ஆப்நகரம்

காதலில் நீங்க நல்ல விஷயம்னு நெனச்சு செஞ்சிக்கிட்டு இருக்கிற மோசமான பழக்கங்கள் என்னனு தெரியுமா?

காதலிக்கும் பொழுது நமக்கு இருக்க கூடாத சில குணங்கள், உறவுகள் பிரிவதற்கு காரணமாக இருக்கக்கூடிய சில குணநலன்களை நாம் விட்டு தள்ள வேண்டும். நான் வேண்டிய காரணங்களில் சிலவற்றை தற்பொழுது பார்க்கலாம்.

Samayam Tamil 20 Feb 2020, 11:14 am
காதல் என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். சாதி, மதம், பணம், அந்தஸ்து இப்படி எந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் அது இடம் கொடுக்காது என்பதெல்லாம் உண்மை தான். அதைத் தாண்டி, ஒருவர் மீது நாம் காதல் கொள்ளும்போது, நமக்கென்று சில அடிப்படையான சிறந்த குணங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு கிடையாது. அந்த குணங்கள் தான் நம்மை சிறந்த காதலராக மாற்றும் என்று கூட சொல்லலாம். அதிலும் சில பேர் தங்களிடம் இருக்கிற சில மோசமான குணங்களைத் தான் நல்ல குணம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அதை மாற்றியே ஆக வேண்டும். அப்படி நல்ல குணம் என்று நீங்கள் நினைக்கும் மோசமான குணங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil these 6 toxic relationship habits most people think are normal in tamil
காதலில் நீங்க நல்ல விஷயம்னு நெனச்சு செஞ்சிக்கிட்டு இருக்கிற மோசமான பழக்கங்கள் என்னனு தெரியுமா?


​காதலில் எது முக்கியம்?

பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ காதலிக்கும் போதோ அல்லது நண்பர்களுடன் பழகும் பொழுது எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதில்லை. அதற்கான எந்த படங்களும் இல்லை. உடல் ரீதியான உடலுறவு பற்றி கூட பாடங்கள் கல்லூரிகளில் சில பகுதிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் குணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதற்கு ஆள் இல்லை. அதை நம் அனுபவத்தில் தான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.திருமணமான பின்பு கணவனிடம் அப்படி நடந்துகொள் இப்படி நடந்துகொள், என்று நம் பெற்றோர்கள் நம்மிடம் பல அறிவுரைகளை கூறுவார்கள் ஆனால் அந்த அறிவுரைகளும் 30, 40 வருட பழைய அறிவுரைகள் ஆகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இன்று நடக்கும் தவறுகள் இன்று நடக்கும் ஏமாற்று வேலைகளில் பழைய அறிவுரைகள் செல்லுபடியாகாமல் போய்விடுகிறது. பல விஷயங்களில் அடிபட்டு தெரிந்து பின்புதான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

​இருக்க வேண்டிய குணங்கள்

பலரும் தங்கள் குணங்களில் தங்களுக்கு எந்தவித நண்பர்களோ காதலனும் காதலியும் இல்லாமல் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர் என்று பலரும் பல ஆண்களும் சமூக வலைதளங்களில் சிங்கிள் என்று பெருமையாக கூறிக் கொள்வதற்கு பின்னே பல சோகமான காரணங்கள் இருக்கிறது. பல ஆண்களின் நடவடிக்கைகளால் பெரும்பாலான பெண்கள் ஆண்களை நம்புவதை படிப்படியாக குறைத்துக் கொண்டனர். இதன் தாக்கம் ஆகவே இன்று பல ஆண்டுகளாகவே இருக்க காரணமாக அமைகிறது அவர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொண்டாலும் உள்ளே மனதளவில் நமக்கு ஒரு தோழி இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


விறைப்பு பிரச்சினைக்கு தீர்வு தரும் கிராம்பு எண்ணெய்... ஆனால் இந்த அளவுக்கு மேல் யூஸ் பண்ணக்கூடாது...

