ஆப்நகரம்

வாசகர் கேள்வி: என்னால் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியவில்லை, என்ன காரணமாக இருக்கும்? மருத்துவர் பதில்!

திருமணமான புதிதில் தாம்பத்யம் பற்றி முழுமையாக அறிந்துவிட முடியாது. ஆனால் தாம்பத்தியம் பற்றி அறியாமல் அது குறித்து யாரிடமும் பேச தயங்கி ஒதுங்கி நிற்கும் போது பிரச்சனையும் தலைதூக்கிவிடுகிறது. புதிதாக திருமணம் ஆன தம்பதியர் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால் தவிர்க்காமல் மருத்துவரை அணுகி சரியான ஆலோசனையை பெற வேண்டும். வாசகர் ஒருவரின் கேள்விக்கு மருத்துவர் அளிக்கும் பதில் இங்கு பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 1 Apr 2023, 9:50 pm
கேள்வி கேட்கும் வாசகர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர், ஊர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படமாட்டாது.
Samayam Tamil உடலுறவு சந்தேகங்கள்


வணக்கம் டாக்டர், எனக்கு வயது 32 ஆகிறது. திருமணம் முடிந்துவிட்டது. உறவின் போது ஆண் உறுப்பு பெண் உறுப்பில் உள்ளே செல்வதில் சிக்கலாக உள்ளது. சமயங்களில் என்னுடைய ஆண் உறுப்பு வளைந்து காணப்படுகிறது. அல்லது உள்ளே செல்லாமல் வெளியே நிற்கிறது. ஏன் இப்படி உள்ளது, அதை தடுக்க என்ன செய்யலாம்.


பதில்
டாக்டர். T.K. காமராஜ், MBBS., M.D., Ph.D., MHSc., D.M.R.D., PG.D.C.G., FCSEPI, Chairman - Indian Association For sexology, Secretary -Asia- Oceania Federation of Sexology.


இது unconsummated marriage என்று சொல்வோம். அதாவது திருமணமாகியும் உறவுகொள்ள முடியாத நிலை என்று சொல்லப்படும். இது 100 திருமணங்களில் 4 திருமணங்களில் இதை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் இந்நிலையில் இருக்கும் தம்பதியர் இதை வெளியில் சொல்லாமல் காலம் கடத்துகிறார்கள். அல்லது விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள். இன்று விவாகரத்து வேண்டி நிற்கும் சென்னை நீதிமன்றத்தில் 75% இத்தகைய காரணம் தான் என்று சொல்லிவிடலாம்.

இந்த நிலைக்கு காரணம் ஆண் அல்லது பெண் அல்ல. இந்த பிரச்சனையை முழுமையாக அதாவது 100% முழுமையாக குணப்படுத்த முடியும். திருமணம் முடிந்த 100 பேர்களில் உடலுறவு நன்றாக இருந்தும் 15 பேருக்கு குழந்தையின்மை பிரச்சனை இருக்கும். இதில் 4 தம்பதியருக்கு உறவில் ஈடுபடுவதில் சிரமம் இருக்கும். இந்த நான்கு பேரில் ஒருவராக உங்களை சொல்லலாம்.

இந்த நிலை முழுமையாக குணப்படுத்த முடியும். உங்களுக்கு விறைப்புத்தன்மை உள்ளதா, உறவின் போது விறைப்புத்தன்மை எப்படி உள்ளது என்பதை முழுமையாக கண்டறிய வேண்டும். முதலில் பாலியல் சிகிச்சை மருத்துவரை அணுகுங்கள், தயக்கமில்லாமல் என்ன பிரச்சனை என்பது பற்றி கூறி ஆலோசியுங்கள். இது முழுமையாக சரி செய்யகூடியதே. சரியான சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல் மூலம் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.

உங்கள் அந்தரங்க கேள்விகள்/சந்தேகங்களை எங்கள் askexperts@timesinternet.in மெயிலுக்கு அனுப்புங்கள். பிரச்சனைகளுக்கு ஏற்ப அனுபவமிக்க நிபுணர்களின் பதில்கள் பகிரப்படும்.
எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்