ரீல் லைஃபில் ஒன்றாக நடித்த ரியல் லைஃப் 'அப்பா - மகன்' தமிழ் நடிகர்கள்!

Samayam Tamil 9 Jun 2020, 11:11 am
  • விக்ரம் - த்ருவ்

    தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அப்பா- மகன் காம்போ இது. ஆதித்ய வர்மா அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலேயே தங்களது கெமிஸ்ட்ரியை நிரூபித்திருந்தனர் விக்ரம் - த்ருவ். நேற்று (08-06-2020) வெளியான சியான்60 திரைப்பட அப்டேட்டில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இணைந்து நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வ தகவலாக வெளியானது. இந்த அப்டேட் தமிழ் திரைப்பட ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

  • சிவாஜி கணேசன்

  • நடிகர் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், தனது தந்தை நடிகர் திலகம் சிவாஜியுடன் நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளார். சரித்திர நாயகன், தராசு, நீதிபதி, சங்கிலி, வம்சவிளக்கு, வெள்ளை ராஜா என பல படங்களில் சிவாஜி - பிரபு காம்போ இணைந்து நடித்திருந்தனர்.

  • சத்யராஜ் - சிபிராஜ்

  • மேலும் படங்கள்!Download App
  • சிவாஜி - பிரபு காம்பிவிற்கு பிறகு, அதிக படங்களில் சேர்ந்து நடித்த ரியல் லைஃப் அப்பா - மகன் காம்போ என்றால் அது சத்தியராஜ் - சிபிராஜ் தான். ஜோர், வெற்றிவேல் சக்திவேல் , கோவை பிரதர்ஸ், மண்ணின் மைந்தன், ஜாக்சன் துரை போன்ற படங்களில் இவர்கள் சேர்ந்து நடித்திருந்தனர்.

  • விஜய் சேதுபதி - சூர்யா

  • நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதியின் குழந்தை பருவ வேடத்தில் சிறப்பு தோற்றமாக நடித்த சூர்யா. சிந்துபாத் படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

  • ஜெயம் ரவி - ஆரவ் ரவி

  • டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாக, அவரது ரியல் லைஃப் மகன் ஆரவ் ரவியே நடித்து அசத்தியிருந்தார்.

  • கார்த்திக் - கௌதம் கார்த்திக்

  • திரு இயக்கத்தில் மிஸ்டர். சந்திரமௌலி என்ற படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும், அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் சேர்ந்து நடித்திருந்தனர்.

  • முரளி - அதர்வா முரளி

  • அதர்வாவின் அறிமுக படமான பானா காத்தாடி படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார் முரளி. ஆனால், பானா காத்தாடி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மாரடைப்பு காரணமாக நடிகர் முரளி இறந்துவிட்டார்.

  • எஸ்.வி. சேகர் - அஸ்வின் சேகர்

  • மிகப்பெரிய வெற்றிப்படமாக மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ்.வி சேகர் - அஸ்வின் சேகர் இணைந்து நடித்தனர்.

  • கருணாஸ் - கென் கருணாஸ்

  • கென் கருணாஸ் அசுரன் படத்தில் தனது நடிப்பாற்றல் மூலம் ரசிகர்களை ஈர்த்திருந்தார். சார்லஸ் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற திரைப்படத்தில் கருணாஸ் - கென் கருணாஸ் சேர்ந்து நடித்திருந்தனர்.

  • தம்பி ராமய்யா - உமாபதி

  • மணியார் குடும்பம் திரைப்படத்தில் தம்பி ராமய்யா - உமாபதி சேர்ந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்கியதும் தம்பி ராமய்யா அவர்கள் தான்.

  • நாசர் - லுத்புதீன்

  • ஏ.எல். விஜயின் இயக்கத்தில் சைவம் படத்தின் நாசர் - லுத்புதீன் இணைந்து நடித்திருந்தனர்.

  • பாக்யராஜ் - சாந்தனு

  • வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் பாக்யராஜ் - சாந்தனு அப்பா - மகன் வேடத்தில் நடித்திருந்தனர். பிறகு, சித்து +2 படத்திலும் இவர்கள் சேர்ந்து நடித்திருந்தனர்.

  • விஜய் - சஞ்சய்

  • தளபதி விஜய் வேட்டைக்காரன் படத்தின் அறிமுக பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடனமாடி இருந்தார் சஞ்சய். மேலும், தெறி படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் மகள் சாஷா சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

  • எஸ்.ஏ. சந்திரசேகர் - விஜய்

  • சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடித்திருந்தார். இதே படத்தில் சந்திரசேகரும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பாண்டியராஜன் - ப்ரித்விராஜன்

  • கைவந்த கலை படத்தை எழுதி இயக்கி இருந்தார் பாண்டியராஜன். இந்த படத்தில் பாண்டியராஜன் - ப்ரித்விராஜன் சேர்ந்து நடித்திருந்தனர்.

  • விஜயகுமார் - அருண் விஜய்

  • சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி படத்தில் விஜயகுமார் - அருண் விஜய் ஒன்றாக நடித்திருந்தனர்.

  • சிவகுமார் - சூர்யா

  • உயிரிலே கலந்தது படத்தில் சிவகுமாரும் - சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர்.

  • நாகேஷ் ஆனந்த்பாபு

  • கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் என்ற படத்தில் நாகேஷ் மற்றும் ஆனந்த் பாபு ஒன்றாக நடித்திருந்தனர்.

  • தியாகராஜன் - பிரசாந்த்

  • ஷாக் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசாத்தும் அவரது தந்தை தியாகராஜனும் இணைந்து நடித்திருந்தனர்.

  • டி . ராஜேந்தர் - சிம்பு

  • காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு ஹீரோவாகவும், டி.ராஜேந்திர் வக்கீல் தாதா என்ற பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.