​மாறிவிட்ட கலாச்சாரம்

எனவே காதலிக்கும் பொழுது இனிமேலாவது ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் நடவடிக்கைகளை சிலதை அடியோடு அழித்துவிட வேண்டும் சில விஷமத்தனமான நடவடிக்கைகளை சற்று நாம் வெளிக்கொண்டு வரக்கூடாது இதனால் பலரும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். மேலும் பலருக்கு தங்களது வாழ்க்கை முறையை அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது தமிழ்நாட்டில் தென்பகுதியில் இருந்து வந்தவர்களின் கலாச்சாரங்களும் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் வாழ்வோரின் கலாச்சாரமும் பெரிதாக வேறுபடும். இங்கே நகரங்களில் ஆண்கள் பெண்கள் சகஜமாக நட்புடன் வெளியே சுற்றுவது பழகுவது மிகவும் சகஜமான காரியம். ஆனால் நம் தமிழர்களில் இதுபோன்ற விஷயங்கள் மிகவும் குறைவு இதனாலேயே பல வேறுபாடுகள் காதலர்களுக்குள் வந்துவிடுகிறது எனவே பெரிய மனதுடன் அனைத்தையும் நான் யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

​பிரிவுக்கான காரணங்கள்

பல வருடங்களாக உறவு கொள்வதற்கான காரணங்களை பலரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதில் உறவுகள் பிரிவதற்கான காரணங்களில் முக்கியமாக அவர்களின் குணங்களே பெரும் வில்லனாக வந்து நிற்கின்றது. காதலித்த இருவர்களும் பிரிவதற்கு சூழ்நிலைகளையும் தாண்டி பெரும்பாலும் விட்டுக் கொடுக்காத தன்மை, கோபப்படுவது போன்ற பலவிதமான விஷம குணங்களே தங்கள் பிரிவுக்கு காரணமாக அமைகிறது என்று பின்னர் உணர்ந்துள்ளனர். பலரும்.இப்படி உறவுகள் பிரிவதற்கு காரணமாக இருக்கக்கூடிய சில குணநலன்களை நாம் விட்டு தள்ள வேண்டும். நான் வேண்டிய காரணங்களில் சிலவற்றை தற்பொழுது பார்க்கலாம்.


இவ்ளோ நாள் நீங்க கெட்டதுனு நெனச்சிகிட்டு இருந்த ஆனா ரொம்ப ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன தெரியுமா?

​பழைய பிரச்சனைகளை கிளப்புவது:

நம் காதலியோ, காதலனோடு வெளியே செல்லும் பொழுதும் வரும்பொழுதும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரங்களில் பலர் பழைய பிரச்சனைகளைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். இது ஒரு தடுக்கப்பட வேண்டிய ஒரு குணமாகும்.அனைவரது உறவுகளிலும் நல்லவைகளும் நடந்து இருக்கும் கெட்டவைகளும் நடந்திருக்கும். நாமும் பல இடங்களில் தப்பு செய்திருப்போம். அவர்களும் பல இடங்களில் தப்பு செய்திருப்பார்கள். அதை அந்த நேரத்திலேயே விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விட வேண்டும். மனித மனித இயல்பே தவறு செய்வது தான். ஆனால் அதை தெரிந்து கொண்டு போய் விட வேண்டும். உங்களது காதலனோ அல்லது காதலியோ ஏற்கனவே ஏதாவது தப்பு செய்திருந்தால் அதை மீண்டும் நினைத்து விட்டு அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வெளியே செல்லும் பொழுது அதைக் குத்திக் காட்டி பேசுவது மிகவும் தவறான விஷயம் ஆகும். இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுப்பது கிடையாது இந்த குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நடந்தவை மீண்டும் நிகழ்த்த நினைக்கக்கூடாது நடக்கக்கூடிய நல்லது பற்றியே யோசிக்க வேண்டும்.

​மனதில் பட்டதை கூறுங்கள்:

உங்களுக்கு உங்கள் துணையிடம் ஏதாவது பிரச்சனை இருந்தால், அதை நேராக அவரிடம் கூற பழக வேண்டும். அதை விட்டுவிட்டு சைகையில் காட்டுவது உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது இதனால் நீங்கள் கோபப் படுகிறீர்கள் என்று தெரியாமல் உங்கள் துணை பெரிதளவு குழம்பி போயிருப்பார், எங்களுக்கு சில விஷயங்கள் அவர் செய்வது பிடிக்கவில்லை என்றால் அதை அந்த இடத்திலேயே உடனே கூற வேண்டும். ஆனால் அதை உடனே கூறாமலே அவரிடம் கோபப்படுவது. அவர் என்ன பேசினாலும் பேசாமல் அமைதியாக இருப்பது. போன்றவை உங்கள் துணைக்கு மேலும் குழப்பத்தையும் உங்கள் மேல் உள்ள பயத்தையும் அதிகரிக்கும். என்ன செய்தாலும் கோபித்து விடுவாளோ, நம்முடன் பேச மாட்டார்களா என்ற அச்சத்தை உங்கள் துணைக்கு இது மிகவும் அதிகரித்து விடும். எனவே முடிந்த அளவுக்கு உங்கள் துணையின் செயலில் ஏதாவது குறை இருந்தால் அதை அன்பாக அவரிடம் எடுத்துக் கூறி, இதுபோல் இனிமேல் செய்ய வேண்டாம் என் மனது கஷ்டப்படுகிறது, என்று கூறிவிடுவது மிகவும் நல்ல காரியம்.


