ஆப்நகரம்

அரவக்குறிச்சி தேர்தல்: முஸ்லீம்கள் எதிர்ப்பு!

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் ஜூன் மாதம் தேர்தல் நடத்த, அங்குள்ள இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

TNN 22 May 2016, 5:16 pm
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் ஜூன் மாதம் தேர்தல் நடத்த, அங்குள்ள இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil muslims in aravakurichi constituency opposes to conduct election
அரவக்குறிச்சி தேர்தல்: முஸ்லீம்கள் எதிர்ப்பு!


வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாகப் புகார் எழுந்ததன் அடிப்படையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தலை, ஜூன் மாதம் 13ம் தேதிக்கு, தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் மாதத்தில் ரம்ஜான் நோன்பு காலம் வர உள்ளதால், அப்போது தேர்தல் நடத்துவது ஏற்புடையதல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி