ஆப்நகரம்

புத்தர் இயேசுவை மோதவிட்ட கேமுக்குத் தடை!

ஸ்டீம் என்ற கேமிங் இணையதளத்தில் கடவுள்கள் மோதிக்கொள்ளும் விதமாக கேம் இருந்ததால் அதனை தடை செய்துள்ளனர்.

TNN 10 Sep 2017, 12:27 pm
ஸ்டீம் என்ற கேமிங் இணையதளத்தில் கடவுள்கள் மோதிக்கொள்ளும் விதமாக கேம் இருந்ததால் அதனை தடை செய்துள்ளனர்.
Samayam Tamil malaysia blocks steam over fight of gods game
புத்தர் இயேசுவை மோதவிட்ட கேமுக்குத் தடை!


ஸ்டீம் என்ற இணைதளம் புகழ்பெற்ற கேமிங் நிறுவனங்களில் ஒன்று. அதன் இணையதளத்தில் உள்ள ஒரு கேமின் பெயர் ஃபைன் ஆஃப் காட்ஸ் (Fight of Gods). இந்து, புத்தம், கிறிஸ்துவம், சீக்கியம் போன்ற பல மதங்களுக்கு உரிய கடவுள்கள் இந்த கேமில் சண்டை போட்டுக்கொள்வார்கள். உதாரணத்திற்கு, புத்தரும் இயேசுவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது போல இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த மலேசிய அரசு ஸ்டீம் இணையதளத்தை அந்நாட்டில் தடைசெய்துள்ளது. அந்நாட்டு மதங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக்குப் பின் இந்த இணையதளம் அந்நாட்டில் முடங்கியுள்ளது.



இந்த கேம் உணர்வுப்பூர்வமான விஷயத்தில் விளையாடுவது முற்றிலும் ஏற்கத்தகாதது என்று அந்நாட்டு மதங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.எஸ். மோஹன் ஷான் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி