ஆப்நகரம்

வளரும் குழந்தைகளின் மலச்சிக்கலை தீர்க்கும் எளிமையான உணவு முறை, அவசியம் தெரிஞ்சுக்கங்க!


தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைகளுக்கு திட உணவுக்கு மாறும் போது மலச்சிக்கல் வருவது இயல்பானது. உணவு முறைகள் வழியாகவே அதை போக்கவும் முடியும்.

Samayam Tamil 17 Jul 2020, 9:23 pm
பிள்ளைகளுக்கு திட உணவு தரும் போது அம்மாக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு கொடுக்கும் உணவானது செரிக்கப்பட்டு அதிலிருக்கும் சத்துகள் உறிஞ்சப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் கழிவுதான் மலமாக வெளியேறும். இந்த பணியில் தொய்வு உண்டானால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும்.
Samayam Tamil the best food and lifestyle to get rid of children constipation
வளரும் குழந்தைகளின் மலச்சிக்கலை தீர்க்கும் எளிமையான உணவு முறை, அவசியம் தெரிஞ்சுக்கங்க!

நார்ச்சத்து குறைவு, உடலில் நீர் பற்றாக்குறை, முழுமையாக மலம் கழிக்காத உணர்வு, கழிவறை பயம், கடினமான உணவு என எல்லாம் சேர்ந்து வளரும் பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் உண்டாக்கிவிடுகிறது. பிள்ளைகளுக்கு எப்போதாவது மலச்சிக்கல் வந்தால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி வந்துவிடுகிறதே என்று புலம்பும் அம்மாக்கள் இந்த உணவு வகைகளை பின்பற்றினாலே போதுமானது.


​உணவு முறை

குழந்தைகள் தானே என்று அலட்சியம் செய்யாமல் அன்றாட உணவில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவை எடுத்துகொள்ள வேண்டும். பற்கள் வளர்ந்து இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு உணவை நன்றாக வேக வைத்து கொடுக்க வேண்டும். தினமும் கேரட், பீட்ரூட், கீரை, வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்ற உணவுகளை சேர்த்து கொடுக்க வேண்டும்.


இந்த 4 பொருளை பால்ல கலந்து கொடுங்க! பிள்ளைக்கு எதிர்ப்பு சக்தி வேகமா அதிகரிக்கும்!


இதை சிறுதுண்டுகளாக நறுக்கி பொரியலாக கொடுப்பதை தவிர்க்கலாம். ஏனெனில் குழந்தைகள் பற்கள் வளர்ந்திருந்தாலும் மென்று சாப்பிடமாட்டார்கள். உணவை மென்று பழக்கும் வரை வேகவைத்து மசித்து கொடுப்பது தான் நல்லது. அப்போதுதான் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும்.

பழங்கள்

எப்போதாவது குழந்தைகளுக்கு பழங்களை கொடுப்பது தான் பல அம்மாக்கள் செய்யும் தவறு. குழந்தைக்கு தாராளமாக கொடுக்க வேண்டிய பழங்கள் என்று ஆரோக்கியமான பழங்களின் பட்டியலே அதிகம் உண்டு.

அதில் எளிமையான செரிமானத்துக்கு தோதான பழம் என்றால் வாழைப்பழம் சொல்லலாம். வளரும் பிள்ளைக்கு தினம் வாழைப்பழம் கொடுக்கலாம். குறிப்பாக மலைவாழைப்பழம் மிகவும் நல்லது.


உலர் கறுப்பு திராட்சையை நீரில் ஊறவைத்து காலையிலும் மாலையிலும் கொடுக்கலாம். உலர் பழங்களில் அத்திப்பழம், பேரீச்சையும் மிகவும் நல்லது. இவை ஊட்டமும் கொடுக்கும். மலச்சிக்கலையும் தவிர்க்கும். அத்திப்பழத்தையும், பேரீச்சம்பழத்தையும் மசித்து கொடுக்கலாம். இனிப்பு நிறைந்தவை என்பதால் தனியாக இனிப்பு சேர்க்க வேண்டியதில்லை. அதே நேரம் இவை மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கவும் செய்யும்.

​திரவ ஆகாரம்

வளரும் குழந்தைகள் திட உணவுக்கு மாறியதும் திரவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதில்லை. உணவு கவனத்தை விட தண்ணீர் கொடுப்பதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க பழக்க வேண்டும். குழந்தைகள் மறந்தாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க பழகுவது பெரியவர்களிடம் தான் உள்ளது.


காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க பழக வேண்டும். அதே போன்று திரவ ஆகாரம் என்றால் வெறும் பால் மட்டும் இல்லை. நீர் மோர், கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை சாறு என்று குழந்தையின் உடல்நலனுக்கு ஏற்றபடி பருவநிலைக்கேற்ப கவனித்து அதையும் பழக்க வேண்டும்.

உடற்பயிற்சி

குழந்தைகளுக்கு என்ன உடற்பயிற்சி இருக்கபோகிறது என்று நினைக்காமல் பிள்ளைகள் கால்களுக்கு வேலை கொடுக்கும் தசை பயிற்சியான சைக்கிள் ஓட்டுதலை பழக்கப்படுத்தலாம். மூன்று சக்கர வண்டியில் குழந்தையை ஓட்ட பழகினால் குழந்தையின் கால்களுக்கு வலு கிடைக்கும். தொடை தசைகள் தளர்வடையும். செரிமானப்பிரச்சனை சீராகி மலச்சிக்கலையும் தடுக்கும்.

​ஓய்வும் அவசியம்

குழந்தைகள் பெரும்பாலும் விளையாட்டின் மீது அதிக கவனத்துடன் இருப்பார்கள். இரவு நேரங்களிலும் தூங்காமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களை சரியான நேரத்தில் தூங்க வைக்க பழக்க வேண்டும். அப்போதுதான் காலை வேளையில் சரியான நேரத்துக்கு குழந்தைகள் எழவும் செய்வார்கள்.


காலையில் எழுந்ததும் குழந்தைகளை மலம் கழிக்க பழக்க வேண்டும். குழந்தைகள் சோம்பல் பட்டாலும் சரியான நேரத்தில் பழக்கப்படுத்தினால் தாமாகவே பழகிகொள்ளவும் செய்வார்கள்.


குழந்தைக்கு மலச்சிக்கலை தீர்க்கும் இனிப்பு டானிக் தயாரிப்பு முறை, பாதிப்பில்லாம பட்டுன்னு கேட்கும்!


வளரும் பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தவிர்க்க மட்டும் அல்லாமல் வந்தாலும் இந்த பழக்கங்களை கொண்டு தவிர்த்துவிடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்