ஆப்நகரம்

ஆண்கள் உடலுறவின்போது லைட் எரியணும்னு ஆசைப்படுவாங்களாம்... ஏன்னு தெரியுமா? இதுதான் காரணம்...

உடலுறவு என்றாலே அது விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் நடக்கும் சம்பவம் என்று தான் எல்லோருடைய கற்பனைகளும் விரியும். ஆனால் தம்பதிகள் பலருக்கும் உடலுறவு நேரத்தில் இருளில் இல்லாமல் விளக்குகளை எரிய விடுவதையே அதிகம் விரும்புகிறார்களாம். அது ஏன்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே நாமும் தெரிஞ்சிப்போம் வாங்க...

Authored byமணிமேகலை | Samayam Tamil 9 May 2023, 4:53 pm
குடும்ப உறவில் சந்திக்க வேண்டிய எல்லா பிரச்சினைகள், குடும்ப நலன், வேலைகள் என எல்லாவற்றையும் தாண்டி, கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் மனம் திறந்து நினைத்தபடி நடந்து கொள்ளும் இடம் என்றால் அது படுக்கையறை தான். அந்த படுக்கையறையில் தங்களுக்குப் பிடித்தது போல இருக்கும்போது விளக்குகளை அணைப்பதை சில சமயங்களில் அவர்கள் விரும்புவதில்லை.
Samayam Tamil why couple prefer lights on during love making
ஆண்கள் உடலுறவின்போது லைட் எரியணும்னு ஆசைப்படுவாங்களாம்... ஏன்னு தெரியுமா? இதுதான் காரணம்...


​விருப்பம் மிகுதி

உடலுறவின் போது விளக்கை அணைத்து விட்டால் இருவரும் இன்பமாக இருப்பார்கள். ஆனால் ஒருவருக்கொருவர் என்ன செய்கிறார்கள் என்பது தெரிவதில்லை. ஆனால் நிறைய ஆண்களுக்கு உறவின் போது தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்களே பார்த்து ரசிக்க விரும்புகிறார்கள்.

தங்களுடைய நடவடிக்கைகளை தாங்களே பார்த்து ரசிக்கவும் அதற்கு தன்னுடைய பார்ட்னர் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை பார்த்து ரசிப்பதை ஆண்கள் ரசிக்கி நினைக்கிறார்கள். அதனால் உடலுறவு சமயத்தில் விளக்கை எரிய விடுவதை விரும்புகிறார்கள்.

​துணையின் உணர்ச்சிகளை ரசிக்க

பெண்களுக்கு உறவின்போது குறிப்பிட்ட ஹாட் ஸ்பாட் என்று சொல்லப்படுகிற ஜி ஸ்பாட் பகுதியில் மென்மையாகத் தீண்டுதல் மிகப் பிடிக்குமாம்.

அதனால் ஆண்கள் பெண்ணுடலில் விளையாடும்போது தன்னுடைய துணை அதை எப்படி ரசிக்கிறார், அது தான் நடந்து கொள்வது அவருக்குப் பிடித்திருக்கிறதா, அவர் எவ்வளவு இன்பமாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆண்கள் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் தான் விளக்குகளை அணைக்காமல் அதை ரசிக்க ஆண்கள் விரும்புகிறார்கள்.

​பாதுகாப்பு உணர்வு

உடலுறவின் போது விளக்கை எரிய விட்டிருப்பது இளம் ஜோடிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வு தோன்றுவதாகக் கூறப்படுகிறது.

அதிலும் பாதுகாப்புக்காக ஆணுறை அணிகிற போது அது வெளியே வராமல் இருக்கவும் கிழிந்து விடாமல் அல்லது ஆண் அதை எடுத்து விடாமல் இருப்பதற்கு விளக்கு வெளிச்சம் தேவைப்படுவதாக பெண்கள் நினைக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி தங்களைச் சுற்றியுள்ள பொருள்கள் சுத்தமாகவும் எதுவும் உடைந்துவிடாமல் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ள விளக்குகள் தேவை என்று பெண்கள் கருதுகிறார்கள்.

​உணர்ச்சிகளைத் தூண்டும்

ஆண், பெண் ஒவ்வொருவருக்குமே பாலியல் ஈர்ப்பும், உணர்ச்சிகள் தூண்டப்படுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பாலுணர்வு தூண்டுதல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதில் ஆண்கள் சிலருக்கு தங்களுடைய துணையின் முகத்தையும் அவருடைய பாலியல் ஈடுபாட்டையும் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டே இருந்தால் பாலுணர்வு மேலும் அதிகரிக்குமாம்.

விளக்கு வெளிச்சத்தில் தங்களுடைய துணையின் முகத்தையும் அவருடைய உணர்வு நிலைகளையும் பார்த்து அதில் ஈர்க்கப்படுவதை ஆண்கள் மிகவும் ரசிக்கிறார்கள்.

​உடலை ரசிப்பது

கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது, உடல் கவர்ச்சியும் முக்கியமானதாக இருக்கும்.

ஒவ்வொருவரும் அவரவர் உடலை பெரிதாக ரசித்துக் கொள்ள மாட்டார்கள். பிடிக்கவும் செய்யாது. ஆனால் இருவருடைய உடல் எப்படி இருந்தாலும் சரி இருவரும் அதை ரசிக்க விரும்புகிறார்கள். அதன்மீது ஒரு ஈர்ப்பு உண்டாக வேண்டுமென்றால் விளக்கை அணைக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

​முன்விளையாட்டை ரசிக்க

உடலுறவுக்கு முன்பு முன் விளையாட்டுக்கள் மிக அவசியம். அப்போது இருவரும் வாய்விட்டு மகிழ்ச்சியாக சிரிக்க ஆரம்பிப்பார்கள். இந்த மகிழ்ச்சியை இருவரும் ஒருவர் முகத்தில் மற்றவர் பார்த்து ரசிக்க விரும்பும்போது எதற்காக இருள் அதை மறைக்க வேண்டும். அதனால் விளக்குகளை அணைக்காமல் முன் விளையாாட்டு, இணைப்பு, ஆடை களைதல் என விளக்கின் ஒளியில் மகிழ்ந்திருக்க நிறைய பேர் விரும்புகிறார்களாம்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்