ஆப்நகரம்

ரிலையன்ஸ் ஜியோ “நியூ இயர் ஆஃபர்” கொடுப்பதில் சிக்கல்!

ரிலையன்ஸ் ஜியோ “நியூ இயர் ஆஃபர்” கொடுப்பதில் சிக்கல்!

Gadgets Now 27 Dec 2016, 8:19 pm
டெல்லி : விதிமுறைகளை மீறி மேலும் 30 நாட்களுக்கு ஆஃபர்களை நீட்டித்தது ஏன் என்று டிராய் அமைப்பானது ஜியோ நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil reliance jios happy new year offer in trouble
ரிலையன்ஸ் ஜியோ “நியூ இயர் ஆஃபர்” கொடுப்பதில் சிக்கல்!


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளுடன் 90 நாட்களுக்கு ஜியோ சேவையை “ஜியோ வெல்கம் ஆஃபர்” என்ற பெயரில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை பல பயனாளிகள் உபயோகித்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி “ஹேப்பி நியூ இயர் ஆஃபர்” என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இந்த இலவச சேவை நீட்டிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்தது. ஏற்கனவே உள்ள பயனாளிகள் தொடர்ந்து ஆஃபரை பெறுவார்கள் என்றும் கூறினர். ஆனால் டிராய் விதிமுறைப்படி 90 நாட்களுக்கு மேல் எந்த ஆஃபர்களையும் அறிவிக்கக்கூடாது. இதனையடுத்து டிசம்பர் 20ஆம் தேதி டிராய் ரிலையன்ஸ் ஜியோவிற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 3ஆம் தேதிக்கு பிறகு ஜியோ தங்களுடைய ஆஃபரை நீட்டிக்க கூடாது என்று கொடுத்த மனுவை அடுத்து டிராய் அமைப்பானது ஜியோவிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிப்பை வெளியிடும் போதே முகேஷ் அம்பானி, புதிய பெயரில் நியூ இயருக்கு ஆஃபரை அறிவிக்கிறோம் என்று கூறி அறிவிப்பை வெளியிட்டார். வெல்கம் ஆஃபரில் இருந்து நியூ இயர் ஆஃபர் முற்றிலும் வேறுபட்டது. வெல்கம் ஆஃபரில் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது என்று ஜியோ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

ஆனால் விதிமுறைகளை மீறும் ஜியோ மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிராய் அமைதி காக்கிறது என்று பாரதி ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்குள் ஜியோ நிறுவனம் டிராயுக்கு விளக்கம் அளித்து பதில் அளிக்க வேண்டும். டிசம்பர் 18ம் தேதி வரை 65 மில்லியன் பயனாளிகள் ஜியோ சேவையை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி