பெண்ணின் மனது...
பொதுவாகவே பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது மிகக் கொடூரமான கஷ்டமான விஷயம். அதுவும் அவள் நம்மை காதலிக்கிறாரா இல்லை நட்புடன் பழகுகிறாரா என்பதை புரிந்து கொள்வது சற்று சங்கடமான காரியம்தான். காதல் ஒரு வித்தியாசமானது. பெண்கள் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதத்தை நாம் அறிந்து கொள்ள தனி திறமை வேண்டும்.
ஒரு சில சமயம் பெண்கள் தங்கள் மனதில் உள்ளவற்றை சூசகமாக வெளிப்படுத்துவார்கள். அதை தவறாக புரிந்து கொண்டு மாட்டிவிட்டு முளிப்பது உண்டு. சிறிது நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். நம்முடன் பழகும் பெண் நம்மளை காதலிக்கிறாரா, இல்லை நட்புடன் பழகுகிறாரா என்பது புரியாமலேயே குழம்பிக்கொண்டு பலபேர் இருக்கின்றனர். அப்படி பெண்கள் நம்முடன் நட்புடன் தான் பழகுகிறாரா அல்லது காதலிக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க ஒரு சில வழிகள் உள்ளது அதை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
உங்களை அவள் கவர ஆரம்பிப்பாள்
உங்களுடன் பழகும் உங்களது தோழி ஒருவேளை உங்களை காதலிப்பவர் ஆக இருந்தால், குறிப்பிட்டு இந்த விஷயத்தில் நாம் லேசாக அதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. அவள் உங்களை கவர சில வழிகளில் முயற்சி செய்வாள். அதாவது உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கும் என்றால் அதை செய்வார்.எடுத்துக்காட்டுக்கு உங்களுக்கு சமையலில் ஒரு குறிப்பிட்ட உணவு பிடிக்கும் என்றால், அவர் உங்களுக்காக ஆசையாக அதை கஷ்டப்பட்டு, தெரியவில்லை என்றாலும் கற்றுக்கொண்டு உங்களுக்காக செய்து கொடுப்பார்.
உங்களுடன் நட்புடன் மட்டுமே பழகியிருந்தால் தெரியாத ஒரு உணவை உங்களுக்காக தெரிந்துகொண்டு கஷ்டப்பட்டு அதை செய்து கொடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. உங்களது டேஸ்ட்டை பாராட்டுவார். அல்லது இதெல்லாம் கூடவா நீ சாப்பிடுவாய் என்று நக்கல் செய்வாரே தவிர உங்களுக்காக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுவது கடினம்.
காதல் திரும்ப திரும்ப வருமா? ஒரே நபரை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை காதலிக்க முடியுமா?
உடல் மொழி
வாய்வழியே சில விஷயங்களைக் கூற முடியாவிட்டாலும் உடல் மொழியில் நம்தோழி நம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து, அவர் நம்மை காதலிக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சில வழிகள் உள்ளது.உங்களுடன் நட்புடன் மட்டுமே பழகி இருந்தால் அவர் இயல்பாகவும் மிகவும் எதார்த்தமாகவும் ஒரு தோழியுடன் பழகுவதை போல் மட்டுமே பழகுவார். அவள் உங்களை காதலிப்பதாக இருந்தால் நடவடிக்கைகளில் சிறு மாற்றம் தெரியும் நீங்கள் அவர்கிட்ட நெருங்கும் பொழுது அவர் வெட்கப்படும் வாய்ப்புகள் அதிகம். ஒரு நண்பனை எளிதாக தொட்டு பேசக்கூடிய பெண்கள், காதலிப்பவரை தொட்டு பேச நிச்சயம் கூச்சப்படுவார்கள். அவர்களிடம் உள்ள நானத்தை வைத்தே அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் சொல்வதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்
நீங்கள் அவளிடம் ஒரு இரண்டு வாரங்கள் மூன்று வாரங்களுக்கு முன் கூறிய ஒரு சிறிய தகவலை ஞாபகம் வைத்துக்கொண்டு மீண்டும் அதை உங்களுக்கு அவர் தெரியப்படுத்துவார்.அதாவது நீங்கள் அவரைப் பற்றி புகழ்ந்து ஏதேனும் சொல்லி இருந்தால், அதை ஞாபகம் வைத்துக்கொண்டு பல நாட்களானாலும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு, அதை பற்றி பேச விரும்புவார். நட்புடன் மட்டுமே பழகும் பெண்கள் நீங்கள் கூறும் பல விஷயத்தை மூளைக்கு ஏற்றுவதில்லை. ஒரு சில முக்கியமான விஷயங்களை மட்டுமே ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.
ஆணுறையை எப்படி பயன்படுத்த வேண்டும்?... எத்தனை வயதுக்கு மேல் ஆணுறை வாங்க வேண்டும்?
ஞாபகப்படுத்துவார்
நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை, என்னிடம் காதலை சொன்ன சில பேரை நான் ஒதுக்கி உள்ளேன். எனக்கு அவர்கள் மேல் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்று அடிக்கடி கூறுவார். அதாவது அவர் உங்களை காதலிக்கிறார் என்பதை நேரடியாகக் கூறாமல் சுற்றிவளைத்து கூறுவார். அடிக்கடி இதைச் சொன்னால் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுவார்
உங்களுக்கு என்ன பிடிக்கும். உங்களது கடந்தகால வாழ்க்கை, நீங்கள் கடந்து வந்த பாதை, நீங்கள் விரும்பக்கூடியது, உங்களுக்கு பிடிக்காதது, அதை அனைத்தையும் தேடிப்பிடித்து அறிய விரும்புவார். மேலும் உங்களுக்கு பிடித்தவற்றை உங்களுக்காக செய்வார். நீங்கள் சந்தோஷப்படுவது, பார்த்து அவரும் சந்தோஷப்படுவார். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை அறவே தவிர்க்க முயற்சி செய்வார். இவைகளையும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒரு பெண் உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் சொல்லிய பின் அதை மட்டுமே அதிகம் செய்து வந்தால், அவர்கள் உங்களை விரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம்.
பெண்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடும் சில சுவாரஸ்ய காதல் விளையாட்டுகள் இதோ...