நஸ்ரியா - ஃபகத் ஃபாஸிலின் அழகான காதல் கதை!

Samayam Tamil 13 Apr 2020, 2:15 pm
  • ரீல் 2 ரியல்!

    பெங்களூர் டேஸ் எனும் மலையாள படத்தில் நடிக்கும் போதுதான் இவர்கள் மத்தியில் ரொமான்ஸ் தொற்றி கொண்டது என்று அறியப்படுகிறது.

  • சூப்பர்ஹிட்

    பெங்களூர் டேஸ் 2014ம் ஆண்டு அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியாகி, அந்தாண்டின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

  • கணவன் - மனைவி

    பெங்களுர் டேஸ் திரைப்படத்தில் ஃபகத் ஃபாஸில், நஸ்ரியா கணவன் - மனைவி வேடத்தில் நடித்திருந்தனர்.

  • நிச்சயம்!

    இந்த படம் வெளியான சில மாதங்களில், இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • மேலும் படங்கள்!Download App
  • திருமணம்!

    அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இந்த ஜோடிக்கு திருமணமானது.

  • நித்தியா மேனன்

    நஸ்ரியா - ஃபகத் ஃபாஸில் ஜோடி காதலித்து திருமணம் செய்து கொள்ள தானே காரணம் என்று கூறி இருந்தார். இதற்கு காரணம், நஸ்ரியாவிற்கு அந்த ரோலை பரிசீலினை செய்தவர் நித்யா மேனன் தானாம்.

  • நஸ்ரியா ஆஃபர்

    ஒரு முறை பேட்டியில், ஃபகத், நஸ்ரியா என்னை நோக்கி நடந்து வந்து, திருமணம் செய்து கேட்டார், என்று கூறி இருந்தார். மேலும் கூறிய ஃபகத், தன்னை பாதுகாப்பாக, அன்பாக பார்த்துக் கொள்வேன், மீதமுள்ள வாழ்க்கை முழுக்க என்று நஸ்ரியா கூறியதாக குறிப்பிட்டிருந்தார். இதுபோல ஒருபோதும் எந்த பெண்ணும் தன்னிடம் பேசியதில்லை என்று ஃபகத் கூறி இருந்தார்.

  • வயது இடைவேளை

    2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட போது, ஃபகத் வயது 32, நஸ்ரியா வயதி 19. இவர்கள் இடையே 13 வயது இடைவேளை.

  • கர்ப்பம்?

    2017ம் ஆண்டு நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதை செய்திகள் வெளியாகின. ஆனால், பிறகு தனது இன்ஸ்டா அக்கவுண்ட் மூலம் அது வெறும் புரளி என்று கூறினார் நஸ்ரியா.

  • ஓய்வு!

    இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாள் ஓய்வெடுத்து கொண்டனர். பிறகு, இன்ஸ்ட்டா அக்கவுண்டில் நிறைய காதல் தருணங்களை பகிர்ந்தனர்.

  • 4 ஆண்டுகள்

    4 ஆண்டுகளுக்கு பிறகு கூடே எனும் படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. இந்த திரைப்படமும் அஞ்சலி மேனன் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • திருமணத்திற்கு பிறகு ரோமன்ஸ்...

    நஸ்ரியா, "திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க மாட்டேன், ரொமான்ஸ் காட்சிகளில் தோன்ற மாட்டேன், காதல் கதாபாத்திரம் ஏற்க மாட்டேன் என்றெல்லாம் கூறினார்கள்.எல்லா நடிகர்களும் இப்படியாக தான் செய்வார்கள் என்பது மக்கள் மத்தியிலான கருத்தாக இருக்கிறது.

  • ஃபகத் காதல்

    மலையாள திரைத்துறையில் சிறந்த காதல் ஜோடியாக காணப்படுகிறார்கள் இவர்கள். தனது வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார் நஸ்ரியா என்று பெருமையாக கூறி இருக்கிறார் ஃபகத்.

  • ஓரியோ

    தங்களது திருமண வாழ்வை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த ஜோடி. இவர்கள் பாசமாக ஓரியோ எனும் நாயை வளர்த்து வருகிறார்கள். மார்ச் 5ம் தேதி ஓரியோ ஐந்தாவது வயதை கொண்டாடியது.