ஆப்நகரம்

ஜியோ வாடகை கார் சேவை: பீதியில் ஓலா, உபெர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ கேப்ஸ் என்ற வாடகை கார் சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 27 Feb 2017, 5:03 pm
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ கேப்ஸ் என்ற வாடகை கார் சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil reliance jio to launch jio cabs servies in 2017
ஜியோ வாடகை கார் சேவை: பீதியில் ஓலா, உபெர்


ரிலையன்ஸ் ஜியோ நிறுனவனத்தின் வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்களால் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் உள்ளிட்ட பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இப்போது, வாடகை கார் நிறுவங்களையும் கதிகலங்க வைக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக நம்பகத்தக்க தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவபவர்களுக்காக புதிய வாடகை கார் சேவை தொடங்க அந்நிறுவனம் திட்டம் தீட்டிவருகிறது. முதல் கட்டமாக 600 கார்களுடன் இச்சேவை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜியோ கேப்ஸ் என்ற இச்சேவை பற்றிய அறிவிப்பு வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு வெளியான 6 மாதங்களுக்குள் ஜியோ கேப்ஸ் சேவை நடைமுறைக்கு வரும் என்றும் தெரியவந்துள்ளது. ஜியோவின் இந்த புதிய திட்டத்தைப் பற்றி அறிந்த முன்னணி வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபெர் ஆகியவை வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.

அடுத்த செய்தி