ஆப்நகரம்

மயிலை கபாலீஸ்வரருக்கு 7.5 கிலோ தங்க நாகாபரணம்.!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மூலவர் கபாலீஸ்வரருக்கு, காஞ்சி சங்கராச்சாரியார்கள், 7.5 கிலோ எடையுள்ள தங்க நாகாபரணத்தை சமர்ப்பித்தனர்.

TNN 8 Dec 2017, 10:55 am
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மூலவர் கபாலீஸ்வரருக்கு, காஞ்சி சங்கராச்சாரியார்கள், 7.5 கிலோ எடையுள்ள தங்க நாகாபரணத்தை சமர்ப்பித்தனர்.
Samayam Tamil 7 5 kilo gold ornaments for mylai kapaleeswarar temple
மயிலை கபாலீஸ்வரருக்கு 7.5 கிலோ தங்க நாகாபரணம்.!


பழமையான கோயில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாடப்பெற்ற திருத்தலமாகும். இங்கு எழுத்தருளியுள்ள கபாலீஸ்வரருக்கு ரூ.2.75 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ எடை கொண்ட தங்க நாகாபரணம் சமர்ப்பிக்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதற்காக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகிய இருவரும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேற்று காலை வருகை புரிந்தனர். அவர்களுக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். இதையடுத்து, கோயிலின் அலங்கார மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நாகாபரணத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர், அந்த நாகாபரணம் மண்டபத்தில் இருந்து மூலவர் சன்னதிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

மூலவர் சன்னதியில் கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சங்காராச்சாரியார்கள் தங்க நாகாபரணத்தை அணிவித்தனர். பின்னர், தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவிற்கு பல்வேறு முக்கிய நபர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்