பமீலா ஆண்டர்சன் உலக புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை மற்றும் மாடல் அழகி. இவர் ஏற்கனவே 3 முறை திருமண உறவிலும், ஒரு முறை லிவிங்-டுகெதர் உறவிலும் இருந்துள்ளார். தற்சமயம், சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், இன்னும் ஒரு முறை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இச்செய்தி கடந்த சில நாட்களாக காட்டுத்தீ போல இவரது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.