ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் மோடி அலையில் காணாமல் போன காங்கிரஸ்!!

நாடே இன்று எதிர்பார்த்து காத்திருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்த மாநிலத்தின் வெற்றி பாஜகவுக்கு முக்கியம். இந்த மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால்தான் தன்னுடைய பலத்தை மாநிலங்களவையில் பாஜக அதிகரித்துக் கொள்ள முடியும்.

TOI Contributor 11 Mar 2017, 10:28 am
நாடே இன்று எதிர்பார்த்து காத்திருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்த மாநிலத்தின் வெற்றி பாஜகவுக்கு முக்கியம். இந்த மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால்தான் தன்னுடைய பலத்தை மாநிலங்களவையில் பாஜக அதிகரித்துக் கொள்ள முடியும்.
Samayam Tamil pm modi crushed others in up election
உத்தரப்பிரதேசத்தில் மோடி அலையில் காணாமல் போன காங்கிரஸ்!!

இந்த நிலையில்தான் பாஜக உத்தரப்பிரதேச மாநில தேர்தலை சந்தித்தது. இந்த மாநிலத்தை வாழ்வா? சாவா? என்ற ரீதியில்தான் எடுத்துக் கொண்டது பாஜக. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த மாநிலத்தில் பிரதமர் மோடி 14 முறை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்த மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால்தான், மாநிலங்களவை உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ள முடியும். அதன் மூலம் எந்த தங்கு தடையும் இன்றி தங்களது மசோதாக்களை அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது உத்தரப்பிரதேச வெற்றியின் மூலம் இவர்களுக்கு கிடைக்க உள்ளது.

தற்போதைய நிலவரம் வரைக்கும் ஆட்சி அமைப்பதற்கான பலத்தையும் மீறி பாஜகவின் வெற்றி சென்று கொண்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்தக் கூட்டணி தற்போது வெறும் 74 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக தற்போது 266 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடிக் கட்சி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த மாநிலத்தில் இழுபறி ஆட்சி, தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்படப் போவதில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோடி என்ற அலையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் காணாமல் போனது என்றுதான் பார்க்க வேண்டியதாக உள்ளது.

PM Modi crushed others in UP election

அடுத்த செய்தி