ஆப்நகரம்

உங்க பர்சனல்ல ஓவரா நண்பர்கள் தலையிடறாங்களா? அப்போ இத செய்ங்க...

எல்லோருக்கும் நண்பர்கள் என்பவர்கள் மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இருப்பினும் நண்பர்கள் நம் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கும் போது அது பெரிய பிரச்சினையாக இருக்கும். அப்படிப்பட்ட நண்பர்களை எப்படி சமாளிப்பது வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Samayam Tamil 17 Jul 2020, 7:16 pm
நண்பர்கள் என்பவர்கள் நம்மிடம் நெருக்கமாக பழகக் கூடிய நபர்கள். நாம் சோகமாக இருந்தாலும் சரி சந்தோஷமாக இருந்தாலும் சரி நண்பர்களிடம் தான் அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். ஆனா எல்லா உறவுகளுக்கும் ஒரு எல்லை உண்டு. நண்பர்கள் உங்க உறவில் அதிகமாக மூக்க நுளைக்கும் போது கோபங்கள் ஏற்படக் கூடும். இதனாலேயே சில விஷயங்களை நாம் நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள முன் வர மாட்டோம்.
Samayam Tamil is too much for a friend interfering with your relationship in tamil
உங்க பர்சனல்ல ஓவரா நண்பர்கள் தலையிடறாங்களா? அப்போ இத செய்ங்க...


சில நண்பர்கள் நம்முடைய பெர்சனல் விஷயங்களில் கூட மூக்க நுழைப்பது உண்டு. காதல் விவகாரங்கள், குடும்ப விவகாரங்கள் போன்றவற்றில் மூக்க நுழைக்க முன் வருவார்கள். அவர்கள் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள் என்பதை எப்படி அறிவது அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.

​உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்

நட்பும் உறவும் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. உங்க சிறந்த நண்பருடன் உங்க உணர்வுகளை பற்றி பேசுவதில் தப்பில்லை. ஆனால் அதை எந்த இடத்தில் கட்டுப்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்க பெர்சனல் விஷயங்களை எல்லாம் நண்பர்களிடம் பகிர்வது உங்களுக்கு தேவையில்லாத விமர்சனங்களையும் அறிவுரைகளையும் கேட்க வழி வகுக்கும்.

​நண்பர்களிடம் இத பேசாதீங்க

உறவில் செயல்படுவது குறித்து நண்பர்கள் பேச வேண்டாம். உங்க உறவில் நீங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நண்பர்கள் சொல்லக் கூடாது. உங்க உறவில் ஆணையிடவோ அல்லது உங்க உறவைப் பற்றிய முடிவுகளை எடுக்கவோ நண்பர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதே போல் தேவையற்ற அறிவுரைகளை வழங்கி உங்க நண்பர்கள் விஷயத்தில் நீங்களும் அறிவுரைகளை வழங்காதீர்கள்.

​தவறுகள் மூலம்

உங்க சொந்த தவறுகளைச் செய்வதன் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்

உங்க சொந்த தவறுகளைச் செய்வதன் மூலம் கற்றுக் கொள்ள முற்படுங்கள். உங்களுக்கு எது சிறந்தது என்பதை உங்க நண்பர்கள் அறிந்திருந்தால் கூட நீங்கள் தவறு செய்வதை தடுக்க அவர்களை அனுமதிக்க கூடாது. ஏனெனில் உங்க நண்பர்கள் உங்க சூழ்நிலையில் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

​நோக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்

உங்க நண்பர்களுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் என்ன நோக்கத்துடன் வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்க நண்பர் உங்க துணைக்கு எதிராக பொறாமையால் உங்களை திருப்புகிறாரா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். கவனமாக இருங்கள். அவரின் நடவடிக்கைகளை கவனியுங்கள். ஏனெனில் இது உங்க நட்பையும் உறவையும் அழிக்கக் கூடும்.

​உறவையும் நட்பையும் சமப்படுத்துங்கள்

உங்க துணையுடன் சில தரமான நேரங்களை செலவிட முற்படுங்கள். தவறவிட்ட நேரங்களை சுட்டிக் காட்டி குற்றம் சுமத்தாதீர்கள். நட்புக்கும் அதே நேரத்தில் உறவுக்கும் சரியான நேரத்தை கொடுத்து சமநிலைப்படுத்துங்கள். இது நீங்கள் விரும்பும் நபர்களுக்காக நேரம் ஒதுக்குவது, அதே நேரத்தில் உங்க நண்பர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்