ஆப்நகரம்

Porn Watching Habit : ஆபாச படங்கள் அதிகமாக பார்க்கும்போது ஆண்களிடம் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

ஆபாச படங்கள் பார்ப்பதை பெரும்பாலான ஆண்கள் பார்ப்பதுண்டு. இதுகுறித்த விமர்சனங்களும் சில நேர்மறையான விஷயங்களும்கூட உண்டு. அளவுக்கு அதிகமாக ஆபாசப் படங்களை பார்க்கும்போது ஆண்களுடைய மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். அவை என்ன, என்ன மாதிரியான சாதக பாதகங்களை உண்டாக்கும் என்பவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம் வாங்க...

Authored byமணிமேகலை | Samayam Tamil 10 Apr 2023, 5:12 pm
பெரும்பாலான மனநல மருத்துவர்களும் பாலியல் நிபுணர்களும் ஆபாசப் படங்கள் பார்ப்பதில் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அது உங்களுக்கு பாலியல் ஈர்ப்பை ஏற்படுத்தும் அளவாக இருப்பது நல்லது. ஆனால் அதுவே உங்களை பாலியல் அடிமையாக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. அப்படி அதிகமாக ஆண்கள் ஆபாசப் படங்கள் பார்க்கும்போது பல வகை மாற்றங்களை அடையும்.
Samayam Tamil things need to know about men watching porn
Porn Watching Habit : ஆபாச படங்கள் அதிகமாக பார்க்கும்போது ஆண்களிடம் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?


​ஆபாச படங்கள் பார்க்கும்போது மனதில் என்ன தோன்றும்?

ஆபாசப் படங்கள் பார்ப்பதன் மூலம் ஆண்கள் தங்களுடைய பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதுபோல பல்வேறு கற்பனைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதை ஆண்கள் பெரிதாக விரும்புகிறார்கள். அதே மனநிலையுடன் தங்களுடைய துணையை நெருங்கும்போது அவர்களையும் இவர்களைப் போல எளிதாகக் கிளர்ச்சியடையச் செய்ய வைக்கச் செய்ய முடியும். அதை ஆண்களும் அதிகமாக நம்புகிறார்கள்.

நிஜ வாழ்வில் உடலுறவில் ஈடுபடுவதில் கொள்ளும் ஆர்வத்தை விட ஆபாச படங்கள் பார்ப்பதில் ஆண்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்குமாம்.

​ஆபாச உலகத்துக்குள் மூழ்கிவிடுகிறார்கள்...

ஆண்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதன் மூலமாக பாலியல் ரீதியாக தூண்டப்படுகிறார்கள். அதோடு மனதுக்குள் அதுகுறித்த விஷயங்களே சுழன்று கொண்டிருக்கிறதாம்.

அதேபோல ஆபாச வீடியோக்கள் பார்க்கும்போது ஆண்கள் அந்த படத்துடன் தன்னையும் தன்னுடைய ய துணையையும் அநத படத்தில் பிரதிபலிப்பது போல கற்பனை செய்து கொள்வார்களாம்.

ஆண்களுடைய பாலியல் விருப்பங்கள் பெரும்பாலும் அவர்கள் பார்க்கும் ஆபாசப் படங்கள் பார்ப்பதில் இருந்து எழுவதாக இருக்கிறதாம். அதோடு ஆபாசப் படங்கள் பார்க்கும்போதெல்லாம் இப்போது உடலுறவில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்குமாம்.

​ஆண்கள் புதுப்புது அழகியலை உணர்கிறார்கள்

ஆண்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கும்போது, ஆண்களுடைய அழகியல் தன்மையின் தரம் அதிகரிக்கிறதாம்.

அழகாக விதவிதமான படங்களையும் வீடியோக்களையும் பார்ப்பதால் அன்றாடம் நேரில் தன்னுடைய பார்ப்பதிலும் அணுகுவதிலும் இன்னும் அழகாக எதிர்கொள்வார்களாம்.

அதேபோல தங்களுடைய துணையையும் கூடுதல் அழகியல் சிந்தனையோடும் கவர்ச்சியாகவும் இருப்பதற்குத் தூண்டுகிறார்களாம்.

​ஆண்களால் சில நேரங்களில் நேரடியாக சிந்திக்க முடியாது

பெரும்பாலான ஆண்களுக்கு ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கமிருக்கும். இதுவே அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக ஆபாசப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுடைய மனம் பெரும்பாலான நேரங்களில் அந்த நினைவுகளிலேயே சுழன்று கொண்டிருக்கும்.

நிறைய நேரம் பாலியல் குறித்த எண்ணங்களை நோக்கி மனம் செல்லும். அதனால் வேறு எந்த விஷயம் குறித்தும் அவர்கள் நேரடியாக சிந்திக்கவோ முடிவெடுக்கவோ இயலாமல் போகுமாம். பாலியல் விருப்பங்கள் மேலோங்கும்போது எடுக்கப்படுகிற சில முடிவுகள் சில நேரங்களில் ஆபத்தானதாகவும் இருக்கலாம்.

​ஆண்கள் மெதுவாக சுயக்கட்டுப்பாட்டை இழப்பார்கள்

​அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்க்கும்போது ஆண்களுக்கு மூளை மிக மெதுவாக அதன் அசைவுக்கு ஏற்றபடி ரியாக்ட் செய்யத் தொடங்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக அதற்குள் மூழ்கி போதையாவதாகவும் இதையே அடிக்கடி செய்வதன் மூலம் மூளையின் செயல்பாடே தாமதமாக இருப்பதாகவும் இது அவர்களுடைய முடிவெடுக்கும் ஆற்றலையும் பலவீனப்படுத்துவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதோடு ஆண்கள் மெல்ல மெல்ல தங்களுடைய சுயக்கட்டுப்பாட்டையும் இதனால் இழக்க ஆரம்பிக்கிறார்களாாம்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்