ஆப்நகரம்

ஐயோ என அலறும் ஜியோ வாடிக்கையாளர்கள்!

ஜியோ மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் திருட்டுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 10 Jul 2017, 1:29 pm
ஜியோ மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் திருட்டுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil reliance jio probing possible data leak of millions of subscribers
ஐயோ என அலறும் ஜியோ வாடிக்கையாளர்கள்!


அனைத்து மொபைல் சேவைகளையும் இலவசமாகக் கொடுத்த வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டி ஜியோவுக்கு இப்போது சோதனைக்காலம் ஆரம்பித்துவிட்டது. 120 மில்லியன் வாடிக்கையாளார்களை தன்வசப்படுத்திய அந்நிறுவனம் கட்டண சேவையை கடந்த ஏப்ரலில் தொடங்கியது. அதிலிருந்து கணிசமான வாடிக்கையாளர்கள் ஜியோவை கைவிட்டுவிட்டார்கள்.

இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளதாக திடுக் தகவல் வெளியாகியுள்ளது அந்நிறுவனத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஜியோ சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்ட தேதி, ஆதார் எண், வாடிக்கையாளர் முகவரி என அத்தனை விவரங்களையும் ஜியோ நிறுவனம் திருட்டுபோக விட்டிருக்கிறது என்று தகவல் பரவி வருகிறது.



இந்தத் தகவல் உண்மை என்றால் நாட்டிலேயே மிகப்பெரிய டேட்டா திருட்டு இதுவாகத்தான் இருக்கும் என்று தொழிலநுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்று ஜியோ மறுத்துள்ளது. வாடிக்கையாளார்கள் ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களும் பாதுகாப்பாகவே உள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற வதந்தி பரப்பப்படுவது குறித்து புகார் அளித்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

அடுத்த செய்தி