ஆப்நகரம்

மேட்டரிமோனியலில் பார்த்த வரனை சந்திக்கும்முன் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன...

திருமணத்துக்கு வரன் தேடுவதென்றால் முன்பெல்லாம் உறவினர்கள் மூலமோகவோ நண்பர்கள் என தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே அணுகுவார்கள். நன்கு விசாரித்து பெண் கொடுக்கவோ எடுக்கவோ முடிவு செய்வார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் மாறிவிட்ட வாழ்க்கை முறையாலும் மேட்டரிமோனியல் மூலமே எல்லாமே நடக்கின்றன. அப்படி மேட்டரிமோனியலில் வரன் பார்க்கும்போது செய்யக் கூடாத விஷயங்கள் என்னெ்னன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 13 Mar 2023, 8:04 pm
காதல் திருமணத்தில் இருக்கும் பிரச்சினைகள் வேறு. ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில முன்பெல்லாம் பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பாக பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் மேட்டரிமோனியில் வரன் தேடுவது போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க கீழ்வரும் விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Samayam Tamil things to avoid on matrimonial sites before going first meeting
மேட்டரிமோனியலில் பார்த்த வரனை சந்திக்கும்முன் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன...


இலவச ப்ரொபைல்கள்​

மேட்டரிமோனியல் பக்கங்களில் வாழ்க்கை துணையைத் தேடும் பல பேர் நிறைய சிக்கல்களிலும் பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்வதைப் பற்றி நிறைய செய்திகளில் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் நம்பகத்தன்மை இல்லாத நபர்களை அணுகுவது தான்.

மேட்டரிமோனியலில் நம்பகத்தன்மையுடன் நேர்மையாக வாழ்க்கை துணையை தேடுபவர்கள் பணம் செலுத்தி சீரியஸாக தேடுவார்கள். ஆனால் நிறைய இலவச புரைபல்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் ப்ரீ - ப்ரொபைல்களை நம்பாதீர்கள்.

​​சோசியல் மீடியா தகவல்கள்​

எந்த காரணத்தைக் கொண்டும் உங்களுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நண்பர்களாக்கிக் கொள்வது, உங்களுடைய நண்பர்களை அறிமுகப்படுத்துவது, அதில் சாட்டிங்கில் ஈடுபடுவது அல்லது உங்களுடைய சோசியல் மீடியா லாக்-இன் ஐடி போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

​அதிக தகவல்கள் பகிர வேண்டாம்​

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து கூட இருக்கலாம். இரண்டு வீட்டாருக்கும் கூட சம்மதம் இருக்கலாம். ஆனால் திருமணத்துக்கு முன்போ அல்லது நிச்சயதார்த்ததுக்கு முன்பு வரை அவர் உங்களுடைய வாழ்வில் புதிய நபர் தான். அளவுக்கு அதிகமாக உங்களுடைய எந்தவித தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக உங்களுடைய தனிப்பட்ட பர்சனஸ் விஷயங்கள் எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

​பணப் பரிமாற்றம்​

சிறிய அளவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருந்தாலும் பணம் மட்டும் பரிமாற்றம் செய்து கொள்ளாதீர்கள்.

திருமணத்துக்கு முன்பு எக்காரணம் கொண்டும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாமல் எந்தவித பரிசுப் பொருள்களோ பணமோ பரிமாறிக் கொள்ளாதீர்கள்.

​​தெரியாத இடங்களில் சந்திக்காதீர்கள்​

எந்த சூழ்நிலையிலும், தெரியாத இடத்தில் சந்திக்க சம்மதிக்காதீர்கள். மேட்டரிமோனியல் மூலம் அறிமுகமாகும் வரனை முதன் முறையாக சந்திக்கப் போகும்போது சந்திக்கும் இடம் குறித்த எல்லா விவரங்களையும் இரண்டு வீட்டாருக்கும் தெரியப்படுத்தி விட்டு செல்வது அவசியம்.

அதேபோல தனியாக போகாமல் கூட உங்களுடைய நண்பர்கள் யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்