ஆப்நகரம்

விவாகரத்துக்கு பின் அவசரப்பட்டு செய்யவே கூடாத 8 விஷயங்கள் என்னென்ன...

விவாகரத்து என்பது ஆண், பெண் இருவருமே விருப்பப்பட்டு பெற்றுக் கொண்டாலும் கூட விவாகரத்து வாங்கிய பிறகு அதை எதிர்கொள்வதில் உள்ள சிக்கலை இருவருமே சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் அதிலிருந்து வெளியில் வருவதே சிரமமாகி விடும். அதனால் விவாகரத்து வாங்கிய பிறகு சில விஷயங்களை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அப்படி தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று பார்க்கலாம் வாங்க...

Authored byமணிமேகலை | Samayam Tamil 12 Apr 2023, 8:49 pm
விவாகரத்து என்பது இல்லற வாழ்க்கையில் எடுக்கும் மிக முக்கியமான முடிவாகும். அதை எடுப்பதற்கு முன் அவசரப்படக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். ஒருவேளை விவாகரத்து செய்து விட்டால் அதன்பின் இன்னும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அப்படி கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை நாமும் தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil things to never do after divorce in tamil
விவாகரத்துக்கு பின் அவசரப்பட்டு செய்யவே கூடாத 8 விஷயங்கள் என்னென்ன...


​புதிய உறவை தேடுவது

விவாகரத்து ஆனவுடன் உடனடியாக அவசர கதியில் உங்களுடைய வாழக்கையில் அடுத்த துணையைத் தேடாதீர்கள். உங்களுடைய மனதுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள். ஏற்கனவே ஆன நிலைக்கு மீண்டும் வரக்கூடாது என்பதால் உங்களுடைய அடுத்த உறவைத் தேடுவதற்கு முன் கொஞ்சம் நிதானமாக முடிவெடுத்து செயல்படுங்கள்.

​துன்புறுத்துதல்

விவாகரத்து ஆனதும் உங்களுடைய முன்னாள் துணை மீது உங்களுக்கு அதிகப்படியான வெறுப்போ அல்லது கோபமோ இருக்கலாம். அந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

விவாகரத்தான மன உளைச்சலில் உங்களுடைய முன்னாள் துணையை எதற்காககவும் வார்த்தைகளாலோ உடல் அளவிலோ துன்புறுத்தல் செய்யாதீர்கள்.

​தவறாக பேசுவது


பெரும்பாலானோர் செய்யும் தவறு இதுதான். நிறைய பேர் விவாகரத்து ஆனதும் தங்களுடைய முன்னாள் துணையைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் முன் அப்படி பேசுவது கூடவே கூடாது. அது குழந்தைகளின் மனதிலும் வெறுப்பையும் வன்மத்தையும் உண்டாக்கும்.

​குழந்தைகளை சிப்பாய்களாக பயன்படுத்துவது

விவாகரத்துக்குப் பிறகு ஆண், பெண் இருவருமே செய்யும் தவறுகளில் ஒன்று தான் இது. தங்களுக்குள் முரண்பாடு வந்தபிறகு தாங்கள் ஏதாவது பேசிக் கொள்ளவோ விவாதிக்கவோ தேவையிருப்பின் அதை குழந்தைகள் மூலம் சொல்லி அனுப்புவது உண்டு.

அது மிக மிகத் தவறு. உங்களுடைய பிரச்சினைகளுக்கு இடையே குழந்தைகளை சிப்பாய்களைப் போல உள்ளே நுழைக்காதீர்கள்.

​எதிர்மறை கருத்து

விவாகரத்துக்குப் பிறகு இந்த பிரச்சினையும் நிறைய பேர் எதிர்கொள்கிறார்கள். சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்வது கூடவே கூடாது.

முன்னாள் துணை சோசியல் மீடியாக்களுக்கு போடும் பதிவுகள், புகைப்படங்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவிப்பது, அவர்களை எரிச்சலடையச் செய்யும் விஷயங்களைச் செய்வது போன்றவற்றை செய்யாதீர்கள்.

​தனிமைப் படுத்திக்கொள்ளுதல்


விவாகரத்துக்குப் பிறகு துணையின்மீது இருக்கும் கோபம் மற்றும் வெறுப்பின் காரணமாக நீங்களே உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பலாம். அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பிரிந்து தனித்திருக்க முயற்சி செய்வதை தவிர்த்திடுங்கள். தனிமை இனனும் உங்களுடைய மனநிலையை மோசமாக்க விரும்பலாம்.

​ஆல்கஹால்

பெரும்பாலான ஆண்கள் இதைதான் செய்கிறார்கள். காதல் தோல்வியோ, துணை பிரிந்துவிட்டாலோ அல்லது விவாகரத்து ஆகிவிட்டாலோ உடனே அந்த பிரச்சினையை மறப்பதற்காக குடிக்கிறேன் என்று அளவுக்கு அதிகமாக மது அருந்த ஆரம்பித்துவிடுவார்கள்.

அது உங்களுடைய மனதை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லுமே தவிர பிரச்சினைகளைக் குறைக்கப் போவதில்லை. அதனால் விவாகரத்து ஆனதும் அந்த பிரச்சினையை மறக்க குடிக்காதீர்கள்.

​தலைகீழ் மாற்றம்

விவாகரத்து ஆனதும் அல்லது துணையை விட்டு பிரிந்ததும் பலரும் தங்களுடைய குணங்களையே மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.

என்னப்பா ஆளே தலைகீழா மாறிட்ட என்று சொல்லுகின்ற அளவுக்கு மாற்றங்கள் இருக்கலாம். அது நல்ல மாற்றமாக இருந்தால் பரவாயில்லை. முடிந்தவரையில் நீங்கள் நீங்களாகவே இருப்பது தான் நல்லது.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்