ஆப்நகரம்

கேரளாவில் நடக்கும் சமரச அரசியல்: மோடி

கேரளாவில் தற்போது சமரச அரசியல் நடைபெற்று வருகிறது என அம்மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

PTI 8 May 2016, 4:23 pm
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது சமரச அரசியல் நடைபெற்று வருகிறது என அம்மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil politics of compromise between udf and ldf in kerala modi
கேரளாவில் நடக்கும் சமரச அரசியல்: மோடி


கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்ப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் தற்போது ஒருபுதிய அரசியல் முறை உருவாகியுள்ளது. அதுதான், ஒத்துப்போகும் அரசியல், சமரச அரசியல், ஊழலில் ஈடுபடும் ஒருவரை மற்றவர் காப்பாற்றும் ஒப்பந்த அரசியல்.

இங்குள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிகள் இதற்கான ஒப்பந்த விதிமுறைகளை ஏற்படுத்தி வைத்துள்ளன. நீங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யுங்கள், நாங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்கிறோம் என அவர்கள் ஒப்பந்தம் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் வன்முறையில் ஈடுபடுவதாக இங்குள்ள காங்கிரசார் கூறுகின்றனர். ஆனால், அதே காங்கிரசார் மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு போகும்போது கம்யூனிஸ்ட்களால் மட்டும் தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்கிறார்கள். இப்படி, ஒரேநேரத்தில், இரண்டு இடங்களில் இருவேறு மாதிரியாக பேசும் இவர்களை நீங்கள் நம்புகிறீர்களா.

கேரளாவில் யார் அரசமைக்க போகிறார்கள் என்பதற்கான தேர்தல் அல்ல இது. கேரளாவை யார் காப்பற்றப்போவது., இங்குள்ள இளைஞர்களுக்கு யார் வேலைவாய்ப்பளிக்க போவது யார் என முடிவு செய்யும் தேர்தல் என்றார்.

அடுத்த செய்தி