் சீரான தாய்ப்பால் அட்டவணையை உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்