ஆப்நகரம்

அதிகமாக உடலுறவு கொண்டால் பெண்ணுறுப்பு தளர்ந்துவிடுமா?... உண்மை என்ன

பெண்களில் பெண்ணுறுப்பு பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் நிலவி வருகிறது. அதில் ஒன்று தான் பெண்ணுறுப்பு ஆரோக்கியம் என்பது. சிலர் அதிகப்படியான உடலுறுவால் பெண்களின் பெண்ணுறுப்பு தளர்வாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. பெண்ணுறுப்பு தளர்வை போக்க நிறைய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை எவை என அறிந்து கொள்வோம்.

Samayam Tamil 21 May 2021, 2:46 pm
உங்க பிறப்புறுப்பைச் சுற்றி ஏராளமான கட்டுக்கதைகள் நிலவி வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் பிறப்புறுப்பு தளர்வு என்பது. அதிகப்படியான உடலுறவு கொள்வது உங்க பிறப்புறுப்பு பகுதியை தளர்வாக்கி விடும் என்று நிறைய பேர் நம்புகின்றனர்.
Samayam Tamil can your vagina get loose from having too much sex in tamil
அதிகமாக உடலுறவு கொண்டால் பெண்ணுறுப்பு தளர்ந்துவிடுமா?... உண்மை என்ன


​பெண்ணுறுப்பு இறுக்கம்

இந்த சூழ்நிலையில் இறுக்கமான பிறப்புறுப்பு இல்லாததை ஆண்கள் விரும்பமாட்டார்கள் என பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நீங்கள் நிறைய உடலுறவு கொண்டாலும் உங்க பிறப்புறுப்பு தளர்வாகாது.

நாம் பயன்படுத்தும் டம்பான்கள், உடலுறவு, குழந்தை பிறப்பு இவற்றால் உங்க பிறப்புறுப்பு விரிவடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் பிறப்புறுப்பு விரிவடைந்து விடும் என்று கண்டிப்பாக கூற இயலாது. இது சூழ்நிலையின் அடிப்படையில் இறுக்கமாகவும், ஓய்வெடுக்கக் கூடிய பல்வேறு தசைகளால் ஆனது.

​பிறப்புறுப்பு செயல்பாடுகள்

உங்க பெண்ணுறுப்பு பகுதி இயக்கப்படும் போது விரிவடையும், அவை இல்லாத போது மீண்டும் இறுக்கப்படும். பெண்களின் இடுப்பு மாடி தசைகள் போதுமான வலிமையை கொண்டிருக்கவில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒன்று பிரசவம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மற்ற காரணங்களாக மாதவிடாய், அதிர்ச்சிகரமான காயங்கள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவை அடங்கும்.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்பு மாடி உடல் சிகிச்சையின் உதவியுடன் பிறப்புறுப்பு தசைகளின் வலிமையை அதிகரிக்க முடியும்.

பலவீனமான இடுப்பு தசைகள் சிறுநீர் அல்லது மலம் அடங்காமைக்கு காரணமாகின்றன, இது கவலைக்குரிய அறிகுறியாகும். எனவே இது குறித்து உங்க மருத்துவரிடம் பேசுவது மிகவும் அவசியம். எனவே உடலுறுவால் மட்டுமே பிறப்புறுப்பு தசைகள் தளர்வாகும் என்பது ஒரு கட்டுக்கதை ஆகும்.

உண்மையில் இந்த கட்டுக்கதைகள் அனைத்தும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவை. பலருடன் உடலுறவு கொள்வது உங்க பிறப்புறுப்பு தசைகளை தளர்வாக்கும் போன்ற விஷயங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்டவை.

​இடுப்பு தசைகள் பலவீனத்தால் ஏற்படும் பிரச்சினைகள்

இடுப்பு தசைகள் பலவீனத்தால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம். சிறுநீர் கழிக்கும் போது நடுப்பகுதியில் நிறுத்துங்கள். உங்க தசைகளுக்கு சரியான வகையில் பயிற்சி கொடுங்கள்.

உடற்பயிற்சி செய்வதற்கு வசதியான ஒரு நிலையை தேர்ந்தெடுங்கள். குப்புற படுத்துக் கொண்டு உங்க அடிவயிற்று பகுதியை சுருக்கி 5 விநாடிகள் வைத்து இருங்கள். 5 விநாடிகள் ஓய்வெடுங்கள். இதை 5 முறையாவது செய்து வாருங்கள்.

​இடுப்பு தசைகள் உடற்பயிற்சிகள்

உங்க தோள்பட்டையை சுவரை நோக்கி இருக்குமாறு வைத்து நில்லுங்கள். உங்க முழங்கால்களை இறுக்கமாக வைக்க வேண்டாம்.

உங்க தொப்புள் பகுதியை முதுகெலும்பை நோக்கி இழுங்கள். உங்க பின்புற பகுதி தட்டையாக இருக்க வேண்டும்.

உங்க தொப்புள் பகுதியை சுமார் 4 விநாடிகள் இறுக்கி பின்னர் விட வேண்டும்.

இதை நீங்கள் 10 முறை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 5 முறை என செய்து வாருங்கள்.

​பிறப்புறுப்பு கூம்புப் பயிற்சி

உங்க பிறப்புறுப்பு பகுதியில் லேசான கூம்பைக் செருகவும்.

உங்க பிறப்புறுப்பு தசைகளை கசக்கி சுமார் 15 நிமிடங்கள் உள்ளே இருக்கட்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வாருங்கள்.

உங்க வசதியின் அடிப்படையில் கூம்பின் எடையை அதிகரிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்