ஆப்நகரம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள் என்னென்ன?

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு விட்டமின் ஏ, சி மற்றும் போலேட் போன்ற சத்துக்கள் அவசியம். இந்த வகை சத்துக்கள் சில வகை பழங்களில் காணப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் இந்த வகை பழங்களை எடுப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

Samayam Tamil 12 Oct 2020, 11:31 am
கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே இந்த காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களையும் உடல் நல பிரச்சினைகளையும் நீங்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும். உங்களுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும் நேரம் இது.
Samayam Tamil these 5 fruits that must be a part of every pregnancy women diet
கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள் என்னென்ன?


​கர்ப்பகால உணவுகள்

நீங்கள் என்ன தான் சத்தான மாத்திரைகளை சாப்பிட்டால் கூட உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பெறுவது மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தில் நீங்கள் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை பெறுவது மிகவும் அவசியம். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நல்லது. அப்படி பார்க்கும் போது பழங்களில் அத்தியாவசிய விட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறையவே உள்ளன. அந்த வகையில் பார்க்கும் போது உணவில் சேர்க்க வேண்டிய 5 பழங்களை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

​ஆரஞ்சு

ஆரஞ்சு போலேட் அல்லது போலிக் அமிலம் நிறைந்த பழமாகும். இது வளரும் கருவில் உள்ள நரம்புக் குழாய் குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. இதில் விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. இது நம் உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

மாம்பழம்

மாம்பழம் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ இவற்றின் சிறந்த ஆதாரமாகும். குழந்தை பிறக்கும் போது விட்டமின் ஏ குறைப்பாட்டை பெற்று இருந்தால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிற்று போக்கு மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற சிக்கல்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதைப் போக்க கர்ப்ப காலத்தில் மிதமான அளவில் மாம்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பெண்ணுறுப்பு உடலை விட கொஞ்சம் கருமையாக இருக்கா? அதுக்கு என்ன அர்த்தம்...


​வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. அதே மாதிரி இதிலுள்ள விட்டமின் பி6 குமட்டல், வாந்தி போன்ற காலை நேர அறிகுறிகளை போக்க உதவுகிறது.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் செம்பருத்தி பூ... எப்படி... ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்...


​ஆப்பிள்

ஆப்பிள்களில் பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், பெக்டின் மற்றும் விட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. பெக்டின் என்ற ப்ரீபயோடிக் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகிறது.

இளநரை வர ஆரம்பிச்சிடுச்சா... இதோ இந்த வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... முடி கருப்பாகும்...


​பெர்ரி

பெர்ரியில் ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி மற்றும் கோஜி பெர்ரி போன்ற பழங்கள் நிறையவே உள்ளன. இந்த பழங்களில் கார்போஹைட்ரேட், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் போலேட் போன்றவை உள்ளது. இது கர்ப்பமான பெண்களுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்