ஆப்நகரம்

கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மசாலா

Samayam Tamil 15 Feb 2020, 3:02 pm
  • 50mTotal Time
  • 30mPrep Time
  • 234Calories

உருளைக்கிழங்குடன் கொண்டைக்கடலை சேர்த்து செய்யும் மசாலா என்பது எல்லோருக்கும் பிடித்த ரெசிபியாகும். இது செய்வதற்கு எளிதாக இருப்பதோடு பூரி, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடவும் சுவையானதாக இருக்கும். இந்த சென்னா ரெசிபியை வீட்டில் இருந்த படியே ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் நீங்கள் செய்ய முடியும். உங்கள் காலை உணவு சுடச்சுட பூரி என்றால் இந்த சுவையான சென்னா மசாலாவை மிஸ் பண்ணிடாதீங்க. வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை எல்லாம் சேர்த்து காரசாரமான மசாலாக்களையும் சேர்த்து புளிப்புக்கு தக்காளி சாற்றையும் சேர்த்து செய்யும் போது இதன் சுவையே அலாதி தான். இந்த உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை மசாலாவை எப்படி படிப்படியாகச் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

Serving: 2

முக்கிய பொருட்கள்

  • 2 Numbers Aalu
  • 1 கப் kabuli chana
  • 2 Numbers tomato
  • 1 தேக்கரண்டி Ghee
  • 1 தேக்கரண்டி Lal Mirch Powder
  • 1 தேக்கரண்டி coriander powder
  • 1 தேக்கரண்டி kasoori methi powder
  • 1 தேக்கரண்டி garam masala powder
  • 1 உணவு வகைகள் heeng
  • 1 தேக்கரண்டி Jeera
  • 1 தேவையான அளவு Haldi
  • 1 தேவையான அளவு refined oil

பிரதான உணவு

  • 2 Numbers Aalu
  • 1 கப் kabuli chana
  • 2 Numbers tomato
  • 1 தேக்கரண்டி Ghee
  • 1 தேக்கரண்டி Lal Mirch Powder
  • 1 தேக்கரண்டி coriander powder
  • 1 தேக்கரண்டி kasoori methi powder
  • 1 தேக்கரண்டி garam masala powder
  • 1 உணவு வகைகள் heeng
  • 1 தேக்கரண்டி Jeera
  • 1 தேவையான அளவு Haldi
  • 1 தேவையான அளவு refined oil

வெப்பநிலைக்கேற்ப

  • 2 Numbers Aalu
  • 1 கப் kabuli chana
  • 2 Numbers tomato
  • 1 தேக்கரண்டி Ghee
  • 1 தேக்கரண்டி Lal Mirch Powder
  • 1 தேக்கரண்டி coriander powder
  • 1 தேக்கரண்டி kasoori methi powder
  • 1 தேக்கரண்டி garam masala powder
  • 1 உணவு வகைகள் heeng
  • 1 தேக்கரண்டி Jeera
  • 1 தேவையான அளவு Haldi
  • 1 தேவையான அளவு refined oil

How to make: கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மசாலா

Step 1:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தூள், கொஞ்சம் சீரகம் சேர்த்து வதக்குங்கள். சீரகம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி சாறை ஊற்றிக் கிளறிக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து 6-7 நிமிடங்கள் வரை வதக்குங்கள்.

Samayam Tamil make delicious banarasi aloo chana sabzi
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மசாலா


Step 2:

இப்பொழுது மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்துத் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.



Step 3:

மசாலா நன்றாக வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கொள்ளுங்கள். தேவைக்கேற்ப தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள்.



Step 4:

வேக வைத்த உருளைக்கிழங்கில் கொஞ்சமாக எடுத்து மசித்து போட்டால் கிரேவி கெட்டியாக இருக்கும். சுவையும் பிரமாதமாக இருக்கும். இப்பொழுது அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறிக் கொள்ளுங்கள். உங்க சென்னா மசாலா ரெடி, சுடச்சுட பூரி, சப்பாத்தி, நாண் ஏன் சாதத்துடன் கூட தொட்டு சாப்பிடலாம். சுவையும் சூப்பராக இருக்கும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்