ஆப்நகரம்

ஏடிஎம்களை திறக்காதீங்க; முதல்ல சாப்ட்வேர் அப்டேட் பண்ணுங்க: எச்சரிக்கும் ஆர்.பி.ஐ

ஏடிஎம் சாப்ட்வேர்களை அப்டேட் செய்த பின்னர், அவற்றை திறக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது.

TNN 15 May 2017, 12:54 pm
மும்பை: ஏடிஎம் சாப்ட்வேர்களை அப்டேட் செய்த பின்னர், அவற்றை திறக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil open atms only after software update says rbi
ஏடிஎம்களை திறக்காதீங்க; முதல்ல சாப்ட்வேர் அப்டேட் பண்ணுங்க: எச்சரிக்கும் ஆர்.பி.ஐ


உலகின் பெரும்பாலான நாடுகளில் இணையத்தில் 'WannaCry ransomware' என்ற வைரஸ் தாக்கி வருகிறது. அதனால் கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்டு, முக்கிய தகவல்களை லாக் செய்து விடுகிறது. அந்த தகவல்களை பெற வேண்டும் என்றால், பிட் காயின்களை அளிக்குமாறு வலியுறுத்திகிறது. அது விண்டோஸ் ஓ.எஸ்சில் புகுந்து எளிதாக ஆக்கிரமித்து விடுகிறது. இதற்கிடையில் வைரசிற்கான பேட்ச் எனப்படும் நிவர்த்தியை விண்டோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை உடனடியாக அனைவரும் அப்டேட் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 2.25 லட்சம் ஏடிஎம்கள்(60%) விண்டோஸ் ஓ.எஸ்சில் செயல்படுவதால், அவற்றை உடனடியாக அப்டேட் செய்யுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அப்டேட் செய்யாவிட்டால் ஏடிஎம்களை திறக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் முக்கிய தகவல்களை முடக்கி, யாரும் பயன்படுத்த முடியாமல் லாக் செய்து விடுகிறது. இந்நிலையில் ஆந்திராவில் 102 கம்ப்யூட்டர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

BAI: The RBI has directed banks to operate their ATM networks only after machines receive a Windows update to protect them from a malware impacting systems across the world.

அடுத்த செய்தி