உங்கள் கணவர் மலட்டுத் தன்மை உடையவராக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பது எப்படி?

​மிரட்டி பணிய வைக்கக்கூடாது:

உங்கள் துணை ஏதாவது தவறு செய்துவிட்டால், அதை அவரிடம் கூறி இதுபோல் இனிமேல் செய்ய வேண்டாம் என்று கூற வேண்டும். அதை விட்டுவிட்டு சிலர் மனதளவில் அவரை மிரட்டுவார். அதாவது இனி இதே போல் இனி செய்தால் நான் உன்னை விட்டு விலகி விடுவேன். நீ இதேபோல் செய்தால் நான் அவரிடம் பொய் சொல்லி விடுவேன்.இதுபோல் அவர்களை நாம் மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்தால் மனதளவில் நம்மை விட்டு அவர் தூரம் சென்று கொண்டே இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இப்படி செய்யும் பொழுது அவரின் சுதந்திரம் பறிபோகிறது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். என்ன செய்தாலும் இப்படி சொல்வதினால் அவர் உங்களிடம் நடிக்க கூடிய சூழல் ஏற்படும் உங்களிடம் இயல்பாக அவரால் இருக்க முடியாது. அவருக்கு ஏதாவது மன வருத்தம் இருந்தால் உங்களிடம் சரியாக பேசவில்லை என்றால் நீங்கள் நீ இப்படியே இருந்துவிட்டால் நான் உன்னிடம் இருப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார். அவர்கள் சிரிப்பது போல் உங்களிடம் நடிப்பார்கள் தவிர, மனதளவில் அவரால் சிரிக்க முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும். இதுபோல் இனிமேல் செய்யாதே இது நல்ல காரியம் அல்ல என்று கூறி புரிய வைக்க வேண்டும்.

​பழி போட கூடாது:

உங்களது காதலனோ அல்லது காதலியோ ஏதாவது தவறு செய்து விட்டால் அவரை திருத்தி அதுபோல் தவறு செய்ய வேண்டாம் என்று கூறுவது ஒரு பக்கம். ஆனால் சிலர் ஏதாவது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் உன்னால் தான் எனக்கு இப்படி ஆயிற்று. நீ இப்படி செய்ததால் தான் எனக்கு இப்படி ஆயிற்று என்று உடனடியாக அவர்கள் மீது பழி போடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். இது மிகவும் தவறான குணமாகும். தன் மீது உள்ள குறையை மற்றவரிடம் பழிபோட்டு அதை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் காதல் வாழ்க்கையில் மட்டுமல்ல என்றுமே நல்ல இடத்திற்கு செல்ல முடியாது. மற்றவர்களின் குறையை திருத்த வேண்டுமே தவிர, நாம் தவறு செய்து கொண்டு அதை மற்றவர்கள் மேல் போட்டு விடுவது மிக தவறான குணங்களில் ஒன்றாகும். இதுபோன்ற குணங்களும் உறவிற்கு நல்ல அடித்தளமாக அமையாது. உங்கள் மேல் உள்ள தவறுக்கு நீங்கள் உங்கள் மேல் பழியை ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர் மேல் பழியை போட்டு விடாதீர்கள். அவர்கள் தவறு செய்தால் அவர்கள் அந்த பழியை ஏற்றுக் கொள்ளட்டும். உங்கள் உணர்ச்சிகளுக்கு என்றுமே மற்றவர்கள் தான் காரணம் என்று சுலபமாக பழி போட்டு விடக்கூடாது.


பிரசவத்துக்குப்பின் பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றமும் வலியும் என்ன?... ஆண்களும் கட்டாயம் தெரிஞ்சிக்கங்க...

பொறாமை படக்கூடாது:

என்றைக்குமே உங்கள் காதலனையோ காதலியையோ பார்த்து பொறாமைப்படும் குணம் இருக்கவே கூடாது. அவர்கள் வாழ்க்கையில் முன்னேறினால் நீங்கள் அதிகபட்சமாக மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர அவர்களை பார்த்து பொறாமை படவே கூடாது. அவர்கள் உங்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். அவர்களே நீங்கள் போட்டியாளராக நினைத்துவிடக்கூடாது. அதை நினைத்து நீங்கள் அவரை பாராட்ட வேண்டும். அவரை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். அவரோட உயர்வுக்கு அவர் உழைப்பு காரணம். உங்களோட உயர்வுக்கு உங்கள் உழைப்பு காரணம். யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாது. என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்